நீங்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது கிடைக்கும் உதவி | Help while you are isolating
கிடைக்கப்பெறும் ஆதரவு
பொரும்பாலானவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இதை நிர்வகித்துக்கொள்வார்கள். ஆனால் நீங்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது உங்களுக்கோ உங்கள் குடும்பத்திற்கோ கூடுதல் உதவி தேவைப்பட்டால் பின்வரும் உதவிகள் கிடைக்கலாம்.
- வீட்டு மளிகைப்பொருட்கள் இல்லத்திற்கே தருவிக்கப்படும்
- உடனடி மற்றும் அத்தியாவசிய செலவுகளான உணவு, மருந்து மற்றும் ஒருசில பில் தொகைகளை செலுத்த ரொக்க உதவி
- உங்கள் பகுதியின் சமூக குழுக்கள், iwi மற்றும் பசிபிக் குழுக்கள் ஆகியோரின் ஆதரவு
நீங்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது உதவி கோருங்கள்
தேவைப்பட்டால் யார் வேண்டுமானாலும் உதவி கோரலாம் - நீங்கள் அரசு நன்மையை )benefit( பெறுபவராக இருக்க தேவையில்லை.
நீங்கள் COVID நல்வாழ்வு இணைப்பை 0800 512 337 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாரம் 7 நாட்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பில் இருங்கள்
உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பம் மற்றும் நீங்கள் தொடர்பிலிருக்கும் எந்தவொரு சமூக குழுவுடனும் தொடர்பிலிருங்கள். அவர்களால்:
- நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை சரிபார்க்க முடியும்
- உங்களுக்கு உணவு அல்லது மருந்துகள் போன்ற அடிப்படை விநியோகங்கள் தேவைப்படுகின்றனவா என்று சரிபார்க்க முடியும்.
உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால்
உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ உங்களுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவைப்பட்டாலோ உங்கள் உள்ளூர் சுகாதார பராமரிப்பு வழங்குனர் அல்லது ஹெல்த்லைனை Healthline 0800 358 5453 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.
உங்களுக்கோ COVID-19 நோய் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கோ சுவாசிப்பில் சிரமம், தீவிர நெஞ்சு வலி, மயக்கம், அல்லது உணர்வற்ற நிலை போன்ற அபாயம் ஏற்பட்டால் உடனடியாக 111 என்ற எண்ணை அழையுங்கள்.
நிதி ஆதரவு
COVID-19 நோய்தொற்று காரணமாக வீட்டிலேயே இருக்கவேண்டியவர்களுக்கு நிதி ஆதரவு உள்ளது.
நல்வாழ்வு ஹெல்ப்லைன்கள் மற்றும் ஆதரவு
உங்களால் சமாளிக்க முடியவில்லை என்று உணர்ந்தாலோ மற்றவர்களை பற்றி நீங்கள் கவலை கொண்டிருக்கிறீர்கள் என்றாலோ ஒரு மருத்துவ தொழில்முறையாளரிடம் நீங்கள் பேசுவது முக்கியம்.
Last updated: at