உங்கள் குழந்தையின் ஃபைசர் தடுப்பூசிக்குப் பிறகு: | After your child’s Pfizer vaccination

அனைத்து மருந்துகளையும் போலவே, ஃபைசர் தடுப்பூசியும் ஒரு சில குழந்தைகளுக்கு பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். இது உடலின் வழக்கமான எதிர்வினையாகும் மற்றும் இது வேக்சின் வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது.

நோய்த்தடுப்பு என்பது டாமரிக்கியை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு முக்கியமான வழியாகும், அதாவது சன் கிரீம் அல்லது சீட் பெல்ட் அணிவது போன்றது. இது உங்கள் டாமரிக்கியை பல கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் உங்கள் வானாவ் மற்றும் சமூகத்தில் நோய் பரவுதலை நிறுத்துகிறது.

COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட குழந்தைக்கு இரண்டு டோஸ் சைல்டு ஃபைசர் தடுப்பூசி தேவை. இரண்டு டோஸ்களும் 8 வார இடைவெளியில் கொடுக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் சில காரணங்களுக்காக, உதாரணமாக உங்கள் பிள்ளை நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சையைத் தொடங்குகிறது எனில், இடைவெளியை குறைந்தபட்சம் 21 நாட்களுக்குக் குறைக்கலாம்.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஃபைசர் தடுப்பூசி இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக, பக்க விளைவுகள் மிதமானவை, நீண்ட காலம் நீடிக்கவில்லை, மற்றும் மற்ற வழக்கமான பக்க விளைவுகளைப் போலவே இருந்தன.

சாத்தியமான பக்க விளைவுகள்

அனைத்து மருந்துகளை போன்றே தடுப்பூசி பெற்ற 1-2 தினங்கள் பிறகு குழந்தைகளுக்கு மிதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். இது வாடிக்கையானது மற்றும் அவர்கள் உடல் வைரசை எதிர்த்து போராடுவதைக் கற்றுக்கொள்கிறது என்பதன் அறிகுறி.

பெரும்பாலான பக்க விளைவுகள் நீண்ட காலம் நீடிக்காது மற்றும் பலருக்கு அவை அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்கள் பிள்ளை எந்த பக்க விளைவுகளையும் எதிர்கொள்ளவில்லை என்றால் அதுவும் இயற்கையே, மற்றும் தடுப்பூசி வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.

தெரிவிக்கப்பட்ட மிக பொதுவான எதிர்வினைகள் பின்வருமாறு:

  • ஊசி குத்திய இடத்தில் வலி அல்லது வீக்கம்/சிவத்தல்
  • சோர்வாக அல்லது அயர்வாக உணர்தல் 
  • தலைவலி
  • தசை வலிகள் மற்றும்/அல்லது மூட்டு வலி 
  • குளிர்/காய்ச்சல் 
  • குமட்டல் 

உங்கள் குழந்தை அசௌகரியமாக உணர்ந்தால் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்:

ஊசி குத்திய இடத்தில் ஒரு குளிர்ந்த, ஈரமான துணியையோ அல்லது ஐஸ் பேக்கையோ சிறிது நேரத்திற்கு வையுங்கள் 

அவர்கள் ஓய்வெடுப்பதையும் அதிகளவில் திரவங்கள் பருகுவதையும் உறுதிபடுத்துங்கள்

முதல் நிகழ்வில் பாராசிட்டமால் அல்லது அறிகுறிகள் தொடர்ந்தால் ஐப்யூபுரூஃபனை வழங்கவும் 

உங்களுக்குத் தெரியாவிட்டால் அல்லது உங்கள் பிள்ளையின் அறிகுறிகள் மோசமடைந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள் அல்லது 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஒவ்வாமை எதிர்வினைகள்

தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம் ஆனால் அவை முற்றிலும் அரிதானவை. இவற்றை சமாளிக்க நியூசிலாந்து தடுப்பூசி அளிப்பவர்கள் பயிற்சிப் பெற்றிருக்கிறார்கள். உங்கள் பிள்ளை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது உங்களுக்கு கவலைகள் இருந்தாலோ உங்கள் தடுப்பூசியாளருக்கு தெரியப்படுத்துங்கள், ஏனெனில் தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் விரைவாக ஏற்படுகின்றன. இதனால்தான் உங்கள் குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு 15 நிமிடங்கள் வரை கண்காணிக்கப்படுகிறது.

மருத்துவ கவனிப்பை நாடுங்கள்

சில பக்க விளைவுகள் கடுமையான ஒவ்வாமை எதிர்வினை அல்லது இருதயத்தின் வீக்கம் (மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ்) போன்ற தீவிரமான தன்மை கொண்டவை ஆனால் மிகவும் அரிதானவை.

மயோகார்டிடிஸ் மற்றும் பெரிகார்டிடிஸ் ஆகியவை ஃபைசர் தடுப்பூசியின் மிகவும் அரிதான ஆனால் தீவிர பக்க விளைவுகள். மருத்துவ பரிசோதனைகளில், 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் எந்த பாதிப்புகளும் காணப்படவில்லை, இருப்பினும் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து வயதினருக்குமான அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

உங்கள் பிள்ளை இந்த புதிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றால், நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும், குறிப்பாக இந்த அறிகுறிகள் நீங்கவில்லை என்றால்:

  • அவர்கள் மார்பு அல்லது கழுத்தில் இறுக்கம், கனம், அசௌகரியம் அல்லது வலி
  • சுவாசிப்பதில் சிரமம் அல்லது உங்கள் சுவாசத்தை இருத்திக்கொள்வது
  • மயக்கமாக அல்லது தலை கிறுகிறுப்பது போன்று அல்லது தலை லேசானது போன்று உணர்தல்
  • படபடத்தல், துடித்தல் அல்லது இதயம் இடித்தல் அல்லது அது 'துடிக்கத் தவறுவது' போன்ற உணர்வு. 

எதிர்வினைகளைப் பற்றி தெரிவித்தல்

COVID-19 தடுப்பூசியைத் தொடர்ந்து உங்கள் டாமரிக்கியின் எதிர்விளைவுகளைப் பற்றி தெரிவிப்பது முக்கியம் , இதன்மூலம் தடுப்பூசியின் பாதுகாப்பை எங்களால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

உங்கள் பிள்ளை எதிர்கொள்ளும் பக்கவிளைவுகளை நீங்கள் report.vaccine.covid19.govt.nz (external link) என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் அல்லது பக்க விளைவுகளைப் பற்றி விவாதிக்க விரும்பினால், உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குநரிடம் பேசலாம். ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க ஒரு தடுப்பூசிதான் எதிர்வினையை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கு உறுதியாக தெரிந்திருக்க வேண்டியதில்லை.

உங்கள் டாமரிக்கியின் COVID-19 தடுப்பூசி சந்திப்பிற்குப் பிறகு, ஏதேனும் எதிர்வினைகள் குறித்த ஒரு குறுகிய கருத்துக்கணிப்பை பூர்த்தி செய்யுமாறு ஒரு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்பு ஒன்றை நீங்கள் பெறலாம். கருத்துக்கணிப்பில் பங்கேற்பது நியூசிலாந்தில் தடுப்பூசி பற்றி மேலும் அறிய உதவுகிறது. கருத்துக்கணிப்பு தன்னார்வ அடிப்படையில் அமைந்தது மற்றும் நீங்கள் எந்த நேரத்திலும் இதிலிருந்து விலகலாம். நீங்கள் உரைக்கு இலவசமாக பதிலளிக்கலாம். கருத்துக்கணிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை Medsafe.govt.nz/COVID-safety-reporting/ (external link)

இல் காணலாம். உங்கள் குழந்தையின் அறிகுறிகள் குறித்து உங்களுக்கு உறுதிபடத் தெரியாவிட்டால், 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனை அழைக்கவும்.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பு பற்றி உங்களுக்கு உடனடியாக ஏதேனும் கவலை இருந்தால், 111 -ல் அழைக்கவும். மற்றும் உங்கள் டாமரிக்கி COVID-19 தடுப்பூசி எடுத்துக்கொண்டது பற்றி சொல்வதை உறுதி செய்யவும். இதனால் அவர்கள் சூழ்நிலையை முறையாக மதிப்பிட முடியும்.

தடுப்பூசிகள் நம்மைக் காக்கும்

தடுப்பூசிகள் அனைத்து வயதினரையும் தட்டம்மை மற்றும் ஃப்ளூ போன்ற பிற தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. உங்கள் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரிடம் பேசுவதன் மூலம் நீங்களும் உங்கள் வானாவும் உங்களுடைய தடுப்பூசிகள் பற்றிய மிக சமீபத்திய தகவலை பெறுங்கள்.

தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா போன்ற பிற COVID-19 அல்லாத தடுப்பூசிகளை COVID-19 தடுப்பூசியுடன் எடுத்துக்கொள்ள எந்த கட்டுப்பாடும் இல்லை. எனவே இந்த தடுப்பூசிகளை நீங்கள் தாமதப்படுத்த தேவையில்லை.

மேலும் தகவல்களுக்கு health.govt.nz/immunisation (external link) -க்கு வருகைத் தரவும்.

Last updated: at