உங்களுக்கு COVID-19 ஏற்பட்டு குணமடைந்திருந்து | After you have had COVID-19

நீங்கள் COVID-19 இலிருந்து குணமடைந்த பின் சுய-தனிமைப்படுத்தலை விட்டு நீங்கியபின் பூரண குணத்திற்காக நீங்கள் ஒருசிலவற்றை செய்ய வேண்டும் மற்றும் ஒருசிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இயல்பான செயல்பாடுகளுக்கு திரும்புதல்

நீங்கள் COVID-19 இலிருந்து மீண்டு வருகையில் சுலபமாக அயர்ச்சியடைவதையோ சுவாசமற்று போவதாகவோ நீங்கள் உணரலாம். இது உடல்நலம் குன்றினால் பொதுவாக ஏற்படுவதுதான்.

உங்கள் இயல்பான செயல்பாடுகளுக்கு நீங்கள் திரும்புகையில் இதை நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளவும். பின்வருபனவற்றை உறுதிபடுத்தவும்:

 • நிறைய தூக்கத்தை நாடுங்கள்
 • நன்றாக உணவு உட்கொள்ளுங்கள்
 • தேவைப்பட்டால் ஓய்வெடுங்கள்
 • உங்கள் வேகத்தை திட்டமிடுங்கள்

உங்களுக்கு ஏதேனும் அச்சமிருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார வல்லுனரிடம் உரையாடுங்கள்.

பணிக்கு திரும்புதல்

உங்கள் சுய-தனிமைப்படுத்தல் காலம் முடிந்தபின்னும் உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி குணம் பெறுங்கள். இது உங்கள் அறிகுறிகள் மறைந்த 24 மணிநேரம் பிறகு வரையிலும் தொடரவேண்டும்.

நீங்கள் பணிக்கு திரும்புவதற்கான உகந்த நேரம் எப்போது என்பதை பற்றி உங்கள் மேலாளர் அல்லது கண்காணிப்பாளரிடம் பேச வேண்டும்.

பள்ளிக்கு திரும்புதல்

உங்கள் சுய-தனிமை காலம் முடிந்தபின்னும் உங்களுக்கோ உங்கள் குழந்தைக்கோ அறிகுறிகள் தொடர்ந்தால் நீங்கள் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி குணம் பெறவேண்டும். இது உங்கள் அறிகுறிகள் மறைந்த 24 மணிநேரம் பிறகு வரையிலும் தொடரவேண்டும்.

இது ஆரம்ப கல்வி, பள்ளிகள், kura மற்றும் மூன்றாம் நிலை கல்வி ஆகியனவற்றிற்கு பொருந்தும்.

பள்ளிக்கு திரும்புவதற்கு நீங்கள் எதிர்மறை RAT அல்லது PCR சோதனையின் சான்றை சமர்பிக்க தேவையில்லை.

COVID-19 அறிகுறிகள் தோன்றி 10 நாட்களுக்கும் அதிக காலம் கடந்துவிட்டது மற்றும் குழந்தைகள் இனியும் உடல்நலம் குன்றியிறாமல் இருந்தால் அவர்களால் மற்றவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் இல்லை மற்றும் அவர்கள் பள்ளிக்கு திரும்பலாம்.

ஒரு குழந்தை இன்னமும் உடல்நலமற்று இருந்தாலோ அதன் அறிகுறிகள் 10 நாட்களுக்கு பின்னர் மோசமடைந்தாலோ அக்குழந்தை பள்ளிக்கு திரும்ப கூடாது. உங்கள் மருத்துவரிடம் நீங்கள் பேச வேண்டும் அல்லது ஹெல்த்லைனை 0800 358 5453 என்ற எண்ணில் அழைக்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கு திரும்புதல்

உங்களுக்கு உடல்நலம் குன்றியிருந்து அதிகளவில் உடற்பயிற்சி செய்யாமலோ சுற்றி திரியாமலோ இருந்திருந்தால் உங்கள் உடல் தன் இயல்பான உடற்பயிற்சி அளவுகளுக்கு திரும்புவதற்கு சிறிது கால அவகாசம் தேவை.

உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார வல்லுனர் உங்கள் சூழ்நிலையில் எவ்வாறு உடற்பயிற்சிக்கு திரும்புவது என்பது பற்றி மேலதிக ஆலோசனை தர இயலும். உடற்பயிற்சிக்கு திரும்புவது பற்றி மேலதிக தகவலை நீங்கள் ஹெல்த் நேவிகேட்டர் வலைதளத்தில் பெறலாம்:

COVID-19க்கு பிறகு உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சிக்கு திரும்புவது | healthnavigator.org.nz  (external link)

சுய-தனிமைப்படுத்தலுக்கு பின் உங்கள் வீட்டை தூய்மைப்படுத்துவது மற்றும் கிருமிநீக்கம் செய்வது

பெரும்பாலும் நோய்தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அவர் இருமினாலோ தும்மினாலோ அப்போது COVID-19 நோய்தொற்று பரவுகிறது. ஒரு மாசுற்ற பொருள் அல்லது மேற்பரப்பை நீங்கள் தொட்ட பின் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களை தொடுவது மூலமும் உங்களுக்கு நோய்தொற்று ஏற்படலாம். ஆனாலும் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான்.

இந்த வைரஸ் மேற்பரப்புகளில் சிறிது காலத்திற்கு உயிரோடு இருக்கும். ஆனால் அதன் உடல் மேற்பகுதி மிகவும் சன்னமாக இருப்பதால் திறம்படு சுத்தம் மற்றும் கிருமிநீக்கம் செய்தல் மூலம் இதை சுலபமாக கொல்லலாம்.

கடந்த 24 மணிநேரத்தில் வீட்டு உட்புறத்தில் ஏதேனும் உறுதிசெய்யப்பட்ட COVID-19 நோய்தொற்று ஏற்பட்டிருந்தால் இந்த வைரஸ் மேற்பரப்புகளில் காணப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம். அனைத்து மேற்பரப்புகளும் சுத்தம் மற்றும் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

ஒரு முந்தைய நோய்தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலகட்டத்தில்

உங்களுக்கு புதிய COVID-19 அறிகுறிகள் ஏற்பட்டால்

ஒரு முந்தைய நோய்தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் அல்லது அதற்கு குறைந்த காலகட்டத்தில் (உங்களுக்கு நேர்மறை சோதனை முடிவு கிடைத்த நாள் முதலோ உங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்ட முதல் தினத்திலிருந்தோ) உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் மீண்டும் ஏற்பட்டால் மற்றும்:

 • நீங்கள் குறைந்த அபாயம் உள்ளவர் எனில், நீங்கள் மற்றொரு சோதனை மேற்கொள்ள வேண்டாம் - வீட்டிலேயே இருங்கள் மற்றும் குணம் பெறுங்கள். இது உங்களுக்கு அறிகுறிகள் மறைந்து 24 மணிநேரம் பிறகு வரையிலும் தொடர வேண்டும்
 • உங்களுக்கு அடிப்படையில் சுகாதார சீர்கேடு இருக்கிறது அல்லது மோசமடையும் COVID-19 அறிகுறிகள் ஏற்படுகின்றன என்றால் ஒரு சுகாதார மருத்துவரிடமிருந்தோ ஹெல்த்லைன் எண் 00800 358 5453 இடமிருந்தோ நீங்கள் அறிவுறுத்தலை நாட வேண்டும்.

முந்தைய நோய்த்தொற்றுக்கு 29 நாட்கள் அல்லது அதற்கு மேல்

உங்களுக்கு மீண்டும் COVID-19 அறிகுறிகள் தோன்றி, முந்தைய தொற்று ஏற்பட்டு 29 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆகியிருந்தால், நீங்கள் RAT எடுக்க வேண்டும். சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், நீங்கள் சுய-தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் முதல் நோய்த்தொற்றின் அதே ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். 

ஒரு COVID-19 பரிசோதனை செய்துகொள்ளுங்கள்

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளல்

உங்களுடன் வசிக்கும் ஒருவருக்கு COVID-19 இருந்தால்

நீங்கள் COVID-19 இலிருந்து குணமடைந்தவுடன் உங்கள் உடன் வசிக்கும் ஒருவருக்கு சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், நீங்கள் மீண்டும் 3 மாதங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை.

ஏனெனில் இந்த காலகட்டத்தில் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளது.

குடும்பத் தொடர்புகள்

நாட்பட்ட COVID

நாட்பட்ட COVID என்பது ஆரம்பகட்ட COVID-19 அறிகுறிகளுக்கு பின் தொடரும் அல்லது ஏற்படும் அறிகுறிகளை பற்றி விவரிக்கிறது. இது ஒருவருக்கு முதலில் நோய்தொற்று ஏற்பட்டு 12 வாரங்களுக்கும் அதிகமான காலகட்டத்திற்கு நீடிக்கும்.

COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் 2 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து 12 வாரங்களுக்குள் பூரண குணமடைவார்கள். இருந்தும் ஒருசிலர் குணம்பெறும் வாடிக்கையான காலகட்டத்தையும் தாண்டி பல்வேறு அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நாட்பட்ட COVID நோயின் அறிகுறிகள் வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் வரை நீடிக்கும். அவை பின்வருபனவவற்றை உள்ளடக்கும்:

 • சோர்வு
 • மூச்சுத்திணறல்
 • இருமல்
 • தொண்டை எரிச்சல்
 • நெஞ்சு இறுக்கம்
 • நெஞ்சு வலி
 • முனைப்பு செலுத்துதலில் சிரமம், கற்றல்சார் குறைபாடு அல்லது 'மூளையில் மூடுபனி'
 • தூங்குவதில் சிரமம்
 • ஊசிகுத்துதல் போன்ற உணர்வு
 • மயக்க உணர்வு
 • மூட்டு வலி
 • தசை வலி.

நாட்பட்ட COVID-ஐ நிர்வகிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உங்கள் மருத்துவர் அல்லது சுகாதாரக் குழுவின் உதவியைப் பெறவும். COVID-19 சுகாதார பராமரிப்பிற்கு உங்கள் அறிகுறிகள் தோன்றிய முதல்நாளிலிருந்து அல்லது உங்களுக்கு நேர்மறை சோதனை முடிவு கிடைத்த தினத்திலிருந்து இதில் எது முன்னதாக வருகிறதோ அதிலிருந்து 6 வாரம் வரை முழுதும் நிதியாதரவு கிடைக்கிறது. 

சுகாதார அமைச்சின் இணையதளத்தில், பொதுவாக தெரிவிக்கப்பட்ட அறிகுறிகள் உட்பட, நாட்பட்ட COVID பற்றிய கூடுதல் தகவல்களைக் காணலாம்:

நாட்பட்ட COVID | health.govt.nz (external link)

நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் தடுப்பூசி போடுங்கள்

நீங்கள் குணமடைந்ததும், தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது உங்கள் பூஸ்டரை பெற்றில்லை என்றாலோ நீங்கள் இன்னமும் தடுப்பூசி போட பரிந்துரைக்கப்படுகிறது.

குணமடைந்த பின் COVID-19 தடுப்பூசி பெற நீங்கள் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

Last updated: at