COVID-19 சிகிச்சைக்கான மருந்துகள் | Medicines to treat COVID-19
COVID-19க்கு சிகிச்சை பெற வைரஸ் எதிர்ப்பி மருந்துகளை உட்கொள்ளுதல்
COVID-19 வைரஸ் எதிர்ப்பி மருந்துகள் நேர்மறை COVID-19 சோதனை முடிவு பெற்றவர்கள் அல்லது வீட்டில் COVID-19 ஆல் பாதிப்படைந்தவர்களின் குடும்ப தொடர்பாக விளங்கும் தகுதி பெறுபவர்களுக்கு சிகிச்சையளிக்க கிடைக்கின்றன.
COVID-19 அறிகுறிகள் தோன்றிய முதல் ஐந்து தினங்களுக்குள்ளே நீங்கள் COVID-19 மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
COVID-19 நோய்தொற்று ஏற்பட்டு விரைவிலேயே இம்மருந்துகளை உட்கொண்டால் இவை மருத்துவமனை அனுமதி மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகளை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
COVID-19 நோய்தொற்று ஏற்பட்டுள்ள தகுதியானவர்களுக்கு இம்மருந்துகள் இலவசம். தகுதி பெற்றால் நீங்கள் உங்கள் வாடிக்கையான மருத்துவ பராமரிப்பு வழங்குனரிடமிருந்து மருந்து சீட்டு பெற முடியும் அல்லது மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமலேயே ஒருசில மருந்தகங்களில் பெற முடியும்.
உங்களுக்கு COVID-19 நோய்தொற்று ஏற்பட்டால் நீங்கள் சுய-தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். எனவே இம்மருந்துகளை உங்கள் நண்பர்கள், whānau அல்லது வேறு மாற்று உபாயங்கள் மூலம் வீட்டிற்கே தருவித்துக்கொள்ள ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். ஒருசில மருந்தகங்கள் மருந்துகளை உங்கள் வீட்டிற்கே கொணர்ந்து சேர்பிக்கும்.
எவ்வாறு சுய-தனிமைபடுத்திக்கொள்வது
COVID-19 மருந்துகளுக்கான தகுதி
COVID-19 இன் மூலம் தீவிர உடல்நல பாதிப்பு அடையும் அபாயமுள்ளவர்கள் COVID-19 மருந்துகள் உதவியுடன் சிகிச்சை பெறும் தகுதி பெறுவார்கள்.
தயவுசெய்து கவனிக்கவும்: இம்மருந்துகள் தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தாலும் இவை அனைவருக்கும் ஏற்புடைத்ததன்று. நீங்கள் தகுதி பெறுகிறீர்களா அல்லது இந்த மருந்துகள் உங்களுக்கு உகந்தனவா என்பது பற்றி அறிய உங்கள் பொது மருத்துவர் அல்லது மருந்தகத்தை கலந்து ஆலோசிக்கவும்.
COVID-19 வைரஸ் எதிர்ப்பி மருந்துகளுக்கு தகுதி பெற நீங்கள் பின்வருபனவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்:
- COVID-19 அறிகுறிகள் கொண்டிருக்க வேண்டும் மற்றும் COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக இருக்க வேண்டும் அல்லது
- உங்களுக்கு அறிகுறிகள் இருக்க வேண்டும் மற்றும் COVID-19 நோய்தொற்று உள்ள ஒரு நபரின் குடும்ப தொடர்பாக இருக்க வேண்டும்.
பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றும் கூடுதலாக இருக்க வேண்டும்:
- உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது
- உங்களுக்கு டவுன் குறைபாடு உள்ளது
- உங்களுக்கு சிக்கில் செல் நோயுள்ளது
- COVID-19 காரணமாக நீங்கள் ஏற்கனவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள் மற்றும் மீண்டும் உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக உள்ளது
- உங்கள் வயது 65 அல்லது அதற்கும் அதிகம்
- நீங்கள் Māori அல்லது பசிபிக் தீவு வம்சாவளியை சார்ந்தவர் மற்றும் உங்கள் வயது 50 அல்லது அதற்கும் அதிகம்
- உங்கள் வயது 50 அல்லது அதற்கும் அதிகம் மற்றும் நீங்கள் உங்கள் முதன்மை தடுப்பூசி திட்டத்தை பூர்த்தி செய்யவில்லை (குறைந்தபட்சம் இரண்டு டோசுகள்)
- நீங்கள் மூன்று அல்லது அதிக அபாய மருத்துவ இடர்களில் (external link) இருக்கிறீர்கள்.
கிடைக்கப்பெறும் COVID-19 மருந்துகளின் வகைகள்
சமூகத்தில் COVID-19 உள்ள தகுதி பெறுபவர்களுக்கு சிகிச்சையளிக்க மூன்று COVID-19 வைரஸ் எதிர்ப்பி மருந்துகள் கிடைக்கின்றன:
- ரிடோனாவிர் கலந்த நிர்மட்ரெல்விர் (பாக்ஸ்லோவிட் என்ற வர்த்தக பெயரில் கிடைக்கிறது)
- மோல்னுபிரவீர் (லாகேவ்ரியோ என்ற வர்த்தக பெயரில் கிடைக்கிறது)
- ரெம்டெசிவிர், என்ற ஒரு உட்செலுத்துதல் சிகிச்சை (வெக்லூரி என்ற வர்த்தக பெயரில் கிடைக்கிறது).
பாக்ஸ்லோவிட்
பாக்ஸ்லோவிடில் இரண்டு உட்பொருட்கள் உள்ளன (நிர்மட்ரெல்விர் மற்றும் ரிடோனாவிர்). இவ்விரண்டையும் நீங்கள் சேர்த்தே உட்கொள்ள வேண்டும். இவை உங்கள் உடலிலுள்ள வைரசின் கணிசத்தை குறைக்கின்றன. நீங்கள் பாக்ஸ்லோவிட் டேப்லெட்டுகளை 5 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் எதிர்கொண்டுள்ள உடல்நலக்குறைவுகள் மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், மூலிகை மருந்துகள் அல்லது வைட்டமின் போன்ற உபமருந்துகளை பற்றி உங்கள் வாடிக்கை மருத்துவர் அல்லது மருந்தக நிபுணரிடம் கூறுவது முக்கியம். இவை பாக்ஸ்லோவிடின் பாதுகாப்பை பாதிக்கலாம்.
உங்களுக்கு பாக்ஸ்லோவிடிற்கான முன்-மருந்துசீட்டு கிடைத்திருந்தாலும் நீங்கள் இந்த மருந்துகளை பெறுமுன் மருத்துவமனையில் சோதனை செய்துக்கொள்ள தேவைப்படலாம். எவ்வாறு உட்கொள்வது, அதை உட்கொள்ளுமுன் என்ன சிந்திப்பது மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் உட்பட பாக்ஸ்லோவிட் பற்றிய தகவல்களை பெற ஹெல்த் நேவிகேட்டருக்கு வருகை தரவும்.
பாக்ஸ்லோவிட் சிகிச்சை முடிந்த உடனேயே COVID-19 அறிகுறிகள் திரும்புவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற தகவல்கள் கீழே உள்ளன.
பாக்ஸ்லோவிட் பற்றிய கூடுதல் தகவல்கள் - ஹெல்த் நேவிகேட்டர் (external link)
மோல்னுபிரவீர்
மோல்னுபிரவீர் (லேகவ்ரியோ) என்பது உங்கள் உடலில் வைரசின் கணிசத்தை குறைக்கும் ஒரு மருந்து. நீங்கள் மோல்னுபிரவீர் கேப்ஸ்யூல்களை 5 நாட்களுக்கு உட்கொள்ளவேண்டும்.
எவ்வாறு உட்கொள்வது, அதை உட்கொள்ளுமுன் என்ன சிந்திப்பது மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் உட்பட மோல்னுபிரவீர் பற்றிய தகவல்களை பெற ஹெல்த் நேவிகேட்டருக்கு வருகை தரவும்.
மோல்னுபிரவீர் பற்றிய கூடுதல் தகவல்கள் - ஹெல்த் நேவிகேட்டர் (external link)
ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் (வெக்லுரி) என்பது உங்கள் உடலில் வைரசின் கணிசத்தை குறைக்கும் ஒரு மருந்து. இது வாடிக்கையாக தினம் ஒரு வேளை என்ற வீதத்தில் 3 நாட்களுக்கு உட்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இது 30 முதல் 120 நிமிட காலகட்டத்தில் ஒரு மெதுவான ஊசிகுத்துதல் முறை மூலம் உட்செலுத்தப்படுகிறது (இதற்கு நரம்பு உட்செலுத்துதல் என்று பெயர்.) இந்த சிகிச்சைமுறை பெரும்பாலும் மருத்துவமனையில் மட்டும் கிடைக்கும். இருந்தும் ஊரக அமைப்புகள் போன்ற ஒருசில சமூக வழங்குனர்கள் மூலமும் இது கிடைக்கலாம்.
எவ்வாறு உட்கொள்வது, அதை உட்கொள்ளுமுன் என்ன சிந்திப்பது மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் உட்பட ரெம்டெசிவிர் பற்றிய தகவல்களை பெற ஹெல்த் நேவிகேட்டருக்கு வருகை தரவும்.
ரெம்டெசிவிர் பற்றிய கூடுதல் தகவல்கள் - ஹெல்த் நேவிகேட்டர் (external link)
உங்கள் COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக அமைந்தால்
உங்கள் பொது மருத்துவரிடமிருந்து மருந்து சீட்டு பெறுதல்
தகுதி பெறுகிறீர்கள் என்று நீங்கள் கருதினால் உங்களுக்கு உகந்த COVID-19 மருந்துக்கான மருந்து சீட்டை பெறுவது பற்றி உங்கள் வாடிக்கையான பொது மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கலந்து ஆலோசியுங்கள். வைரஸ் எதிர்ப்பி மருந்துகள் உங்களுக்கு உகந்தனவா என்பதை தீர்மானிக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் வயது, வம்சாவளி, வேறு உடல்நல நிலைகள் மற்றும் தடுப்பூசி நிலை உட்பட அது பல்வேறு காரணிகளை சார்ந்தது.
மருந்துகளை மருந்தகத்திலிருந்து பெறுவது
நீங்கள் தகுதி பெறுகிறீர்கள் என்று கருதினால் நீங்கள் COVID-19 மருந்துகளை மருந்து சீட்டு இல்லாமலேயே உள்ளூர் மருந்தகத்தில் பெறலாம். அது உங்களுக்கு உகந்ததா என்பது பற்றி உங்கள் உள்ளூர் மருந்தகத்துடன் தொலைபேசியில் உரையாடி அறிந்துக்கொள்ளுங்கள். இம்மருந்தை விநியோகம் செய்யுமுன் மருந்தக நிபுணர் ஒரு மருத்துவ பரிசோதனை செய்து உங்கள் தகுதியை தீர்மானிப்பார்.
வைரஸ் எதிர்ப்பி மருந்துகளை விநியோகம் செய்யும் மருந்தகங்களை பற்றி ஹெல்த்பாயின்ட் இல் நீங்கள் கண்டறியலாம்.
இந்த மருந்தகங்களில் (external link) மருந்து சீட்டு தேவை.
இந்த மருந்தகங்களில் (external link) மருந்து சீட்டு தேவையில்லை.
COVID-19 மருந்துகளுக்கான முன்-மருந்து சீட்டுகள்
COVID-19 இன் மூலம் தீவிர உடல்நல பாதிப்பு அடையும் அபாயமுள்ளவர் எனில் நீங்கள் நோய்வாய்படும் முன் உங்கள் வாடிக்கை பொது மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து சீட்டை பெற முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் நோய்வாய்பட்டவுடன் மருந்தகம் உங்கள் மருந்து சீட்டை பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்கும். உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக அமைந்து உங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டால் ஒருசில சூழ்நிலைகளில் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அல்லது உங்கள் மருந்தகம் போன்ற வேறு உபாயங்கள் மூலம் இம்மருந்துகளை வீட்டிற்கே தருவித்துக்கொள்ளலாம்.
உங்கள் உடல்நலம் பாதிப்படைவதற்கு முன் ஒரு மருந்துசீட்டை பெறுவது உகந்ததா என்று உங்கள் சுகாதார வழங்குனரிடம் கலந்து ஆலோசியுங்கள். நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது உங்களுக்கு COVID-19 நோய்தொற்று ஏற்படும் அபாயத்தின் பொருட்டு உடன் எடுத்துசெல்ல உங்களுக்கு முன்-மருந்து சீட்டு கிடைக்காது.
சிகிச்சைக்கு பின் திரும்பும் அறிகுறிகள்
ஒருசிலருக்கு பாக்ஸ்லோவிட் சிகிச்சையை முடித்த பின்பு அறிகுறிகள் மீண்டும் ஏற்படலாம். இதற்கு பெயர் பாக்ஸ்லோவிட் மீளல் என்பதாகும்.
பாக்ஸ்லோவிட் மீளலை எதிர்கொள்ளும் மக்களுக்கு உடல்நலம் தீவிரமாக குன்றுவதாக தோன்றவில்லை. அறிகுறிகள் வழக்கமாக மிதமாக உள்ளன மற்றும் மூன்று நாட்களுக்குள் மறைகின்றன.
வைரஸ் எதிர்ப்பி மருந்துகளை உட்கொண்டிருந்தாலும் COVID-19 இலிருந்து மீண்டு வரும் ஒருசிலருக்கு அறிகுறிகள் வந்து போகும் வண்ணம் இருக்கும். இது இயற்கையானதுதான்.
பின்வரும் சூழ்நிலைகளில் உங்களுக்கு அறிகுறிகள் மறைந்தபின் 24 மணிநேரம் வரை நீங்கள் வீட்டிலேயே தங்கி குணம் பெறவேண்டும்:
- ஐந்து-நாள் பாக்ஸ்லோவிட் சிகிச்சையை பூர்த்தி செய்த பின் அறிகுறிகள் திரும்பினால்
- உங்களுக்கு முதல் அறிகுறிகள் ஏற்பட்டு அல்லது உங்கள் சோதனை முடிவு நேர்மறையாக அமைந்து 28 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான தினங்கள்தான் ஆகியுள்ளன என்றால்
இக்காலகட்டத்தில் அறிகுறிகள் திரும்பினால் மீண்டும் ஒருமுறை பாக்ஸ்லோவிட் சிகிச்சை எடுக்க வேண்டியதில்லை.
COVID-19 நோய்தொற்று மீண்டும் ஏற்படுவதை பற்றி படிக்கவும் (external link)
உங்களுக்கு அடிப்படையில் ஏதேனும் உடல்நல குறைவு இருந்தால் அல்லது உங்கள் அறிகுறிகள் மோசமடைகின்றன என்றால் ஹெல்த்லைனை 0800 358 5453 என்ற எண்ணிலோ அல்லது உங்கள் வாடிக்கை மருத்துவரையோ அழையுங்கள்.
Last updated: at