COVID-19 திரிபுகள் | COVID-19 variants
வைரஸ்கள் தங்களை மாற்றிக்கொள்வதோ அல்லது பிறழ்வடைவதோ அவற்றின் இயற்கை செயல்முறையாகும். COVID-19 வைரசும் மனிதர்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டுள்ளது. இது டெல்டா மற்றும் ஓமிக்ரான் திரிபுகள் உட்பட புதிய வைரஸ் திரிபுகளுக்கு வழிவகுத்துள்ளது.
COVID-19 இன் வெவ்வேறு திரிபுகள் இந்த வைரஸ் எந்தளவு வேகமாக பரவுகிறது அல்லது இந்த வைரசினால் மக்கள் எந்தளவு நோய்வாய் படுகின்றனர் என்பதை பாதிக்கும்.
டெல்டா திரிபு
டெல்டா திரிபு உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது டெல்டா தொற்றுள்ள மக்கள்:
- இந்த வைரசின் திரிபுகளை விட மேலதிக தீவிரமான COVID-19 நோயை எதிர்கொள்ளலாம்
- மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை அதிகம் கொண்டுள்ளனர்
- அதிகளவில் வைரஸை கொண்டுள்ளதாகவும் (அதிகளவு வைரஸ் சுமை) மற்றும் மற்ற திரிபுகளை விட நீண்ட காலத்திற்கு தொற்று பாதிப்பு கொண்டவர்களாகவும் தெரிகிறது
- நோய்த்தொற்று ஏற்பட்ட சமயத்தில் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் (அறிகுறியற்ற) இருக்கலாம்
தடுப்பூசி மற்றும் டெல்டா
முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொள்வது டெல்டா நோய்த்தொற்றிலிருந்து பெரிய அளவில் பாதுகாப்பை தருகிறது மற்றும் தீவிர நோய், மருத்துவமனை அனுமதி மற்றும் இறப்பிலிருந்து மேலதிக பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.
அறிகுறிநோய்க்கு எதிராக ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களின் செயல்திறன் 64-95% ஆகும். டெல்டா தொற்று காரணமாக மருத்துவமனை அனுமதி அல்லது கடுமையான நோய்க்கு எதிராக ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களின் செயல்திறன் சுமார் 90-96% ஆகும்.
ஓமிக்ரான் திரிபு
ஓமிக்ரான் முதன்முதலில் நவம்பர் 2021 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலக சுகாதார அமைப்பால் அச்சமளிக்கும் பிறழ்வு என்று வகைப்படுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் வேகமாக பரவி தற்போது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ஆரம்ப கால ஆதாரங்கள் டெல்டா உட்பட கோவிட்-19 வைரஸின் முந்தைய வகைகளை விட ஓமிக்ரான் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றன.
வைரஸின் இந்த பிறழ்வு பற்றி நாம் இன்னும் கற்று வருகிறோம். டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஆரம்ப அறிக்கைகள் பின்வருபனவற்றை தெரிவிக்கின்றன:
- ஓமிக்ரான் மிகவும் அதிகளவில் பரவக்கூடியது
- ஓமிக்ரான் முந்தைய அறிகுறிகளை ஏற்படுத்தலாம், ஆனால் மேலும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது
- ஓமிக்ரான் முந்தைய மருத்துவமனை அனுமதி விகிதங்களைக் கொண்டுள்ளது, ஆனால் நோய் தீவிரத்தை தீர்மானிக்க இன்னும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது.
தடுப்பூசி மற்றும் ஓமிக்ரான்
ஆரம்ப பகுப்பாய்வு ஃபைசர் தடுப்பூசி ஓமிக்ரான் ஏற்படுத்தும் அறிகுறியுற்ற நோய்க்கு எதிராக சிறிது பாதுகாப்பை வழங்குகிறது என்று குறிக்கிறது, ஆனால் இந்த பாதுகாப்பு காலப்போக்கில் குறைகிறது. ஃபைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
பூஸ்டர் டோஸ்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்
தடுப்பூசிப் போட்டுக்கொள்வது
COVID-19 தடுப்பூசி இலவசமாக கிடைப்பது, தன்னார்வத்தின் அடிப்படையிலானது மற்றும் நியூசிலாந்திலுள்ள 5 வயது நிரம்பியவர்கள் மற்றும் அதிகமானவர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறுகிறது. இது உங்கள் விசா அல்லது குடியுரிமை நிலைக்கு அப்பாற்பட்டது.
புக் மை வேக்சின் (external link) க்கு வருகை தாருங்கள் அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் எண் 0800 28 29 26 ஐ தொடர்பு கொண்டு உங்கள் வருகையை முன்பதிவு செய்யுங்கள். அனைத்து தொலைபேசி அழைப்புகளும் இலவசம் மற்றும் எங்கள் குழு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாரம் 7 நாட்கள் அடிப்படையில் சேவை வழங்குகிறது. தேவைப்பட்டால் நீங்கள் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரின் சேவையையும் கேட்டு பெறலாம்.
எந்த தடுப்பூசியும் 100% திறனுடையதல்ல. எனவே தடுப்பூசி பெற்ற ஒரு நபர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டு மற்றவர்களுக்கு இந்த வைரஸைப் பரப்பும் சாத்தியமுள்ளது. எனவே நமக்கும் நமது சமூகங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க நாம் தடுப்பூசி உட்பட சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நாம் நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது
தொடக்கத்திலேயே நோய் தாக்கியவர்களை அடையாளம் காண்பது, தொடர்பு கண்காணித்தல் மற்றும் நோயாளிகள் மற்றும் நெருங்கியவர்களை தனிமைப்படுத்துதல் போன்றவை COVID-19 திரிபுகளின் பரவலை நிறுத்தவதற்கு இன்றியமையாதவையாகும்.
கூடிய விரைவிலேயே பின்வருபனவற்றை செய்வதன் மூலம் நாம் சமூக பரவலை தடுக்க இயலும்:
- போக்குவரத்து ஒளி விதிகளைப் பின்பற்றுதல்.
- எச்சரிக்கை நிலை விதிகள் வலியுறித்தினால் முகமூடிகளை அணிவது.
- சாத்தியப்படும் இடங்களில் 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிப்பது.
- உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் இருந்தால் நீங்கள் வீட்டிலேயே இருப்பது மற்றும் 0800 358 5453 என்ற எண்ணில் சோதனை செய்துக்கொள்வது தொடர்பான ஆலோசனைக்காக ஹெல்த்லைனை அழைப்பது.
- நமது NZ COVID டிரேசர் செயலி மூலம் நீங்கள் சென்றிருந்த இடங்களையெல்லாம் QR குறியீடுகள் மூலம் கண்காணிப்பது அல்லது விரிவான குறிப்புகள் பராமரிப்பது.
- NZ COVID டிரேசர் செயலியில் ப்ளூடூத் கண்காணிப்பை செயல்படுத்துவது.