எவ்வாறு நம்பத்தக்க தகவலை பெறுவது மற்றும் எவ்வாறு மோசடிகளை தவிர்ப்பது | How to find trustworthy information and avoid scams

COVID-19 ஐ பற்றி எங்கே நம்பத்தக்க மற்றும் ஆதாரபூர்வமான தகவலை பெறலாம் என்பதை பற்றி கண்டறியவும்

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

COVID-19 தடுப்பூசிகள் பற்றி ஆன்லைனிலும் சமூக ஊடகங்களிலும் நிறைய தகவல் இருக்கின்றன. எது நம்பகத்தன்மை கொண்டது என்று பகுத்தறிவது மிகவும் அசாத்தியமானதாகவும் கடினமானதாகவும் இருக்கும். உங்களுக்கு நம்பத்தகுந்த மூலங்களிலிருந்துதான் தகவல் வருகிறது என்பதை உறுதிபடுத்துங்கள் மற்றும் உண்மையென்று தெரியும்வரை தகவலை பகிராதீர்கள். 

நம்பத்தகுந்த தகவலை எங்கே பெறுவது

நீங்கள் பின்வரும் இடங்களில் நம்பத்தகுந்த, விஞ்ஞான அடிப்படையிலான தகவலை பெறலாம்:

சுகாதார அமைச்சகம்

சுகாதார அமைச்சகம் நியூசிலாந்தின் சுகாதாரம் மற்றும் ஊனமுற்றோர் அமைப்பிற்கு தலைமை தாங்குகிறது. மேலும் இந்த அமைப்பின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்திக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறது.

COVID-19 தடுப்பூசிகள் - சுகாதார அமைச்சகம் (external link)

நோயெதிர்ப்புத் திறனூட்டல் ஆலோசனை மையம் (IMAC)

IMAC என்பது ஆக்லாந்து பல்கலைகழகத்தின் மக்கள் சுகாதார பள்ளியை தலைமையகமாக கொண்ட நாடு தழுவிய நிறுவனமாகும். இது சுயேச்சையான, உண்மை தகவலை தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்த சர்வதேச மற்றும் நியூசிலாந்து விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படையில் வழங்குகிறது.

நோயெதிர்ப்புத் திறனூட்டல் ஆலோசனை மையம் (external link)

உலக சுகாதார மையம் (WHO)

WHO என்பது ஐக்கிய நாடுகளின் சபையை சேர்ந்த ஒரு ஏஜென்சி. இது சர்வதேச பொது சுகாதாரத்திற்கு பொறுப்பேற்கிறது.

COVID-19 தடுப்பூசிகள் — WHO (external link) 

COVID-19 தடுப்பூசி மோசடிகள்

இந்த தடுப்பூசி தொடர்பான மோசடிகள் பற்றி நீங்கள் சில முக்கியமான விஷயங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்:

  • இந்த தடுப்பூசிக்காக பணம் செலுத்துவதற்கோ அல்லது வரிசையில் உங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வதற்காக பணம் செலுத்துவதற்கோ உங்களிடம் ஒருபோதும் கேட்கப்படாது.
  • இந்த தடுப்பூசியை பற்றிய அதிகாரபூர்வ தகவல் ஒரு நம்பத்தக்க சுகாதார பொருளடக்க வழங்குனரிடமிருந்து வரும். இதில் சுகாதார அமைச்சகம், COVID-19க்கு எதிராக அணி திரளுங்கள் அல்லது உங்கள் மாவட்ட சுகாதார வாரியம் (DHB) போன்றவை அடங்கும்.
  • உங்களுடன் முன்கூட்டியே ஒரு ஏற்பாடு இருந்தாலொழிய ஒரு சுகாதார ஊழியர் ஒருபோதும் உங்கள் வீடு தேடி வந்து தடுப்பூசி வழங்க மாட்டார்.
  • குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களிடம் தனிப்பட்ட தகவல் ஒருபோதும் கேட்கப்படாது. அத்தகைய செய்தியை நீங்கள் பார்த்தால் அதைப்பற்றி CERT NZ க்கு தகவல் தெரிவியுங்கள் மற்றும் அந்த செய்திக்கு மறுமொழி அனுப்பாதீர்கள்.
  • உங்கள் நிதி விவரங்களை கேட்டு தடுப்பூசி தொடர்பாக ஒரு மின்னஞ்சல், போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் அது ஒரு மோசடியாக இருக்கும். அதைப்பற்றி உடனடியாக
    CERT NZ தெரிவிக்கவும். 

தடுப்பூசியை பற்றி சந்தேகப்படக்கூடிய ஏதேனும் ஒன்றை நீங்கள் பார்த்தால் அதைப்பற்றி CERT NZக்கு தெரிவியுங்கள் (external link)

மாறாக நீங்கள் அவர்களை 0800 237 869 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.

COVID-19 தடுப்பூசி மோசடிகளை பற்றி மேலும் கண்டறியுங்கள் (external link)

Last updated: