‘என் கோவிட் பதிவு’ | My Covid Record

மை கோவிட் ரெக்கார்டு என்ற இணையதளத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி கண்டறிந்து அங்கு உங்கள் COVID-19-பதிவுகளைப் பற்றிய தகவலை அணுகலாம்.

mycovidrecord.health.nz (external link) என்பது இந்த இணையதளத்தின் முகவரி. இதை மடிக்கணிணி, மேசைகணிணி அல்லது ஸ்மார்ட்போன் ஆகியனவற்றின் மூலம் அணுகலாம்.

மை கோவிட் ரெக்கார்டு (My Covid Record) (எனது கோவிட் பதிவேடு) பற்றி

மை கோவிட் ரெக்கார்டு என்பது உங்கள் COVID-19 தடுப்பூசி பதிவேடுகளைச் சரிபார்க்கவும், கோருவதற்கும், நீங்கள் எடுத்துக்கொண்ட கோவிட் சோதனைகளைப் பார்ப்பதற்கும் உங்களை அனுமதிக்கும் இணையதளமாகும். இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள்:

 • உங்கள் COVID-19 தடுப்பூசி பதிவுகளின் நகலைக் கோரலாம் - இதில் தொகுதி எண்கள், டோஸ் எண், தடுப்பூசி பெயர் மற்றும் உற்பத்தியாளர் ஆகியவை அடங்கும். மேலும் நீங்கள் கோரிய அனைத்து வெளிநாட்டு தடுப்பூசிகளும் உங்கள் சுகாதார பதிவில் சேர்க்கப்படும். இது வேறு யாருக்காவது தேவைப்பட்டால், 0800 222 478 என்ற எண்ணிற்கு அழைக்கவும்
 • நீங்கள் சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று ஒன்றை கோரலாம் - இது வெளிநாட்டில் உங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க உதவும். உங்களுக்காக அல்லது வேறொருவருக்காக நீங்கள் கோரலாம்.
 • உங்கள் COVID-19 சோதனை முடிவுகளைப் பார்க்கவும்
 • உங்களுடைய விரைவு நோயெதிர்ப்பி சோதனை முடிவுகளை பதிவேற்றுங்கள். உங்களுக்காக அல்லது வேறு ஒருவருக்காக சோதனை முடிவைச் சேர்க்கலாம்.

எவ்வாறு மை கோவிட் ரெக்கார்டிற்கு (My Covid Record) பதிவு செய்வது

நியூசிலாந்தில் உள்ள 12 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்த மை கோவிட் ரெக்கார்டிற்கு (My Covid Record) பதிவு செய்யலாம்: உங்கள் மை கோவிட் ரெக்கார்டு உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை வேறு யாருடனும் பகிர வேண்டாம்.

 1. mycovidrecord.health.nz (external link) என்ற இணையதளதிர்க்கு சென்று பதிவு செய்யவும் என்பதில் அழுத்தவும் அல்லது கிளிக் செய்யவும். இது ஒரு எனது ஆரோக்கிய கணக்கு (My health Account) ஒன்றை உருவாக்கும் செயல்முறையை தொடங்குகிறது – இது உங்கள் ஆரோக்கிய தகவலை ஆன்லைனில் அணுக உங்களை அனுமதிக்கிறது. இந்த கணக்கை துவக்க உங்களுக்கென ஒரு பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும். ஒரு கணக்கை பின்வரும் முறைகளில் சரிபார்க்க முடியும்;
  • ஒரு நியூசிலாந்து ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் அல்லது குடியுரிமைச் சான்றிதழ் அல்லது ஒரு ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் அல்லது பிறப்புச் சான்றிதழ் மூலம்
  • உங்கள் சுகாதார வழங்குநரின் விவரங்களை உள்ளிடுவது மூலம்
  • ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட 'ரியல் மீ (உண்மையில் நான்)' கணக்கு
 2. மை கோவிட் ரெக்கார்ட் (My Covid Record) இல் உங்கள் எனது ஆரோக்கிய கணக்கு (My health Account) அல்லது 'உண்மையில் நான்' இன் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழையுங்கள்.
 3. நீங்கள் மை கோவிட் ரெக்கார்டில் (My Covid Record) வெற்றிகரமாக உள்நுழைந்தவுடன் உங்கள் Covid-19 பதிவுகளை நீங்கள் பார்வையிட முடியும்.

உங்கள் பதிவுகளில் ஏதேனும் தவறு இருந்தால் விவரங்களை மாற்றும் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம், அல்லது help@mycovidrecord.min.health.nz என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

ஒரு பாஸையோ பதிவையோ கோருவதில் பிரச்சினை இருந்தால் நீங்கள் 0800 222 478 என்ற எண்ணை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை அழைக்கலாம்

மற்றவர்களின் விரைவு நோயெதிர்ப்பி சோதனையை மேலேற்றுவதில் பிரச்சினை இருந்தால்
நீங்கள்: 0800 555 728 என்ற எண்ணை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை அழைக்கலாம்

Last updated: at