உங்களுக்கான ‘ஊக்க மருந்தளவு’-ஐ இட்டுக்கொள்ளல் | Getting your booster dose

COVID-19 தடுப்பூசிக்கான பூஸ்டர் டோஸ் ஒன்றை நீங்கள் பெற வேண்டுமென்றால் அதைப்பற்றியும் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றியும் அறிந்துக்கொள்ளுங்கள்.

பூஸ்டர் டோஸ்களை பற்றி

உங்கள் வயது 16 மற்றும் அதிகமென்றால் நீங்கள் COVID-19 தடுப்பூசிக்கான பூஸ்டர் டோஸைப் பெறும் தகுதி பெறுகிறீர்கள்.

உங்கள் வயது 18 மற்றும் அதிகமென்றால் நீங்கள் முதன்மை தடுப்பூசி பெற்ற தினத்திலிருந்து 3 மாதங்கள் பின்னர் பூஸ்டர் டோஸைப் பெறலாம்.

உங்கள் வயது 16 அல்லது 17 என்றால் நீங்கள் COVID-19 இன் முதன்மை தடுப்பூசி பெற்ற தினத்திலிருந்து 6 மாதங்கள் பின்னர் பூஸ்டர் டோஸைப் பெறலாம்.

பூஸ்டர் டோஸ்கள் சட்டப்படிக் கட்டாயமானவையல்ல, மற்றும் வேக்சின் பாஸ் ஒன்றைப் பெற இவை தேவைப்படாது. பூஸ்டர் டோஸை நீங்கள் பெற்றால் அது உங்களுடைய என் கோவிட் பதிவில் சேர்க்கப்படும் மற்றும் உங்களால் மற்றொரு பாசை உருவாக்க இயலும்.

உங்களுக்கு COVID-19 தொற்று ஏற்பட்டிருந்து உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக அமைந்திருந்தால் நீங்கள் COVID-19 தடுப்பூசியை பெறுமுன் நீங்கள் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

பின் வரும் வழிகளில் நீங்கள் பூஸ்டர் டோஸ் ஒன்றைப் பெறலாம்:

  • நேரடியாக அணுகக்கூடிய தடுப்பூசி சிகிச்சையகத்திற்கு செல்வதன் மூலம்
  • உங்கள் மருத்துவர் COVID-19 தடுப்பூசி வழங்குபவரென்றால் அவருடன் ஒரு முன்பதிவை செய்வதன் மூலம்
  • புக் மை வேக்சின் (Book My Vaccine) உதவியுடன் முன்பதிவு செய்வது அல்லது 0800 28 29 26 என்ற எண்ணை அழைப்பதன் மூலம்

புக் மை வேக்சின் (external link)

மை கோவிட் ரெக்கார்டை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

மை வேக்சின் பாஸ்

உங்களுக்கு எந்தத் தடுப்பூசி போடப்படும்?

உங்கள் முந்தைய டோஸ்களுக்கு வேறு தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் கூட, ஃபைசர் தடுப்பூசி நியூசிலாந்தில் பூஸ்டர்களுக்காகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும்.

ஃபைசர் தடுப்பூசி மருந்து

பூஸ்டர் ஊசிகளின் செயல்திறன்

டெல்டா மற்றும் ஓமிக்ரான் COVID-19 வகைகளில் இருந்து வரும் கடுமையான நோய்களுக்கு எதிராக இரண்டு டோஸ்கள் நல்ல அளவிலான பாதுகாப்பை வழங்கக்கூடும் என்றாலும், ஒரு பூஸ்டர் டோஸ் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

தற்போதைய சான்றுகள், முதன்மை தடுப்பூசியின் வீரியம் காலப்போக்கில் குறைவதால் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பும் குறைவதை எடுத்து காட்டுகிறது. முதன்மைத் தேவைக்குப் பிறகு 'டாப் அப்' தடுப்பூசியை வழங்குவது, COVID-19 க்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பூஸ்டர்கள் COVID-19 இலிருந்து மிகவும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. 

வெளிநாட்டுத் தடுப்பூசியேற்றங்கள்

நீங்கள் வெளிநாட்டில் முதன்மையான தடுப்பூசி(கள்) பெற்றிருந்தால், நீங்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், உங்களின் மிகச் சமீபத்திய தடுப்பூசியைப் பெற்ற 3 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டரைப் பெறலாம். நீங்கள் 16 அல்லது 17 வயதுடையவராக இருந்தால், உங்கள் சமீபத்திய தடுப்பூசிக்கு 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டரைப் பெறலாம்.

நீங்கள் நோயெதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டிருப்பவர் என்றால்

நோயெதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மூன்றாவது முதன்மைநிலை மருந்தளவு ஒன்று சிபாரிசு செய்யப்படுகிறது. இது பூஸ்டர் டோஸிலிருந்து இருந்து வேறுபட்டது.

மூன்றாவது முதன்மை டோஸுக்குத் தகுதியானவர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றால், மூன்றாவது முதன்மை டோஸைப் பெற்ற 3 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸைப் பெறலாம். அவர்கள் 16 அல்லது 17 வயதாக இருந்தால், அவர்களின் மூன்றாவது முதன்மை டோஸுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பூஸ்டர் டோஸை பெறலாம்.

நீங்கள் நோயெதிர்ப்புத்திறன் பாதிக்கப்பட்டவர் என்றால் மூன்றாவது ஆரம்பநிலை மருந்தளவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் (external link)

பூஸ்டர் டோஸ்களின் பக்க விளைவுகள்

பூஸ்டர் மருந்தளவுகளின் பக்க விளைவுகள் ஆரம்பநிலை தடுப்பூசி மருந்தளவுகளுக்கு உள்ளவற்றைப் போன்றதாகும். வலி, ஊசி இடப்பட்ட இடத்தில் சிவத்தல் அல்லது வீக்கம், தலைவலி, குமட்டல் மற்றும் களைப்பான அல்லது அசதியான உணர்வு ஆகியன இதில் உள்ளடங்கும்.

பக்க விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள் (external link)

Last updated: at