‘ப்ஃபைசர்’ தடுப்பூசி மருந்து | The Pfizer vaccine

‘ப்ஃபைசர்’ தடுப்பூசி மருந்தைப் பற்றியும் நீங்கள் எவ்வாறு தடுப்பூசியை இட்டுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.

‘ப்ஃபைசர்’ தடுப்பூசி மருந்தைப் பற்றி

நியூசிலாந்தில் நாம் பயன்படுத்திவரும் பிரதானமான ‘கோவிட்-19’ தடுப்பூசி மருந்து ‘ப்ஃபைசர்-பையோ-என்-டெக்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகிறது. இதனுடைய வர்த்தகப் பெயரான ‘கோமிர்நாட்டி’ (Comirnaty) என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.

இது mRNA (messenger ribonucleic acid) (செய்தியாள் ரிபோ-நியூக்ளிக்-அமிலம்) அடிப்படையிலான ஒரு தடுப்பூசி மருந்தாகும். உயிருள்ள, இறந்த அல்லது செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸுகள் எதுவும் இதில் இல்லை. உங்களுடைய ‘டி.என்.ஏ’ (DNA) அல்லது மரபணு(gene)க்களை இது பாதிக்காது அல்லது அவற்றுடன் கலப்புவினையாற்றாது.

இது இலவசமானது மற்றும் 5 வயதுக்கு மேற்பட்ட நியூசிலாந்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கப் பெறுகிறது.

5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த தடுப்பூசியானது, குறைந்த டோஸ் மற்றும் சிறிய தொகுதி கொண்ட ஃபைசர் தடுப்பூசியின் குழந்தைகளுக்கான பதிப்பாகும்.

5-11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் பற்றி மேலும் அறியவும்

டோஸ்களுக்கு இடையே உள்ள காலம்

 • 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்: நீங்கள் குறைந்தது 3 வாரங்கள் இடைவெளியில் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் பெற வேண்டும். நீங்கள் முதலில் தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகியிருந்தால் உங்களுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படும்.
 • 16 மற்றும் 17 வயது: நீங்கள் குறைந்தபட்சம் 3 வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற வேண்டும். நீங்கள் முதலில் தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகியிருந்தால் உங்களுக்கு ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படும்.
 • 12 முதல் 15 வயது வரை: நீங்கள் குறைந்தபட்சம் 3 வார இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற வேண்டும். பூஸ்டர் டோஸ்கள் தற்போது 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.
 • 5 முதல் 11 வயது வரை:ஒவ்வொரு டோசுக்கும் இடையில் 8 வார இடைவெளி இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ்கள் தற்போது 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

பூஸ்டர் டோஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

உங்களுடைய ‘ப்ஃபைசர்’ தடுப்பூசி மருந்தினைப் பெறல்

புக் மை வாக்சின் (external link) (Book My Vaccine) மூலமாகவோ அல்லது கோவிட் தடுப்பூசி ஹெல்த்லைனை 0800 28 29 26 என்ற எண்ணில் அழைப்பதன் மூலமாகவோ ஃபைசர் தடுப்பூசியைப் பெற முன்பதிவு செய்யலாம்.

முழுப் பயிற்சி பெற்ற தடுப்பூசியேற்றுநர் ஒருவர் உங்களுடைய மேல் புஜத்தில் இந்தத் தடுப்பூசியை உங்களுக்கு இடுவார். முதல் ஊசிக்குப் பிறகு குறைந்தபட்சமாக 3 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது ஊசி இடப்படலாம். உங்களுடைய முதல் மருந்தளவில் நீங்கள் ‘ப்ஃபைசர்’ தடுப்பூசியைப் பெற்றால், இரண்டாவது மருந்தளவிலும் நீங்கள் அதைப் பெற வேண்டும்.

நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, உங்களுடைய தடுப்பூசியை நீங்கள் இட்டுக்கொண்ட பிறகு 15 நிமிடத்திற்கு நீங்கள் அங்கேயே இருக்க வேண்டியிருக்கும்.

உங்கள் வயது 18 மற்றும் அதிகமென்றால் நீங்கள் முதன்மை தடுப்பூசி பெற்ற தினத்திலிருந்து 3 மாதங்கள் பின்னர் பூஸ்டர் டோசை பெறலாம்.

உங்கள் வயது 16 அல்லது 17 என்றால் நீங்கள் COVID-19 இன் முதன்மை தடுப்பூசி பெற்ற தினத்திலிருந்து 6 மாதங்கள் பின்னர் பூஸ்டர் டோசை பெறலாம்.

பூஸ்டர் டோஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

‘ப்ஃபைசர்’ தடுப்பூசி செயலாற்றும் விதம்

‘கோவிட்-19’ வைரஸுடன் எப்படிப் போரிடுவது என்று உங்களுடைய சரீரத்திற்குக் கற்றுத் தருவதற்கான அறிவுறுத்தல்களின் தொகுதி ஒன்றை ‘ப்ஃபைசர்’ தடுப்பூசி அனுப்பும். இதற்குப் பிறகு, ‘கோவிட்-19’ வைரஸை அடையாளம் கண்டு அதற்கு எதிராக நோயெதிப்பிகளைப் பயன்படுத்த உங்களுடைய சரீரம் கற்றுக்கொள்ளும். உங்களுடைய உயிரணுக்-கலன்களில் இந்த வைரஸ் தொற்றுவதைத் தடுக்கவும், அதைக் கொல்லவும் நோயெதிர்ப்பிகள் உதவும்.

வருங்காலத்தில் நீங்கள் ‘கோவிட்-19’ வைரஸை எதிர்கொண்டால், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான சரியான முறைமைகள் உங்களுடைய சரீரத்திடம் இருக்கும், ஆகவே நீங்கள் நோய்வாய்ப்படும் சாத்தியம் குறைவாக இருக்கும்.

‘ப்ஃபைசர்’ தடுப்பூசி செயலூக்கம் மிக்கது என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது

இது வரை உற்பத்தி செய்யப்பட்ட தடுப்புமருந்துகளில் மிக அதிகமான ஆராய்ச்சிகளுக்கு ஆட்படுத்தப்பட்டவை என்று ‘கோவிட்-19’ தடுப்பூசிகள் ஏற்கனவே அறியப்படுகின்றன.

‘ப்ஃபைசர்’ தடுப்பூசி செயலாற்றுகிறது என்பதை நாமறிவோம், ஏனெனில் இந்தத் தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக 40,000 பேருக்கும் அதிகமானவர்களை வைத்து மாதக் கணக்கில் செய்யப்பட்ட மருத்துவ சோதனைகளை இது கடந்தது. தடுப்பூசி இடப்பட்ட ஒரு குழுவினரிடமிருந்து பெறப்பட்ட முடிவுகளை ‘மருந்து போலி’ (உப்புக் கரைசல்) ஒன்றைப் பெற்ற இன்னொரு குழுவினரிடமிருந்து பெறப்பட்ட முடிவுகளோடு மருத்துவ சோதனை முயற்சிகள் ஒப்பிட்டு நோக்கின. ‘ப்ஃபைசர்’ தடுப்பூசி ‘கோவிட்-19’ அறிகுறிகளுக்கு எதிராக 95 சதவீதப் பாதுகாப்பினை அளித்தது என்று இந்த மருத்துவ சோதனை முயற்சிகள் கண்டன.

பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பினை நாங்கள் எவ்வாறு சோதிக்கிறோம்

‘மெட்சேஃப்’ (Medsafe) என்பது நியூசிலாந்தின் மருத்துகள் பாதுகாப்பு ஆணையமாகும். தடுப்பூசி மருந்துகளை உள்ளடக்கும் அனைத்துப் புதிய மருந்துகளும் சர்வதேசத் தர-நிலைகலையும் உள்ளூர்த் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆணையம் புதிய மருந்துகளுக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கிறது. இந்தத் தர-நிலைகளை ஒரு மருந்து பூர்த்தி செய்தால் மட்டுமே நியூசிலாந்தில் பயன்படுத்தப்படுவதற்காக அந்த மருந்திற்கு அங்கீகாரம் அளிக்க இது சிபாரிசு செய்யும்.

நியூசிலாந்தில் (நிபந்தனைகளுடன்) பயன்படுத்தப்படுவதற்காக தற்காலிக அங்கீகாரத்தினை ‘மெட்சேஃப்’ (Medsafe) ‘ப்ஃபைசர்’ தடுப்பூசிக்கு அளித்துள்ளது. முறைப்படி இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கும், ஆனாலும் சர்வதேசத் தர-நிலைகளை இது பூர்த்தி செய்கிறது என்பதைக் காண்பிக்க ‘ப்ஃபைசர்’ நிறுவனம் தொடர்ந்து ‘மெட்சேஃப்’ (Medsafe)-இற்கு தரவுகளையும், அறிக்கைகளையும் கட்டாயமாய்க் கொடுத்துவர வேண்டும்.

இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுவரும் காலத்தில் அதனுடைய பாதுகாப்புத்-தன்மையையும், செயலூக்கத்தையும் ‘மெட்சேஃப்’ (Medsafe) தொடர்ந்து கண்காணித்துவரும். உலகைச் சுற்றி நடைபெற்றுவரும் மருத்துவ சோதனை முயற்சிகளிலிருந்து பெறப்படும் தரவுகளையும், சுகாதரத் தொழிலர்கள் மற்றும் தடுப்பூசியிடப்பட்ட சனங்களிடமிருந்து பெறப்படும் அறிவிப்புகளையும் இது மீள்பார்வையிடுகிறது.

பக்க விளைவுகள்

எல்லா மருந்துகளுக்கும் இருப்பதைப் போல, உங்களுடைய தடுப்பூசிகளை நீங்கள் இட்டுக்கொண்ட பிறகு வரும் சில நாட்களில் மிதமான சில பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது பொதுவானதே, அத்துடன் இந்த ‘வைர’ஸுடன் போரிட உங்களுடைய சரீரம் கற்றுக்கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாகும் இது.

பெரும்பாலான பக்க விளைவுகள் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை, மற்றும் இரண்டாவது மருந்தளவைப் பெறுவதிலிருந்தோ, உங்களுடைய அன்றாட அலுவல்களைச் செய்வதிலிருந்தோ இவை உங்களைத் தடுக்காது. சில பக்க விளைவுகள் உங்களுடைய வாகனம் ஓட்டும் திறனை, அல்லது இயந்திரங்களைக் கையாளும் திறனைத் தற்காலிகமாகப் பாதிக்கலாம்.

ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள மிகப் பொதுவான எதிவினைகள்:

 • ஊசி இடப்பட்ட இடத்தில் வலி அல்லது வீக்கம்
 • சோர்வான அல்லது அசதியான உணர்வு
 • தலைவலி
 • தசை வலிகள்
 • குளிர்க்-காய்ச்சல்கள்
 • மூட்டு வலி
 • காய்ச்சல்
 • ஊசி இடப்பட்ட இடத்தில் சிவந்த தன்மை
 • குமட்டல்.

இரண்டாவது மருந்தளவிற்குப் பிறகு சில பக்க விளைவுகள் மிகவும் பொதுவானவை.

பாரதூரமான பக்க விளைவுகள்

மிகவும் அரிதான, ஆனால் அதி பாரதூரமான பக்க விளைவுகள் சில உள்ளன.

‘மையோகார்டைட்டிஸ்’ (myocarditis) என்பது இதயச் சுவர்த் தசையின் அழற்சியாகும், மற்றும் இது ‘ப்ஃபைசர்’ தடுப்பூசியினால் ஏற்படும் அரிதானதொரு அறியப்பட்ட பக்க விளைவாகும்.

அறிகுறிகளில் பின் வருவன உள்ளடங்கலாம்:

 • புதிதாய்த் தோன்றும் நெஞ்சு வலி
 • மூச்சுத் திணறல்
 • வழக்கத்திற்கு மாறான/அதிவேக இதயத்துடிப்பு.

பக்க விளைவுகளைத் தெரியப்படுத்துதல்

பக்க விளைவுகள் எதனையும் நீங்கள் CARM எனும் ‘தகாத எதிர்வினைகள் கண்காணிப்பு மைய’(Centre for Adverse Reactions Monitoring)த்திற்குத் தெரியப்படுத்தலாம். CARM என்பது, நியுசிலாந்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் காரணமாக ஏற்படும் தகாத எதிர்வினைக(பக்க விளைவுகள்)ளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தரவுத்தளமாகும்.

தகாத எதிர்வினை ஒன்றைத் தெரியப்படுத்துங்கள் (external link)

நீங்கள் தடுப்பூசிகளை இட்டுக்கொண்டுவிட்டீர்கள் என்பதை நிரூபித்தல்

மை கோவிட் ரெக்கார்ட் என்பது உங்கள் COVID-19 தடுப்பூசி பதிவைச் சரிபார்த்து, கோருவதற்கும், உங்களின் சமீபத்திய COVID-19 சோதனைகளைப் பார்ப்பதற்கும் உங்களை அனுமதிக்கும் இணையதளமாகும். mycovidrecord.health.nz என்பது இந்த இணையதளத்தின் முகவரி ஆகும்.

இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள்:

 • உங்கள் COVID-19 தடுப்பூசி பதிவுகளின் நகலைக் கோரலாம் - இதில் தொகுதி எண்கள், டோஸ் எண், தடுப்பூசி பெயர் மற்றும் உற்பத்தியாளர் ஆகியவை அடங்கும். மேலும் நீங்கள் கோரிய அனைத்து வெளிநாட்டு தடுப்பூசிகளும் உங்கள் சுகாதார பதிவில் சேர்க்கப்படும். இது வேறு யாருக்காவது தேவைப்பட்டால், 0800 222 478 என்ற எண்ணிற்கு அழைக்கவும்
 • எனது தடுப்பூசி பாஸைக் கோருங்கள் - ஆவோதேயாரோவா நியூசிலாந்தில் பயன்படுத்துவதற்கான உங்களின் COVID-19 தடுப்பூசி நிலையைப் பற்றிய அதிகாரப்பூர்வ பதிவு. உங்களுக்காக அல்லது வேறொருவருக்காக நீங்கள் கோரலாம்.
 • உங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க (சர்வதேசப் பயணத் தடுப்பூசிச் சான்று) -ஒன்றை கோரவும். உங்களுக்காக அல்லது வேறொருவருக்காக நீங்கள் கோரலாம்.
 • உங்கள் COVID-19 சோதனை முடிவுகளைப் பார்க்கவும்.
 • உங்களுடைய விரைவு நோயெதிர்ப்பி சோதனை முடிவுகளை பதிவேற்றம் செய்யவும். உங்களுக்காக அல்லது வேறு ஒருவருக்காக சோதனை முடிவைச் சேர்க்கலாம்.

வணிகங்கள், நிகழ்வுகள் மற்றும் சேவைகளை அணுகுவதற்கு எனது தடுப்பூசி அனுமதி அட்டையை இனி அரசு பயன்படுத்த வேண்டியதில்லை. உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் இருந்தால் வணிகங்கள் இன்னும் மை வேக்ஸின் பாஸை உள்நுழைவதற்கான நிபந்தனையாக தேர்வு செய்யலாம். இருப்பினும், நுழைவு நிபந்தனையாக மை வேக்ஸின் பாஸ் தேவை எனத் தேர்வுசெய்யும் வணிகம் மற்றும் நிறுவனங்கள் 12 வயதிற்குட்பட்டவர்களை மை வேக்ஸின் பாஸ் இல்லாமல் நுழைவதைத் தடுக்க முடியாது.

‘மை கோவிட் ரெகார்ட்’ (My Covid Record)-ஐப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

மேலதிகத் தகவல்கள்

Last updated: at