நியூசிலாந்தை விட்டு வெளியேறுதல் | Leaving New Zealand

நீங்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேற திட்டமிட்டால் என்ன செய்ய வேண்டும்.

நீங்கள் பயணம் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள்

வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன், நீங்கள் பயணம் செய்யும் நாட்டின் தேவைகளைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். சரிபார்க்கவும்:

  • நீங்கள் நுழைய அல்லது செல்ல விரும்பும் நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம், அல்லது
  • நியூசிலாந்தில் உள்ள அந்த நாட்டின் தூதரக பிரதிநிதி.

பல நாடுகளில் பயணிகள் வருகையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் அல்லது அவர்கள் பயணம் செய்வதற்கு முன் எதிர்மறையான COVID-19 சோதனை முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

சேஃப் டிராவல்  உடன் பதிவு செய்யவும். நீங்கள் பதிவு செய்தால், பயண ஆலோசனையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.

சேஃப் டிராவல் உடன் பதிவு செய்யவும் (external link)

சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழ்

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எவரும் நியூசிலாந்தில் நிர்வகிக்கப்பட்ட COVID-19 தடுபூசியை செலுதியிருந்தால்  இப்போது சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழைக் கோரலாம்.

உங்கள் சான்றிதழைக் கோருவதற்கு 1-2 நிமிடங்கள் ஆகும், மேலும் 24 மணிநேரத்திற்குள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். மை கோவிட் ரெக்கார்டு மூலம் உங்கள் சான்றிதழைப் பெறலாம். உங்களால் இந்த சேவையை அணுக முடியாவிட்டால், 0800 222 478 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

சர்வதேச பயண தடுப்பூசி சான்றிதழ் பற்றிக் கண்டறியவும்

நீங்கள் NZ ஐ விட்டு வெளியேறினால், புறப்படுவதற்கு முந்தைய பரிசோதனை

சில நாடுகளில் பயணிகள் புறப்படும் முன் COVID-19 சோதனை முடிவை எதிர்மறையாகக் கொண்டிருக்க வேண்டும்.

நியூசிலாந்தில் உள்ள உள்ளூர் உயர் ஸ்தானிகராலயம், தூதரகம் அல்லது தூதரகத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் நீங்கள் பயணிக்கும் நாட்டின் தேவைகளைச் சரிபார்க்கவும்.

புறப்படுவதற்கு முந்தைய பரிசோதனையைப் பெறுதல்

  1. உங்கள் பயணத் திட்டங்கள் உறுதிசெய்யப்பட்டவுடன், ஹெல்த்லைனையோ அல்லது உங்கள் மருத்துவரையோ தொடர்பு கொள்ளவும்.
  2. நீங்கள் எப்போது சோதனைக்கு செல்லலாம் என்பதைக் கண்டறியவும். நீங்கள் புறப்படுவதற்கு முன் முடிந்தவரை அருகாமை நாட்களில் சோதனையை மேற்கொள்ள வேண்டும் - உங்கள் நாட்டிற்குப் பொருந்தும் நேரத்தைச் சரிபார்க்கவும்.
  3. சோதனைக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
  4. உங்கள் சோதனை உள்ளூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும், இது உங்கள் மருத்துவருக்கோ அல்லது உங்களுக்கோ நேரடியாக முடிவை வழங்கும். 
  5. பரிசோதனையின் முடிவை சுகாதார வழங்குநர் உங்களுக்குத் தெரிவிப்பார். சோதனை முடிவுகள் கிடைக்க பல நாட்கள் ஆகலாம், எனவே தாமதமாக விடாமல் பார்த்துக்கொள்ளவும்.
  6. சோதனை எதிர்மறையாக இருந்தால், விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்ல முடிவுகளின் மின்னணு அல்லது காகித நகல் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் சோதனை நேர்மறையானதாக இருந்தால், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பற்றி உங்கள் சுகாதார வழங்குநர் உங்களுடன் பேசுவார்.
  7. விமான நிலைய செக்-இன்க்கு உங்களுடன் எதிர்மறையான சோதனை முடிவுகளை எடுத்துச் செல்லவும். நீங்கள் சேருமிடத்திற்கு வந்தவுடன் சுங்கம் அல்லது குடியேற்றத்திற்கு உங்கள் முடிவுகளைக் காட்ட வேண்டியிருக்கலாம்.

சுகாதார அமைச்சின் மேலதிக பயண ஆலோசனைகள் (external link)

Last updated: at