உணவு அல்லது அத்தியாவசிய பொருட்களுக்கான அணுகல் | Access to food or essential items

நம் அனைவருக்கும் COVID-19 லாக்டவுன் முழுவதும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேவை, எனவே தயவுசெய்து அவை இல்லாமல் போக வேண்டாம். உங்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான பல வழிகள் பற்றிய தகவல்கள் இந்த தகவல் தாளில் உள்ளன.

உணவு விநியோகம்

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அல்லது உங்களால் உணவு அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்றால், நீங்கள் உங்களுடைய குடும்பத்தினர், whānau, உறவினர்கள், நண்பர்கள் அல்லது அண்டையரை உங்களுக்காக பிற பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை கொண்டுவந்து தருமாறு கேட்கலாம். உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உங்களுக்கு கொண்டு வந்து தர முடியுமா என்று உங்கள் ஆதரவு நெட்வொர்க் ஆகிய குடும்பம், whānau, நண்பர்கள் மற்றும் அண்டையர் ஆகியோருடன் கலந்து பேசுங்கள்.

சூப்பர்மார்க்கெட் ஹோம் டெலிவரி, உணவுப் பொட்டலங்கள், உறைந்த முன் தயாரிக்கப்பட்ட உணவு, சந்தா உணவுப் பெட்டிகள் அல்லது வேறு முழு உணவு விநியோக சேவை போன்ற கீழ்கண்ட உணவு விநியோகத்தை முயற்சிக்கவும்:

நீங்கள் உங்களுடைய சூப்பர் மார்க்கெட்டின் கிளிக் அண்ட் கலெக்ட் சேவையை பயன்படுத்தலாம், மேலும் உள்ளூர் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது பக்கத்து வீட்டுக்காரரை உங்களுக்காக மளிகைப் பொருட்களை கொண்டு வந்து வைக்கும்படி கேட்கலாம். 

உங்களுடைய உள்ளூர் சூப்பர் மார்க்கெட் அல்லது பால் பண்ணையை தொடர்புகொண்டு, அவர்கள் மளிகை பொருட்களை விநியோகிக்கின்றார்களா மற்றும் எப்படி ஆர்டர் செய்வது என்று கேட்டறியவும். ஆன்லைன் ஷாப்பிங்கைப் பயன்படுத்த வேண்டிய நபர்களுக்கு சில முன்னுரிமை இடங்களை, உங்கள் சூப்பர் மார்க்கெட் ஒதுக்கியிருக்கலாம். 

உணவு விநியோகிக்கப்படும் போது பாதுகாப்பாக இருப்பது

  • விநியோகங்கள் தொடர்பற்றதாகவும் உள்ளூரிலேயும் இருக்க வேண்டும்.
  • நீங்கள் பொருட்களை விநியோகிக்கிறீர்கள் என்றால், 2 மீட்டர் இடைவெளியில் இருப்பதையும் முக கவசம் அணிவதையும் நினைவில் கொள்ளவும்.
  • உங்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட இருந்தால், அவற்றை வழங்குவோரிடமிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்கவும். முகமூடி அணியவும் மற்றும் பொருட்களை வழங்கிய பிறகு கைகளை கழுவி சுத்தப்படுத்தவும் நினைவில் கொள்ளுங்கள். 

செல்லவும்: www.Covid19.govt.nz/about-this-site/contact-and-support

உணவு வாங்க நிதி உதவி

உணவு வாங்க உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், வொர்க் அண்ட் இன்கம் உதவலாம்.

அவசர நிதி உதவி மற்றும் தற்போதைய தேவைகளுக்கு வொர்க் அண்ட் இன்கம் வலைத்தளத்திற்கு வருகை தரவும்.

நீங்கள் ஒரு முக்கிய நன்மைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் உணவு உதவிக்கான உங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.

'COVID-19 க்கு எதிராக ஒன்றுபடுங்கள்' என்ற இணையதளத்தில் உள்ள COVID-19 நிதி உதவி கருவியைப் பயன்படுத்தி, உங்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கும் என்பதை அறியலாம்.

செல்லவும்:

உணவு வங்கிகள்

கீழ்கண்ட ஃபேமிலி சர்வீசஸ் டைரக்டரி இணையதளத்தில் தேடுவதன் மூலம் உங்கள் உள்ளூர் உணவு வங்கியை நீங்கள் கண்டறியலாம்:

Family Services Directory (external link)

உங்களுக்கு உணவு விநியோகிக்கப்பட முடியாவிட்டால்

நீங்கள் முயற்சித்து மேலே உள்ள ஏதேனும் விருப்பங்கள் மூலம் ஆதரவை அணுக முடியவில்லை என்றால், உங்கள் உள்ளூர் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசர மேலாண்மை (CDEM) குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

செல்லவும்: www.civildefence.govt.nz/find-your-civil-defence-group (external link)