வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளல் | Isolating at home

நீங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தால் உங்களுக்கான ஆலோசனை உட்பட தனிமைப்படுத்தி கொள்ளும்போது நீங்கள் என்ன செய்ய முடியும்.

பரிந்துரைக்கப்படும் உங்கள் 5 நாள் தனிமைப்படுத்தலின் போது

உங்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்து லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும், 0 வது நாளிலிருந்து 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.

0 வது நாள் என்பது உங்கள் அறிகுறிகள் தொடங்கிய தினம் அல்லது COVID சோதனையில் நேர்மறை முடிவு பெற்ற தினம் இதில் எது முதலில் வருகிறதோ அத்தினம். இதன் பொருள் நீங்கள் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லக்கூடாது.

இந்த 5 நாட்களில் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமிருந்தால், COVID-19 மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் முகக்கவசம் அணிய வேண்டும்.

நீங்கள் சுகாதார வசதி (மருத்துவ சேவையை அணுகும் காரணம் தவிர) அல்லது முதியோர் பராமரிப்பு வசதிக்கு வருகை தரக்கூடாது அல்லது COVID-19 காரணமாக தீவிரமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஆபத்தில் உள்ள எவருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது.

நீங்கள் வேலைக்குத் திரும்புவது குறித்து உங்கள் பணியாளர் அல்லது உங்கள் குழந்தை பள்ளிக்குத் திரும்புவது குறித்து அவர்களின் பள்ளி முதல்வருடன் விவாதிக்க வேண்டும் ஏனெனில் உங்கள் பணியாளரோ பள்ளியோ கூடுதல் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

நீங்கள் ஒரு அடுக்குமாடி அல்லது பல யூனிட் குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால்

நீங்கள் ஒரு அடுக்குமாடி அல்லது பல-யூனிட் குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், இந்தப் பக்கத்தில் உள்ள அதே தனிமைப்படுத்தல் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்:

 • உங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி சமூகப் பகுதிகளில் செல்ல வேண்டியிருந்தால் முகக்கவசம் அணியுங்கள், எடுத்துக்காட்டாக பொது சலவையகத்தை பயன்படுத்தும் போது
 • அடுக்குமாடி வளாகத்திலுள்ள மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்
 • வேறு யாருடனும் லிஃப்ட்டை பயன்படுத்த வேண்டாம்
 • நீங்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும்போது ஜிம்கள், நீச்சல்குளங்கள் அல்லது வெந்நீர் குளியல்கள் போன்ற பொது பகுதிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

அவசரகாலத்தில், நீங்கள் வாடிக்கையான வெளியேற்ற நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - உங்கள் வீட்டு கதவருகில் ஒரு முகக்கவசத்தை தயாராக வைத்திருக்கவும்.

குழந்தைகளுடன் சேர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுதல்

உங்கள் தமரிகியுடன் சேர்ந்து நீங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது COVID-19 பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும் சில எளிய வழிகள் உள்ளன.

COVID-19 ஆல் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்து ஆனால் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றாலோ குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்து நீங்கள் பாதிக்கப்படவில்லை என்றாலோ நீங்கள் செய்ய வேண்டியவை:

 • உங்களால் முடிந்தளவு அவர்களுடனான உங்கள் தொடர்பைக் குறைத்துக் கொள்ளவும்
 • முடிந்தால் உங்கள் குழந்தையிடமிருந்து விலகி ஒரு தனி அறையில் தூங்குங்கள்
 • முடிந்தவரை உங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும்
 • மற்றவர்களுடன் ஒரே அறையில் இருக்கும்போது முகக்கவசம் அணியுங்கள்
 • காற்றோட்டத்திற்காக ஜன்னல்களை திறந்து வையுங்கள்.

இவற்றில் சில சாத்தியமில்லை என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம், குறிப்பாக சிறு குழந்தைகளுடன் சேர்ந்து தனிமைப்படுத்தலில் இருக்கும்போது. COVID-19 பரவலைக் குறைக்க முகக்கவசங்கள் மற்றும் காற்றோட்டம் குறிப்பாக மிகவும் முக்கியம்.

உடற்பயிற்சி

தனிமைப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் வீட்டிற்கு வெளியே உடற்பயிற்சி செய்யலாம். நீங்கள் உங்கள் சுற்றுப்புறத்தில் உடற்பயிற்சி செய்யலாம், ஆனால் நீச்சல் குளம் அல்லது ஜிம் போன்ற பொது வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக இல்லாவிட்டால் நீங்கள் மற்றவர்களுடன் உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இவற்றின் பொருட்டு கவனமாக இருங்கள்:

 • மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பராமரியுங்கள்
 • மிதமான, பழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்
 • முகக்கவசத்தை உடன் எடுத்துச் செல்லுங்கள் - நீங்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றாலும் ஒன்றை அணிவது உங்களுக்கு மிகவும் வசதியாக உணரலாம்.

Last updated: at