சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று | International Travel Vaccination Certificate

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பொழுது ‘கோவிட்-19 தடுப்பூசித் தகுநிலை’ குறித்த ஆதாரத்தினை உங்களால் எவ்வாறு காண்பிக்க இயலும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்’ (International Travel Vaccination Certificate) றினைப் பற்றி

நியூசிலாந்து நாட்டில் இடப்பட்ட ‘கோவிட்-19’ தடுப்பூசியின் எவ்வொரு மருந்தளவையும் பெற்றுக்கொண்டுள்ள 12 வயதிற்கு மேற்பட்ட எவரொருவரும் ‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று’ (International Travel Vaccination Certificate) ஒன்று வேண்டுமெனக் கேட்கலாம்.

இந்த சான்றுகள் ‘ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்று’ (EU Digital COVID Certificate)-இன் தரநிலைகளுக்கு ஏற்ப அமைந்தவையாக இருக்கும். சில நாடுகளுக்கு வேறு விதமான தேவைப்பாடுகள் இருக்கலாம். பயணம் புறப்படுவதற்கு முன்பாக, நீங்கள் பயணம் செய்யவிருக்கும் நாட்டின் தேவைப்பாடுகள் என்ன என்பதைத் தயவுசெய்து சோதித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உள்-நுழைய விரும்பும் நாட்டின் வழமையான குடிவரவுச் செயல்பாட்டு முறைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டியும் இருக்கும். பயணம் புறப்படுவதற்கு முன்பாக, உங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்று காண்பிக்கும் சோதனை முடிவு ஒன்றைப் போன்ற கூடுதல் தேவைப்பாடுகளும் இருக்கலாம்.

நீங்கள் பயணம் செய்யும்போது ‘ஸ்கேன்’ செய்யப்படும் ‘க்யூ-ஆர்’ குறியீடு ஒன்று உங்களுடைய ‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்’ (International Travel Vaccination Certificate) றில் இருக்கும். நியூசிலாந்தில் நீங்கள் இட்டுக்கொண்ட ‘கோவிட்-19’ தடுப்பூசிகளைப் பற்றிய விபரங்களை இது உள்ளடக்கியிருக்கும் உங்களுடைய தொலைபேசி போன்ற சாதனம் ஒன்றில் நீங்கள் இந்த சான்றினை சேமித்துக்கொள்ளலாம், அல்லது இதன் பிரதி ஒன்றை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம். இந்த சான்று 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

உங்களுடைய ‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்’ (International Travel Vaccination Certificate) றில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுடைய கடவுச்சீட்டுடன் ஒத்திருக்கவேண்டியது அவசியம். சான்றினை நீங்கள் வேண்டும் பொழுது உங்களைப் பற்றிய விபரங்களை நீங்கள் மீண்டும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

உங்களுடைய சான்றிற்கான வேண்டுகோள் விடுப்பது விரைவானதும், எளிதானதுமாகும் 24 மணி நேரத்திற்குள்ளாக உங்களுடைய சான்று உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ‘என் கோவிட் பதிவு’ (My Covid Record) மூலமாக உங்களுடைய சான்றினைப் பெறுவது மிகவும் விரைவான வழி.

உதவி அல்லது ஒத்தாசைக்கு ‘சுகாதாரத் திணைக்கள’ அணியினருடன் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

மின்னஞ்சல்: help@mycovidrecord.min.health.nz
தொலைபேசி: 0800 222 478 (திங்கள் முதல் வெள்ளி, காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை)

My Covid Record (எனது கோவிட் பதிவேடு)

‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று’ (International Travel Vaccination Certificate) ஒன்றைப் பெறுவது எப்படி

  1. My Covid Record -இற்குள் செல்லுங்கள்.
  2. ‘Passes and certificates’ எனும் பகுதியில், ‘Request pass or certificate’-ஐத் தெரிவு செய்யுங்கள்.
  3. ‘Select a pass or certificate’ எனும் திரை தோன்றும். ‘International certificate’-ஐத் தெரிவு செய்து, பிறகு ‘Continue’-ஐத் தெரிவு செய்யுங்கள்.
  4. ‘Your details’ எனும் திரையில் உங்களுடைய தடுப்பூசிச் சான்று அனுப்பப்படவேண்டிய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள், பிறகு ‘Request certificate’-ஐத் தெரிவு செய்யுங்கள்.
  5. உறுதிப்படுத்துச் செய்துயைக் கொண்ட திரை ஒன்று தோன்றும்.
  6. 24 மணி நேரத்திற்குள்ளாக உங்களுடைய சர்வதேசச் சான்றுடன் கூடிய மின்னஞ்சல் ஒன்றை நீங்கள் பெறவேண்டும்.
  7. இந்த மின்னஞ்சலை நீங்கள் பெறும்பொழுது, ‘Add to Apple Wallet’ என்று கூறும் பொத்தான் மீது சொடுக்கி, அல்லது ‘கூகுள் பே’-இற்கு ‘Save to phone’ எனும் பொத்தான் மீது சொடுக்கி இந்த சர்வதேசச் சான்றினை நீங்கள் உங்களுடைய தொலைபேசியில் சேமித்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் இதை வலையிறக்கம் செய்து அந்த PDF-ஐ அச்சிட்டுக்கொள்ளலாம்

தடுப்பூசிகளை நீங்கள் வெளிநாடுகளில் இட்டுக்கொண்டிருந்தால்.

நீங்கள் நியூசிலாந்தில் தடுப்பூசிகளை இட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே ‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று’ (International Travel Vaccination Certificate) ஒன்றை உங்களால் பெற இயலும்.

‘கோவிட்-19’ தடுப்பூசிகளை நீங்கள் வெளிநாடுகளில் இட்டுக்கொண்டிருந்தால், நியுசிலாந்திற்கு வெளியே பயணம் செய்வதற்காக அந்த நாட்டிடமிருந்தும் சான்று ஒன்றை நீங்கள் வேண்டவேண்டும்.

உங்களுடைய இரண்டு மருந்தளவுகளையும் நீங்கள் வெளிநாடுகளில் இட்டுக்கொண்டிருந்தால், ‘சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று’ (International Travel Vaccination Certificate) ஒன்றை நியூசிலாந்திடமிருந்து உங்களால் பெற இயலாது.

Last updated: at