முககவசம் அணிதல் | Wearing a face mask

முகக்கவசங்கள் அணிவதே நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்கும் ஒரு வழியாகும். சுகாதார சேவை வளாகங்களுக்குச் செல்லும்போதோ அல்லது மூடிய, நெரிசலான மற்றும் அடைக்கப்பட்ட இடங்களில் நீங்கள் இருக்கும்போதோ முகக்கவசம் அணியுமாறு பரிந்துரைக்கிறோம்.

எங்கெல்லாம் முகக்கவசங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன

சுகாதார மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு அமைப்புகளில் COVID-19 மற்றும் வேறு பல சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க,  இன்னமும் முகக்கவசம் அணிவது ஒரு முக்கியமான வழியாக இருக்கின்றது.

மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பல் மருத்துவர்கள் போன்ற சுகாதார சேவைகளுக்கு வருகை தரும்போது முகக்கவசம் அணிய பரிந்துரைக்கிறோம்.

சுகாதார வழங்குநர்கள் பின்வருமாறு உங்களை கேட்டுக்கொள்ளலாம்:

  • COVID-19 காரணமாக கடுமையாக உடல்நல பாதிப்படையும் அதிக ஆபத்தை கொண்டவர்களைக் காக்க, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அல்லது இடங்களில் முகக்கவசம் அணிய.
  • அனைத்து ஊழியர்களோ அல்லது பார்வையாளர்களோ மருத்துவ அலுவலக வளாகங்களுக்குள் முகக்கவசத்தை அணிய வேண்டிய தொடரும் கட்டாயத்தைப் பற்றி வலியுறுத்த.
  • உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பொறுப்புகளுடன் இணங்கும் விதத்தில் முகக்கவசம் அணிய.

குறிப்பாக உடல்நிலை மிகவும் சீர்கெடும் அபாயம் அதிகம் உள்ளவர்களை சந்திக்கும் போது முகக்கவசம் அணிவது முக்கியம். இதில்  முதியவர்கள் மற்றும் கௌமாதுவா, சிசுக்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், உடல்நிலை குன்றிய/நோய்வாய்ப்பட்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பிற குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

நீங்கள் நோய் தொற்று அபாயத்தை கொண்டிருந்து உங்களுக்காக மருத்துவ சேவையைப் பெற ஒரு சுகாதார வழங்குநரைப் பார்க்கவோ அல்லது சந்திக்கவோ நீங்கள் விரும்பினால், நன்கு பொருந்தும் முகக்கவசம் தொற்று துகள்கள் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுத்து உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.

எங்கெல்லாம் முகக்கவசங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன

பின்வருபவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் முகக்கவசம் அணியுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்:

  • குடும்ப தொடர்பாக இருப்பவர் மற்றும் 5 நாட்களுக்கு தினசரி பரிசோதனை செய்து கொள்பவர்
  • COVID-19 தொற்றால் கடுமையாக நோய்வாய்ப்படுவதற்கான அதிக ஆபத்து கொண்டவர்
  • நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க ஆர்வமாக உள்ளவர்.

இந்த இடங்களில் முகக்கவசம் அணியவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்:

  • பேருந்துகள், பயணிகள் ரயில்கள், படகுகள், விமானங்கள், டாக்ஸிகள் மற்றும் சவாரி-பகிர்வுகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து
  • நெரிசலான இடங்கள்
  • மோசமான காற்றோட்டத்துடன் கூடிய மூடப்பட்ட இடங்கள்
  • நேருக்கு நேர் உரையாடல்கள் போன்ற நெருங்கிய தொடர்பு அமைப்புகள்.

இன்னமும் சில இடங்களில் முகக்கவசம் அணிய நீங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம். இது அவர்களின் முடிவு மற்றும் அரசாங்க சட்ட தேவை கிடையாது.

இலவச முகக்கவசங்கள்

பங்கேற்கும் சேகரிப்பு மையங்களில் இருந்து இலவச விரைவு நோயெதிர்ப்பி சோதனைகளை (RATs) சேகரிக்கும் போது இலவச முகக்கவசங்களை நீங்கள் பெறலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கவோ அல்லது உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் இருக்கவோ தேவையில்லை.

ஹெல்த்பாயின்ட்டில் உங்களுக்கு அருகிலுள்ள சேகரிப்பு மையத்தைக் கண்டறியவும்.

இலவச முகக்கவசங்களை வழங்கும் சோதனை மையத்தைக் கண்டறியவும் | ஹெல்த்பாயிண்ட் (external link)

நீங்கள் கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் இருந்தால் உங்களுக்கு இலவச P2/N95 முகக்கவசங்கள் கிடைக்கும்.

COVID-19 தொற்று காரணமாக கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள்

Last updated: at