உங்களுக்கு தெரிய வேண்டியதும் நீங்கள் செய்ய வேண்டியதும் என்ன
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் எவரேனுமோ பின்வரும் 1 அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை கொண்டிருந்தால், நீங்கள் விரைவு நோயெதிர்ப்பி சோதனையை (RAT) மேற்கொள்ள வேண்டும்:
- மூக்கு ஒழுகுதல்
- தொண்டை எரிச்சல்
- இருமல்
- காய்ச்சல்
- வாந்தி எடுத்தல்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- நுகர்ச்சி அல்லது சுவை இழப்பு
- மூச்சுவிடுவதில் சிரமம்
வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்து, சோதனை செய்ய வேண்டியிருந்தால், வீட்டில் போதுமான RATகள் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். 2023 முழுவதும் அனைவருக்கும் RATகள் இலவசமாக கிடைக்கும். ஹெல்த்பாயிண்ட் வலைத்தளத்தில் அல்லது 0800 222 478 என்ற எண்ணை அழைத்து விருப்பம் 1 ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் RATகள் மற்றும் முகக்கவசங்களை சேகரித்துக்கொள்ள பங்கேற்கும் பிக்-அப் மையங்களை நீங்கள் கண்டறியலாம்.
உங்களுக்குத் தேவையான எந்த உதவியுடனும் மற்றும் ஆதரவுடனும் நீங்கள் இணைக்கப்படுவதற்கு, எனது COVID பதிவிலோ அல்லது 0800 222 478 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் அழைத்து விருப்பம் 1 ஐத் தேர்வுசெய்தோ உங்கள் RAT முடிவை தெரிவிக்க மறக்காதீர்கள்.
எனது COVID பதிவு | My Covid Record (external link)
தனிமைப்படுத்தி கொள்ளுதல்
வைரஸ் பரவலை நிர்வகிக்க தனிமைப்படுத்தி கொள்ளுதல் ஒரு முக்கியமான வழியாகும்.
உங்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்து லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தாலும், 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கிறோம். உங்கள் அறிகுறிகள் தொடங்கிய தினம் அல்லது COVID சோதனையில் நேர்மறை முடிவு பெற்ற தினம் இதில் எது முதலில் வருகிறதோ, அத்தினத்திலிருந்து உங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தொடங்குங்கள். இதன் பொருள் நீங்கள் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லக்கூடாது.
எவ்வாறு சுய-தனிமைப்படுத்திக் கொள்வது
இந்த 5 நாட்களில் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், COVID-19 மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் முகக்கவசம் அணிய வேண்டும். நீங்கள் செய்யக்கூடாதவை:
- ஒரு சுகாதார வசதிக்கு வருகை தருவது (மருத்துவ சிகிச்சை வசதி பெறும் நோக்கத்தை தவிர)
- முதியோர் பாதுகாப்பகங்களுக்கு செல்வது
- COVID-19 நோயால் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள எவருடனும் தொடர்பில் இருப்பது.
நீங்கள் வேலைக்குத் திரும்புவது குறித்து உங்கள் பணியாளர் அல்லது உங்கள் குழந்தை பள்ளிக்குத் திரும்புவது குறித்து அவர்களின் பள்ளி முதல்வருடன் விவாதிக்க வேண்டும். உங்கள் பணியாளர் அல்லது பள்ளி கூடுதல் முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும்.
உங்கள் அறிகுறிகள் மறைந்து நீங்கள் நலமாக உணர்ந்தால், நீங்கள் இயல்பான நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம். உங்கள் நோய் 10 நாட்கள் வரை தொற்றுநோயாக பரவக்கூடும் என்பதால், நீங்கள் பின்வரும் இடங்களில் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கிறோம்:
- ஒரு சுகாதார வசதிக்கு வருகை தரும்போது (மருத்துவ சிகிச்சை வசதி பெறும் நோக்கத்தை தவிர)
- முதியோர் பாதுகாப்பகத்திற்கு செல்லும்போது
- COVID-19 நோயால் கடுமையாக நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ள யாரையேனும் சந்திக்க செல்லும்போது.
முகக்கவசங்கள்
COVID-19 உள்ளிட்ட சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க, குறிப்பாக சுகாதார மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு அமைப்புகளில், இன்னமும் முகக்கவசம் அணிவது ஒரு முக்கியமான வழியாக இருக்கின்றது.
சுகாதார சேவைகளை அணுக அவற்றிற்கு வருகை தரும்போது முகக்கவசம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் வருகையின்போது சுகாதார பராமரிப்பு வளாகம்/மருத்துவமனையின் முகக்கவச கொள்கையை தயவுசெய்து மதிக்கவும், அதிக ஆபத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற உதவுவதற்காக, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அல்லது குறிப்பிட்ட சுகாதார வசதிகளின் உட்புறங்களில் முகக்கவசம் அணியுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம்.
பங்கேற்கும் சேகரிப்பு மையங்களிலிருந்து இலவச முகக்கவசங்கள் மற்றும் இலவச RATகள் கிடைக்கின்றன.
உங்கள் அருகில் ஒரு சேகரிப்பு மையத்தைக் கண்டறியுங்கள் | Healthpoint (external link)
குடும்பத் தொடர்புகள்
நீங்களோ, அல்லது ஒரு குடும்ப உறுப்பினரோ COVID-19 சோதனையில் நேர்மறை முடிவை பெற்றால் உங்களுடன் வசிக்கும் மற்றவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர் சோதனையில் நேர்மறை முடிவை பெற்ற தினத்திலிருந்து அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தொடர்ந்து RAT பரிசோதனை செய்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வசிக்கிறீர்கள் அல்லது குறைந்தது 1 இரவு அல்லது பகல் (8 மணிநேரத்திற்கு மேல்) செலவிட்டிருந்தீர்கள் எனில் நீங்கள் ஒரு குடும்பத் தொடர்பு என்று கருதப்படுவீர்கள். வீட்டுத் தொடர்புகள் RATஐப் பயன்படுத்தி 5 நாட்களுக்கு தினமும் சோதித்துக் கொள்ள வேண்டும்.
Last updated: at