தனிநபர் மற்றும் குடும்பங்களுக்கான ஆதரவு | Support for individuals and families

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிதி மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான ஆதரவு பற்றிய தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மனநலம்

உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், ஒரு சுகாதார நிபுணருடன் பேசுவது அவசியம்.

உங்கள் மனநலத்தை எவ்வாறு பராமரிப்பது

நம் மனநலத்தையும் நம் அன்புக்குரியவர்களின் மனநலத்தையும் அதிகரிக்க நாம் அனைவரும் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன:

  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து இணைந்திருங்கள் — இது நமது நல்வாழ்வுக்கு முக்கியமானது மற்றும் நாம் பாதுகாப்பாகவும், குறைந்த மன அழுத்தத்துடனும், குறைந்த கவலையுடனும் இருக்க உதவுகிறது.
  • உங்கள் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள் — அதிகப்படியான அழுத்தத்தை, பதட்டத்தை, கவலையை அல்லது பயத்தை உணர்வது முற்றிலும் இயல்பானது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைக் கவனிக்கவும் வெளிப்படுத்தவும் நேரத்தை ஒதுக்கவும்.
  • சாத்தியமான இடங்களில் நேரப்படி செய்வதை கடைபிடிக்கவும் — உங்கள் வாழ்க்கையில் சில ஒழுங்குமுறைகளை உருவாக்க முயற்சிக்கவும், மற்றும்நொறுக்குத்தீனி, மது, புகைபிடித்தல் அல்லது வாப்பிங் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை அதிகரிக்க முயற்சிக்காதீர்கள்.
  • உதவி தேவைப்படும் பிற நபர்களைச் சந்திக்கவும் — மன அழுத்தம் அல்லது கவலையுடன் உள்ளவர்களுக்கு உதவுவது, உங்களுக்கும் ஆதரவைப் பெறும் நபருக்கும் பயனளிக்கும்.
  • ஆன்லைனில் உங்கள் நேரத்தை செலவிடுவதை குறைத்துக்கொள்ளவும் — குறிப்பிட்ட நேரத்தில், ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பார்க்கவும்.

யாரிடம் நீங்கள் பேசலாம்

மன நலனுடன் போராடும் எவருக்கும் ஆதரவு, தகவல் மற்றும் உதவியை வழங்கும் ஹெல்ப்லைன்கள் உள்ளன. அனைத்து சேவைகளும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் கிடைகின்றன.

மனநல ஹெல்ப்லைனை கண்டுபிடிக்க

சேவைகள் மற்றும் ஆதரவு

உதவி கேட்பதில் ஏதும் தவறில்லை. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம், உங்களுக்கு சமுதாயமும் மற்றும் ஏஜென்சிகளும் உதவி செய்ய இயலும். உங்களுக்கு ஆலோசனை, உதவி, அல்லது ஆதரவு தேவைப்பட்டால் கிடைக்கபெறும். நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் எனில் பல்வேறு அரசு துறைகளை அழைக்கும்போது ஒரு மொழி பெயர்ப்பாளரை கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

Last updated: