நியூசிலாந்துக்கு பயணித்தல் | Travelling to New Zealand

நியூசிலாந்தின் எல்லைகள் படிப்படியாக 2022 முழுதும் திறக்கின்றன.

நியூசிலாந்துக்கு பயணித்தல் பற்றி

நியூசிலாந்துக்கு பயணித்தல் குறித்து நீங்கள் பல தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்வரும் படிமுறைகள் நீங்கள் நியூசிலாந்துக்குள் நுழைவதற்கு என்ன சான்றுகளை சமர்பிக்க வேண்டும் என்று விளக்குகின்றன.

நியூசிலாந்திற்கு பயணிக்க உங்களுக்கு இனியும் ஒரு புறப்பாட்டுக்கு முந்தைய சோதனை தேவையில்லை.

அமைப்புகள் விரைவாக மாறலாம் - நியூசிலாந்து குடியேற்ற துறை மிக சமீபத்திய தகவல்களை வழங்கும்.

நியூசிலாந்துக்கு பயணித்தல் | நியூசிலாந்து குடியேற்ற துறை (external link)

1. நீங்கள் நியூசிலாந்துக்கு வர இயலுமா என்று சரிபாருங்கள்

நியூசிலாந்து குடிமக்கள் மற்றும் மற்ற தகுதியான பயணிகள் நியூசிலாந்திற்குள் நுழையலாம் மற்றும் வருகையின் போது சுய-பரிசோதனை செய்யலாம். நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா என்று சரிபார்க்க நியூசிலாந்து குடியேற்ற துறையின் வலைதளத்திற்கு வருகை தாருங்கள்.

நியூசிலாந்துக்கு பயணிக்கும் பெரும்பான்மையான பயணிகள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியை முழுவதுமாக பெற்றிருக்க வேண்டும். இதில் ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம்.

பயணத்தின் முன்பு உங்கள் பாஸ்போர்ட் செல்லத்தக்கது என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் ஒரு நியூசிலாந்து மின்னணு பயண அதிகாரத்திற்கு (NZeTA) விண்ணப்பிக்க வேண்டும்.

நியூசிலாந்துக்கு நீங்கள் பயணிக்கும் தகுதி பெறுகிறீர்களா என்று சரிபாருங்கள் | immigration.govt.nz (external link)

தடுப்பூசி நிபந்தனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டத் தடுப்பூசிகள்

ஒரு NZeTA க்கு விண்ணப்பிக்கவும் | immigration.govt.nz (external link)

2. உங்கள் பயணத்தை பதிவு செய்யுங்கள்

நியூசிலாந்திற்கு உங்கள் பயணத்தை பதிவு செய்யுங்கள்.

தடுப்பூசி தொடர்பாக விமான/கப்பல் நிறுவனத்தின் கொள்கையை சரிபாருங்கள். மேலும் உங்கள் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டால் ரத்து மற்றும் பணம் திரும்பபெறுதல் தொடர்பான கொள்கைகளையும் சரிபாருங்கள்.

உங்கள் பயண திட்டங்கள் பாதிக்கபட்டால் நீங்கள் பயண காப்பீடு பெறுவதை பற்றியும் பரிசீலிக்க வேண்டும். சுய-தனிமைப்படுத்தல் தேவைப்பட்டால் அதற்கு ஏற்ற ஒரு தங்குமிடத்தையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

3. பயணி பிரகடன அறிக்கையை தொடங்குங்கள்

நியூசிலாந்திற்கு பயணிக்கும் முன் அனைத்து பயணிகளும் நியூசிலாந்து பயணி பிரகடன அறிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். இதை பூர்த்தி செய்தவுடன் உங்களுக்கு ஒரு பயணி கடவுசீட்டு வழங்கப்படும்.

பிரகடன அறிக்கையை கூடிய விரைவில் தொடங்குங்கள். உங்கள் பயண தினத்திற்கு 28 நாட்கள் முன்பாக நீங்கள் அதை தொடங்கலாம்.

உங்கள் பயணி பிரகடன அறிக்கையை தொடங்குங்கள். (external link)

பயணி பிரகடன அறிக்கை வெள்ளையறிக்கை (external link)

4. பயணி பிரகடன அறிக்கையை பூர்த்தி செய்யுங்கள்

பயணி பிரகடன அறிக்கையை பூர்த்தி செய்ய நீங்கள் பின்வருபனவற்றை வழங்க வேண்டும்:

 • பாஸ்போர்ட் விவரங்கள்
 • பயண விவரங்கள்
 • தடுப்பூசிக்கான சான்று (தேவைப்பட்டால்)
 • கடந்த 14 நாட்களுக்கான பயண வரலாறு
 • நியூசிலாந்தில் தொடர்பு விவரங்கள்
 • அவசரகால தொடர்பு விவரங்கள்

உங்கள் பயணி பிரகடன அறிக்கையில் நீங்கள் உள்ளிட்டுள்ள விவரங்களை இருமுறை சோதித்து அவை உங்கள் அதிகாரபூர்வ ஆவணங்களுடன் ஒத்துப்போவதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் பயணி கடவுசீட்டை நீங்கள் விமான நிலையத்தில் செக்-இன் செய்யும்போதும் நியூசிலாந்து சுங்கதுறையிடமும் காண்பிக்க வேண்டும். அதை நீங்கள் அச்சிட்டோ உங்கள் கைப்பேசியில் சேமித்தோ வைக்கலாம். நீங்கள் நியூசிலாந்து பயணி பிரகடன அறிக்கைக்கு ஆவணங்களை பதிவேற்றியிருந்தாலும் நீங்கள் அவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும்.

உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டல் (external link)

5. விமான நிலையத்தில்

பொருந்தினால் உங்களுக்கு பின்வருபவை தேவைப்படும்:

 • பாஸ்போர்ட்
 • விசா - தேவைப்பட்டால்
 • உங்கள் பயண டிக்கெட்
 • பூர்த்தி செய்யப்பட்ட பயணியர் கடவுச்சீட்டு
 • உங்கள் தடுப்பூசி நிலைக்கான சான்று

விமான பயணத்திற்கு முன் உங்கள் உடல்நலம் குன்றினால்

விமான பயணத்திற்கு முன் உங்கள் உடல்நலம் குன்றினால் அல்லது உங்களுக்கு தூசி காய்ச்சல் அறிகுறிகள் போன்ற COVID-19 போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு அத்தகைய அறிகுறிகள் உள்ளனவா என்று விமான நிறுவன செக்-இன் சிப்பந்திகள் உங்களிடம் கேட்பார்கள். உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்கள் பின்வருபனவற்றை சமர்பிக்க வேண்டும்:

 • உங்களுக்கு தொற்று நோயோ COVID-19 நோயோ இல்லையென்பதை உறுதிபடுத்தும் ஒரு மருத்துவ சான்றிதழ் (அச்சோதனைகள் உங்கள் விமானம் புறப்படும் நேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்)
 • அல்லது கண்காணிக்கப்பட்ட COVID-19 சோதனையில் பெறப்பட்ட எதிர்மறை முடிவின் சான்று. அங்கீகரிக்கப்பட்ட முன்-புறப்பாடு சோதனைகள் பின்வருமாறு:
  • நியூசிலாந்துக்கு நீங்கள் முதல் முறை பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சர்வதேச விமான புறப்பாட்டிற்கு அதிகபட்சமாக 48 மணிநேரம் முன்பாக எடுக்கப்பட்ட PCR சோதனை
  • கண்காணிக்கப்பட்ட விரைவு நோயெதிர்ப்பு சோதனை (RAT) அல்லது நியூசிலாந்துக்கு நீங்கள் முதல் முறை பயணம் மேற்கொள்ளும் பொருட்டு சர்வதேச விமான புறப்பாட்டிற்கு அதிகபட்சமாக 24 மணிநேரம் முன்பாக எடுக்கப்பட்ட லூப்-மீடியேட்டட் ஆம்ப்ளிபிகேஷன் (LAMP) சோதனை

6. நியூசிலாந்திற்குள் வந்து சேருதல்

சுங்கத்துறை உங்கள் பயண வரலாறு, தடுப்பூசி நிலை, பயணியர் கடவுச்சீட்டு, மற்றும் நுழைவுக்கான வேறெதேனும் கட்டாய தேவைகளை சரிபார்ப்பார்கள். விமான நிலையத்தினுள்ளே நீங்கள் கடக்கையில் சிறிது தாமதத்தை எதிர்பாருங்கள்.

பயோசெக்யூரிட்டியில் உங்களுக்கான வரவேற்பு தொகுதி வழங்கப்படும். இந்த வரவேற்பு தொகுதி பின்வருபனவற்றை உள்ளடக்கும்:

 • விரைவு நோயெதிர்ப்பி சோதனை (RAT) தொகுதிகள்
 • சோதனை மேற்கொள்ளுதல் மற்றும் உங்கள் முடிவுகளை பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டல்.

உங்கள் சோதனைகளை பூர்த்திசெய்து முடிவுகளை வழிகாட்டியபடி பதிவேற்றம் செய்யுங்கள்.

நியூசிலாந்திற்குள் வந்தவுடன் இணங்க வேண்டிய சோதனை நிபந்தனைகள்

Last updated: at