COVID-19 தொடர்புகளை கண்காணித்தல் படிவத்தை எவ்வாறு பயன்படுத்தவது | How to use the COVID-19 contact tracing form
COVID-19 தொடர்புகளை கண்காணித்தல் படிவம்
நீங்கள் எங்கிருந்தீர்கள் என்ற விவரங்களைப் பகிர்வது அதிக ஆபத்துள்ள இடங்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது. மேலும் இது நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க உதவும்.
இந்த COVID-19 தொடர்புகளை கண்காணித்தல் படிவம் கீழ்கண்ட தகவல்களை பாதுகாப்பாக பகிர உதவுகிறது:
- தொடர்பு மற்றும் சுகாதார விவரங்கள்
- அறிகுறிகள்
- குடும்பத் தொடர்புகள்
- அதிக ஆபத்துள்ள இடம்
- COVID ட்ரேசர் டைரி மற்றும் புளூடூத் தரவு
நீங்கள் நேர்மறை PCR சோதனையை அளித்த பிறகு அல்லது உங்கள் நேர்மறை RAT முடிவைப் பதிவேற்றிய பிறகு, இந்தப் படிவத்தை நிரப்ப 2328 எண்ணிலிருந்து குருஞ்செய்தி வழியாக இணைப்பு மற்றும் அணுகல் குறியீடு உங்களுக்கு அனுப்பப்படும். இந்தப் படிவத்தை பூர்த்தி செய்ய 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.
இந்த படிவத்தில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் help@tracingform.min.health.nz என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 0800 555 728 என்ற எண்ணை அழைக்கவும்.
சுகாதார அமைச்சகம் இந்த தகவலை பாதுகாப்பாக சேமித்து வைக்கிறது. இது தொடர்பு தடமறிதல் மற்றும் உங்களுக்கு தேவைப்படும் கூடுதல் ஆதரவு என்னவென்று கண்டறிதல் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த வேலையில் உதவி செய்யும் ஏஜென்சிகளுடன் மட்டுமே தகவல் பகிரப்படுகிறது. COVID-19 தொடர்புகளை கண்காணித்தல் படிவத்தின் தனியுரிமை அறிக்கையைப் (external link) படிக்கவும்.
தொடர்புகளை கண்காணித்தல் படிவத்தைப் பயன்படுத்துதல்
இந்தச் செயல்முறையைத் தொடங்கியவுடன், ஏற்கனவே உள்ளிடப்பட்ட தரவை இழப்பதைத் தவிர்க்க, அதே சாதனம் மற்றும் உலாவியைப் பயன்படுத்தி ஒரே அமர்வில் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
- உங்கள் அணுகல் குறியீட்டை உள்ளிட்டு, உங்கள் பிறந்த தேதியுடன் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். ‘Get started’ (தொடங்குக) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் வழங்கும் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதைப் படியுங்கள். பெட்டியை டிக் செய்யவும், ‘Accept and continue’ (ஒப்புக்கொள் மற்றும் தொடரவும்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படும் முகவரி உட்பட மாற்று தொடர்பு விவரங்களை வழங்கவும்.
- உடல் ஊனம் அல்லது tāngata whaikaha Māori (செயல்பாடற்ற Māori) போன்ற நிலைகள் உட்பட உங்களுக்கு ஏதேனும் சிறப்பு தேவைகள் இருந்தால் அவற்றை தேர்ந்தெடுங்கள்.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ கடந்த ஆறு வாரங்களில் பிரசவித்திருந்தாலோ தேர்ந்தெடுங்கள்.
- உங்களுக்கு வலுவிழந்த நோயெதிர்ப்பு மண்டலம் இருந்தால் தேர்ந்தெடுங்கள் (இந்நிலைகளின் உதாரணங்கள் தரப்பட்டுள்ளன).
- உங்களுக்கு இருக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகளின் விவரங்களை வழங்கவும்.
- நீங்கள் எந்த அறிகுறிகளை அனுபவித்தீர்கள் மற்றும் அவை எப்போது தொடங்கியது என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால், இதை உறுதிப்படுத்தவும், உங்கள் தொற்று காலத்தை தீர்மானிக்க உங்கள் சோதனை தேதியைப் பயன்படுத்துவோம்.
- நீங்கள் நிரந்தரமாக வசிக்காதவர்கள், ஆனால் உங்கள் தொற்றுக் காலங்களில் நீங்கள் யாருடன் இருந்தீர்கள் என்பது உட்பட உங்கள் குடும்பத் தொடர்புகளின் விவரங்களை வழங்கவும்.
- உங்கள் தொற்று காலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள இடங்களுக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்.
- உங்கள் தொற்று காலத்தின் ஒவ்வொரு நாளுக்கும், நீங்கள் அதிக ஆபத்துள்ள இடங்களுக்குச் சென்றிருக்கிறீர்களா என்று கேட்கப்படும்.
- உங்களுக்கு COVID-19 இருப்பதை உங்களின் நெருங்கிய தொடர்புகள் மற்றும் பணியிடம்/கல்வி நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவும். இவர்கள் உங்களுடைய தொற்று காலத்தில் நீங்கள் முகமூடி அணியாத நிலையில் நேரத்தை செலவிட்டவர்கள். அவர்கள் 10 நாட்களுக்கு COVID-19 அறிகுறிகளை சுயமாக கண்காணித்து, அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
- நீங்கள் வழங்கிய தகவலை மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளப்படலாம்.
- உங்கள் COVID டிரேசர் கையேட்டில் ஏதேனும் விவரங்கள் இருந்தால் அவற்றை பகிருங்கள். நீங்கள் பெற்ற SMS இல் COVID-19 தொடர்புகளை கண்காணித்தல் படிவத்தை அணுக நீங்கள் பயன்படுத்திய குறியீடை டைரி பதிவேற்றதிற்க்கும் பயன்படுத்தவும்.
- உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், சமூக மேம்பாட்டு அமைச்சகத்திடம் (MSD) விண்ணப்பிப்பதற்கான இணைப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். ‘Yes’ (ஆம்) அல்லது ‘No’ (இல்லை) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து என்ன நடக்கின்றது, எவ்வாறு சுய-தனிமைப்படுத்திக்கொள்வது மற்றும் எவ்வாறு பொருளாதார மற்றும் வேறு வகை உதவியை பெறுவது என்ற தகவலை கண்டறியுங்கள்.
Last updated: at