நியூசிலாந்திற்கு தங்கள் வருகையின் போது உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் ஏற்பட்டால் | If you develop COVID-19 symptoms while visiting New Zealand

நியூசிலாந்திற்கு நீங்கள் வரும் போது உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்று கண்டறியுங்கள்.

நியூசிலாந்திற்கு வந்தவுடன் உங்கள் வருகை தொகுதியில் உள்ளடக்கப்பட்ட விரைவு நோயெதிர்ப்பி சோதனைகளை (RATs) பயன்படுத்தி நீங்கள் அனைத்து சோதனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

வருகையின் போது சோதனை' காலகட்டத்திற்கு பிறகு உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் தோன்றினால் என்ன செய்ய வேண்டுமென்பதை கீழே நீங்கள் கண்டறியலாம் (வந்து சேர்ந்த 7 ஆம் நாள் அன்றோ அதற்கு பின்னரோ).

ஒரு சோதனை செய்துக்கொள்ளுங்கள்

உங்களிடம் COVID-19 அறிகுறிகள் தோன்றினால் நீங்கள் இலவச RATசை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தோ ஒரு சேகரிப்பு மையத்திலிருந்து பெற்று கொள்வதன் மூலமோ நீங்கள் அவற்றிற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இலவச RATற்கு விண்ணப்பியுங்கள் (external link)

உங்களுக்கு அருகாமையிலுள்ள ஒரு COVID-19 சோதனை சேகரிப்பு மையத்தை கண்டறியுங்கள் | ஹெல்த்பாயின்ட் (external link)

உங்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை ஆனாலும் நீங்கள் ஒரு RAT சோதனை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் பிரத்தியேகமாக நீங்களே சோதனைகளை கடைகள், மருந்தகங்கள் அல்லது சூப்பர்மார்கெட்டுகள் போன்ற ஒரு பலசரக்கு முனையத்திலிருந்து வாங்கி கொள்ள வேண்டும்.

எவ்வாறு ஒரு விரைவு நோயெதிர்ப்பி சோதனையை பயன்படுத்துவது

உங்கள் முடிவு நேர்மறையாக அமைந்தால்

உங்கள் முடிவு நேர்மறையாக அமைந்தால் 0800 222 478 என்ற எண்ணை அழைத்து உங்கள் நேர்மறை RAT முடிவை பற்றி கூறுங்கள்.

உங்களிடம் ஒரு செல்லத்தக்க கைபேசி எண் இருந்தால் உங்களுக்கு சுகாதார அமைச்சகம் 2328 அல்லது 2648 என்ற அதிகாரபூர்வ எண்களில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் நேர்மறை முடிவை உறுதிபடுத்தும். இந்த குறுஞ்செய்தி சுய-தனிமைப்படுத்தல் மற்றும் ஆன்லைன் தொடர்பு தடமறிதல் படிவத்திற்கான ஒரு அணுகல் குறியீடு போன்றவற்றை பற்றிய தகவலை வழங்கும்.

உங்கள் RAT சோதனைக்கு பின் நீங்கள் ஒரு சோதனை மையத்திற்கு சென்று ஒரு PCR சோதனை செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு ஒரு படிவம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். இதை நீங்கள் பிரிண்ட் செய்தோ டிஜிட்டல் நகலெடுத்தோ அதை சோதனை மையத்தில் காண்பிக்க வேண்டும்.

உங்களுக்கு அருகாமையிலுள்ள ஒரு COVID-19 சோதனை மையத்தை கண்டறியுங்கள் | ஹெல்த்பாயின்ட் (external link)

1. சுய-தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்

சுய-தனிமைப்படுத்தி கொள்ள ஒரு இடத்தை கண்டறிவது உங்கள் பொறுப்பு

குணமடையும் பொருட்டு நீங்கள் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். உங்களுக்கான 7 நாட்கள் நீங்கள் அறிகுறிகள் கொள்ள துவங்கிய தினம் அல்லது உங்கள் நேர்மறை முடிவு வந்த தினத்திலிருந்து தொடங்குகிறது (இது எது முதலில் வருகிறதோ அந்த தினம்). இதற்கு இணங்கவில்லை என்றால் நீங்கள் அபராதம் செலுத்த நேரிடும்.

எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே நீங்கள் சுய-தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் அல்லது ஒரு மாற்று தங்குமிடத்தை நாட வேண்டும்.

உங்களுடைய நடப்பு முன்பதிவை நீட்டிக்க முடியுமா என்று பாருங்கள் அல்லது மாற்று தங்குமிடத்தை கண்டறிய தயாராகுங்கள். நீங்கள் தங்குவதை நீட்டிப்பதற்கான அல்லது மாற்று தங்குமிடத்தை முன்பதிவு செய்வதற்கான கூடுதல் செலவுகளை ஏற்க நீங்கள் எதிர்பார்க்கப்படுகிறீர்கள். உங்களுக்கு இந்த செலவுகளை உங்கள் பயண காப்பீடு திட்டம் வழங்குமா என்பதை சரிபாருங்கள்.

யாரெல்லாம் சுய-தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும்?

உங்களுடன் யாரெல்லாம் தங்குகின்றனரோ அல்லது பயணிக்கின்றனரோ அவர்கள் அனைவரும் 7 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். இது உங்களுடன் ஒரு ஹோட்டல் அல்லது மோட்டல் அறை, முகாம், கேம்பர்வேன், மோட்டார் அறை அல்லது விடுமுறை இல்லம், அதாவது உங்கள் பயண 'குமிழ்' போன்ற இடங்களில், உங்களுடன் தங்குபவர்களை உள்ளடக்குகிறது. ஹாஸ்டல்களில் உடன் தங்குபவர்கள் அல்லது பேக்பேக்கர்கள் உங்கள் பயண 'குமிழில்' உறுப்பினர்கள் இல்லாதவரை அவர்கள் சுய-தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை.

உங்கள் தங்குமிடத்தில் நீங்கள் தங்க இயலவில்லை என்றால்

உங்கள் நடப்பு தங்குமிடத்தில் நீங்கள் தங்க இயலவில்லை என்றால் ஒரு மாற்று தங்குமிடத்தை நீங்கள் நாட வேண்டும். அனைத்து உள்கட்டமைப்புகள் கொண்ட மோட்டல்கள், விடுதிகள் அல்லது கேம்பர்வேன்கள் போன்றவற்றை சுய-தனிமைப்படுத்தல் இடமாக கொள்ளலாம். அது:

 • நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அதற்கு அருகாமையில் இருக்க வேண்டும்.
 • பகிரப்படும் விருந்தினர் வசதிகளற்று இருக்க வேண்டும்.

அச்சமயம் நீங்கள் இவற்றை மேற்கொள்ள முடியாது:

 • உங்கள் தங்குமிடத்திற்கு வர்த்தக விமான பயணம் மேற்கொள்ள முடியாது
 • இரவு தங்க தேவையுள்ள ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாது
 • உள்-தீவு பயணகப்பல் பயணத்தையோ பொது போக்குவரத்தையோ நாடமுடியாது.

உங்கள் மாற்று தங்குமிடத்திற்கு பயணிக்க தனியார் போக்குவரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். அது உங்கள் சொந்த வாகனமாகவோ அல்லது ஒரு தொடர்பற்ற தொகை செலுத்தல் மற்றும் சேகரிக்கும் அமைப்பின் மூலம் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனமாகவோ இருக்கலாம்.

உங்கள் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள் அல்லது ரத்து செய்யுங்கள்

உங்கள் பயண திட்டங்களை மாற்றியமைக்க அல்லது ரத்து செய்ய உங்கள் விமான அல்லது சுற்றுலா நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள். தொகையை திருப்பியளிக்கவோ பயண திட்டங்களை மாற்றியமைக்கவோ உங்கள் பயண நிறுவனத்திற்கு எவ்வித சட்டப்பூர்வ நிபந்தனையும் இல்லையென்பதை தயவுசெய்து கவனிக்கவும். 

சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது நீங்கள் என்ன செய்யவேண்டும்

சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது:

 • நீங்கள் உடன் தங்குபவர்களுடனான தொடர்பை தவிருங்கள், உதாரணமாக தனியே உறங்குங்கள், பகிர்வு இடங்களில் நீங்கள் செலவு செய்யும் நேரத்தை மட்டுப்படுத்தி கொள்ளுங்கள். இயலவில்லை என்றால் குறைந்தபட்சம் 2 மீட்டர் சமூக இடைவெளியை பராமரியுங்கள் மற்றும் மற்றவர்கள் அருகாமையில் இருக்கும்போது முககவசத்தை பயன்படுத்துங்கள்.
 • உங்கள் துணிகளை நீங்களே துவைத்து அவற்றிற்கு இஸ்திரி போடுங்கள்.
 • அடிக்கடி தொடக்கூடிய பொருட்களான கதவு கைப்பிடிகள், விளக்கு சுவிட்சுகள், தொலைபேசிகள் போன்ற மேற்பரப்புகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.
 • காற்றோத்தை அதிகப்படுத்த சன்னல்களை திறந்து வையுங்கள்.
 • உணவு மற்றும் மருந்து போன்ற பொருட்களை வீட்டிற்கு தருவியுங்கள்.
 • அனுமதிக்கப்பட்டால் வீட்டிலிருந்தவாறே பணியாற்றுங்கள்.

சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது இவற்றை செய்யாதீர்கள்:

 • தங்குமிடத்தை விட்டு எக்காரணம் கொண்டும் அகலாதீர்கள் (கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக தவிர)
 • உணவோ மருந்தோ வாங்குவதற்கு வெளியே செல்லாதீர்கள்
 • உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எந்த பொருட்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் - உதாரணமாக பாத்திரங்கள், பற்குச்சிகள், மற்றும் துண்டுகள் போன்றவற்றை
 • பொது இடங்களுக்கு செல்லாதீர்கள்
 • பொது போக்குவரத்து அல்லது டாக்சிகள் மற்றும் ரைட்ஷேர் வாகனங்களை பயன்படுத்தாதீர்கள்
 • உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கோ அத்தியாவசிய பண்டங்களை வழங்க வருபவர்களை தவிர வேறு எந்த பார்வையாளர்களையும் அனுமதிக்காதீர்கள்.

சுய-தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியே செல்வதற்கான அனுமதிக்கப்பட்டுள்ள காரணங்கள்

நீங்கள் எப்போதும் முககவசம் அணிந்து பின்வரும் காரணங்களுக்காக தங்குமிடத்தை விட்டு வெளியே சென்று வரலாம்:

 • ஏதேனும் தேவைப்படும் மருத்துவ பரிசோதனை அல்லது நோய்தொற்று சோதனைக்காக ஆஜராக அல்லது அத்தகைய சோதனைக்கு உட்படுவதற்கு
 • உங்கள் சுய-தனிமைப்படுத்தல் முடியும் வரை காத்திருக்க இயலாத ஒரு நோய் சிகிச்சைக்காக ஒரு அத்தியாவசிய சுகாதார சேவையை அணுக
 • உங்கள் சொந்த அல்லது மற்றொருவரின் உயிரை காப்பாற்ற அல்லது சுகாதாரம் அல்லது பாதுகாப்பை பேண வேறொரு இடத்திற்கு புலம்பெயர 
 • நீங்கள் வசிக்கும் அண்டைபுறத்திலுள்ள வெளிப்புற வளாகத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள - நீச்சல்குளம் போன்ற பகிர்வு உடற்பயிற்சி வசதியை பயன்படுத்தாதீர்கள்.
 • உங்கள் சுய-தனிமைப்படுத்தல் காலம் முடியும்வரை உயிர்பிழைக்கும் சாத்தியமற்ற ஒரு உறவினரை பார்க்க செல்லுவதற்கு 
 • இறந்த ஒரு உறவினரின் உடலை உங்கள் சுய-தனிமைப்படுத்தல் காலத்திற்கு பிறகு பார்க்கவோ அவரது ஈமசடங்கு அல்லது tangihanga-ல் கலந்து கொள்ளவோ இயலாது என்றால்

2. தொடர்பு தடமறிதல்

உங்களுக்கு COVID-19 நோய்தொற்று உள்ளது என்று அனைவரிடமும் தெரிவியுங்கள்

உங்களுக்கு COVID-19 நோய்தொற்று உள்ளது என்று உங்கள் உடன் தங்குபவர்கள், வீட்டு உரிமையாளர், நீங்கள் நேரத்தை செலவிட்டவர்கள், மற்றும் வேறுபல நெருங்கிய தொடர்புகள் அனைவரிடமும் கூறுங்கள்.

உங்களுக்கு COVID-19 நோய்தொற்று உள்ளது என்று எவ்வாறு மக்களிடம் தெரிவிப்பது | covid19.health.nz (external link)

ஆன்லைன் தொடர்பு தடமறிதல் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்

சுகாதார அமைச்சகத்தின் தொடர்பு தடமறிதல் படிவத்தை அதிகாரபூர்வ எண்களான 2328 அல்லது 2648 இலிருந்து வந்துள்ள குறுஞ்செய்தியில் காணப்படும் 6-இலக்க அணுகல் குறியீட்டின் உதவியால் பூர்த்தி செய்யுங்கள். இதை பூர்த்தி செய்ய 5 முதல் 10 நிமிடங்கள் எடுக்கும். 

தொடர்பு தடமறிதல் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள் | சுகாதார அமைச்சகம் (external link)

3. ஆதரவு பெறுதல்

உங்களுக்கு உணவோ மருந்துகளோ தேவைப்பட்டால்

உங்களுக்கு உணவோ அல்லது அத்தியாவசிய பண்டங்களோ உங்கள் சுய-தனிமைப்படுத்தல் போது தேவைப்பட்டால் இவற்றை உங்கள் வீட்டில் கொண்டு வந்து சேர்க்க உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை கேளுங்கள். நீங்கள் பண்டங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தொடர்பற்ற விநியோகத்திற்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு சுகாதார ஆலோசனை தேவைப்பட்டால்

உங்கள் அறிகுறிகளுக்கு எவ்வாறு சிகிச்சை செய்வது அல்லது உங்களுக்கு அறிகுறிகள் மோசமடைந்தால் ஹெல்த்லைனை அழையுங்கள். ஒரு மொழிபெயர்த்துரைப்பாளர் சேவைக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

 • 0800 358 5453— ஒரு நியூசிலாந்து எண்ணிலிருந்து
 • +64 9 358 5453— ஒரு சர்வதேச SIM இலிருந்து

உங்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டால்

நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக தொகை செலுத்த வேண்டியிருக்கும். பயணம் மேற்கொள்ளும் முன் முழு பயண காப்பீடு திட்டத்தை வாங்குமாறு பயணிகளுக்கு பரிந்துரைக்கிறோம்.

நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் அல்லது நிரந்தர பிரஜை அல்லது இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்றால் ஒரு பதிலீடு சுகாதார ஒப்பந்தம் உள்ளது. அதாவது சுகாதார பராமரிப்பிற்காக நியூசிலாந்து குடிமக்கள் என்ன தொகை செலுத்துகின்றனரோ அதை மாத்திரம் நீங்கள் செலுத்தும் வசதி.

உங்கள் தூதரகம் உங்களுக்கு உதவலாம்

நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டலோ உங்களுக்கு தூதரக உதவி தேவைப்பட்டாலோ உங்கள் தூதரகம், கான்சுலேட் அல்லது ஹை கமிஷனை தொடர்பு கொள்ளுங்கள்.

நியூசிலாந்திலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் | வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வணிக அமைச்சகம் (external link)

ஏதேனும் ஒரு அவசர சூழ்நிலையில்

உங்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால்  111 என்ற எண்ணை உடனே அழைக்கவும் நீங்கள் அழைக்கும்போது உங்களுக்கு COVID-19 உள்ளது என்பதை அவர்களிடம் கூறுங்கள். உங்களுக்கோ அல்லது உங்கள் பராமரிப்பில் உள்ளவருக்கோ ஏற்படும் பின்வரும் கோளாறுகளை இது உள்ளடக்கும்:

 • சுவாசிப்பதில் சிரமம்
 • சுவாசிப்பதில் சிரமம்
 • மயக்கமடைதல் அல்லது சுயநினைவற்று போதல்.

4. சுய-தனிமைப்படுத்தலை முடிப்பது

நீங்கள் சுய-தனிமைப்படுத்தலை 7 நாட்களுக்குள் முடித்து கொள்ளலாம்.

உங்களுக்கு இன்னமும் உடல்நல குறைவிருந்தால் உங்கள் அறிகுறிகள் மறைந்தபின் 24 மணிநேரம் வரை தங்குமிடத்திலேயே இருங்கள். 

சுய-தனிமைப்படுத்தலை விட்டு விலக நீங்கள் அதிகாரபூர்வ செய்திக்காக காத்திருக்க தேவையில்லை.

நீங்கள் சோதனை செய்துக்கொள்ள தேவையில்லை - சோதனை முடிவு நேர்மறையாகவே அமையலாம், ஆனால் இதன் அர்த்தம் உங்களுக்கு தொற்றுள்ளது என்பதல்ல.

உங்கள் குடும்ப அல்லது 'பயண குமிழ்' உறுப்பினர்கள் அவர்களது சுய-தனிமைப்படுத்தலை நீங்கள் அவர்களது நாள் 7 எதிர்மறை சோதனை முடிவை சமர்பித்த அதே நேரத்தில் அவர்களுக்கு எவ்வித புதிய அல்லது மோசமடையும் அறிகுறிகள் ஏற்படாமலிருந்தால் பூர்த்தி செய்யலாம்.   அவர்கள் சோதனை முடிவு நேர்மறையாக அமைந்தால் அவர்கள் தங்கள் 7 நாள் சுய-தனிமைப்படுத்தலை தொடங்க வேண்டும்.

நீங்கள் பூரணமாக குணமடைந்த பின்

நீங்கள் COVID-19 இலிருந்து குணமடைந்து சுய-தனிமையிலிருந்து விலகியவுடன் உங்கள் குணமடைதல் தொடர்பாக நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும் மற்றும் அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கு COVID-19 ஏற்பட்டு குணமடைந்திருந்து

நீங்கள் வீட்டிற்கோ அல்லது வேறொரு இடத்திற்கோ பயணம் செய்யுமுன்

நீங்கள் ஒரு எதிர்மறை COVID-19 சோதனை முடிவையோ அல்லது நீங்கள் பயணிக்கும் முன் நோயிலிருந்து குணமடைந்து விட்டீர்கள் என்ற மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டுமா என்று சரிபாருங்கள். நீங்கள் சமீபத்தில்தான் COVID-19 இலிருந்து குணமடைந்திருந்தால், உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக இருக்கலாம். 

உங்கள் சோதனை முடிவு எதிர்மறையாக அமைந்தால்

உங்கள் சோதனை முடிவு எதிர்மறையாக அமைந்து ஆனால் COVID-19 அறிகுறிகள் இன்னமும் உங்களிடம் தென்பட்டால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் 48 மணிநேரம் கழித்து மற்றொரு RAT சோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தால் ஹெல்த்லைனை பின்வரும் எண்களில் அழையுங்கள்:

 • 0800 358 5453 — ஒரு நியூசிலாந்து எண்ணிலிருந்து
 • +64 9 358 5453 — ஒரு சர்வதேச SIM இலிருந்து

COVID-19 நோய்தொற்று உள்ள ஒருவருக்கு RAT சோதனையில் எதிர்மறை முடிவு வரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் மாதிரியில் போதுமான அளவு வைரஸ் இருந்திருக்கவில்லை அல்லது சோதனை சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற காரணங்களால்.

Last updated: at