சுவரொட்டிகள் மற்றும் வளங்கள் | Posters and resources

உங்கள் மொழியிலேயே அறிவிப்புகளும் வளங்களும் கிடைக்கின்றன

‘கோவிட்-19 பாதுகாப்புத் திட்ட-வரைவு’ (COVID-19 Protection Framework) சூழல்களை நடைமுறைப்படுத்துவதில் வர்த்தகங்கள், வேலைத்தலங்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவுதவியாக இருக்க நாங்கள் பல வகைப்பட்ட மூலவளங்களை அளிக்கிறோம்.

எமது சின்னங்கள், வடிவுருக்கள், சுவரொட்டிகள், காணொலிகள், மற்றும் சமூக ஊடக விளம்பரத் துண்டுகளை நீங்கள் எம்முடைய ‘மூலவளப் பொதி’ (Resource Toolkit)-யில் இருந்து வலையிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளலாம்.

எமது ‘ப்ளூ-ஸ்டார் வலைமேடை’ (Bluestar Portal) (external link) -யில் இருந்து எமது மூலவளங்கள் மற்றும் பிணையங்களின் இலவச அச்சிடப்பட்ட நகல்களையும் நீங்கள் ‘ஆர்டர்’ செய்யலாம்.

சுவரொட்டிகள் மற்றும் மூலவளங்களை வலையிறக்கம் செய்தல் – ‘மூலவளப் பொதி’ (Resource Toolkit)

  1. உங்களுக்கான கணக்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள toolkit.covid19.govt.nz (external link)  (external link)எனும் வலைத்தலப் பக்கத்திற்குச் சென்று ‘Login/Register’ எனும் பொத்தானை அழுத்துங்கள்.
  2. நீங்கள் தேடும் மூலவளம் சம்பந்தப்பட்ட முக்கியமான வார்த்தைகளை உள்ளிட ‘தேடல் பகுதி’ (search field)-யைப் பயன்படுத்துங்கள். இந்த ‘வலை-மேடை’ (platform) ஆங்கிலத்தில் உள்ளது. மொழிபெயர்க்கப்பட்ட மூலவளங்களை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்தி உங்களுடைய தேடலை மேற்கொள்ளுங்கள் (உதாரணமாக: face coverings, contact tracing, testing, etc). கிடைக்கக்கூடிய அனைத்து மூலவளங்களையும் காண, நீங்கள் உங்களுடைய மொழியிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
  3. Search ‘தேடு’ என்பதை நீங்கள் அழுத்திய பிறகு ‘கீழ்-விழு-வடிப்பான்’ (drop-down filter)-களைப் பயன்படுத்தி, உங்களுடைய தேடல் முடிவுகளை நீங்கள் குறுகியதாக்கிக் கொள்ளலாம். 
  4. உங்களுக்குத் தேவைப்படும் விடயத்தை நீங்கள் கண்டுபிடித்ததும், அதை வலையிறக்கம் செய்யுங்கள், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், அல்லது நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட விடயங்களை இறக்கம் செய்துகொண்டிருந்தால் அதை ஒரு ‘வலைக்-கூடை’ (basket)-யில் இட்டு வையுங்கள்.

இலவச அச்சிடப்பட்ட தாள்களுக்காக ‘ஆர்டர்’ செய்தல் - ‘ப்ளூ-ஸ்டார் வலைமேடை’ (Bluestar Portal)

உங்களுடைய வர்த்தகம், சமூக அமைப்பு, அல்லது நிகழ்ச்சி ஆகியவற்றிற்கான இலவச ‘பிணை’(collateral)களை எமது இணைய-வழிப் பட்டியல் மூலம் ‘ஆர்டர்’ செய்யுங்கள், அத்துடன் மூலவளங்கள் உங்களுடைய வர்த்தகத்திற்கு அல்லது சமூகக் குழுவிற்கு நேரடியாகக் கொண்டுவரப்பட்டு சேர்ப்பிக்கப்படுமாறு செய்யுங்கள்.

‘ப்ளூ-ஸ்டார் வலைமேடை’ (Bluestar Portal (external link)) -இற்குச் செல்லுங்கள்.

Last updated: