தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் | Quarantine-Free Travel

தனிமைப்படுத்துதல் இல்லாத பயணம் தொடங்கும் இடம்:

ஆஸ்திரேலியா (Australia) → நியுசிலாந்து இடைநீக்கம் செய்யப்பட்டது (Suspended)

மிகவும் புதுபிக்கப்பட்ட தகவல்களுக்கு ,கோவிட்-19க்கு எதிராக ஓன்றுசேருவோம் (Unite Against COVID-19) வலைதளத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் இல்லாத பயண பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் பயண ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டால், உங்கள் விமான நிறுவனம், பயண முகவர் மற்றும் பயண காப்பீட்டாளரை தொடர்பு கொள்ளலாம்.

எவ்வாறு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் வேலை செய்கிறது?

தற்போது நியூசிலாந்து பின்வரும் நாடுகளுடன் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயண ஏற்பாடுகளை செய்துள்ளது:

 • ஆஸ்திரேலியா
 • குக் தீவுகள்
 • நியு (ஆனால் நியுவிலிருந்து NZ க்கு மட்டுமே)

தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தில் நீங்கள் வருகை தரும் நாடுகளில் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் அல்லது சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் நாடுகளுக்கிடையே பயணிக்கலாம். உங்களுக்கு ஒரு எதிர்மறையான முடிவு வந்த முன்-புறப்பாடு சோதனை சான்று தேவையில்லை.

சென்றடையும் நாட்டின் தகுதி நிபந்தனைகள் மற்றும் குடியேற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் எவரும் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம்.

தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் என்பது நியூசிலாந்து மற்றும் மற்றொரு தனிப்பட்ட நாட்டிற்கு இடையே மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் குக் தீவுகள் மற்றும் நியூசிலாந்து இரு நாடுகளுக்கிடையே தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் மேற்கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினால் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தின் பகுதியாக நியூசிலாந்தில் 14 நாட்கள் தங்க வேண்டும்

நியூசிலாந்துக்கு அல்லது வெளியே பயணம் மேற்கொண்டால் உங்களுக்கு விலக்கு அளிக்கப்படாத வரை நீங்கள் முககவசம் அல்லது முகமூடி அணியவேண்டும். நியூசிலாந்தில் இருக்கும்வரை நீங்கள் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் முககவசம் அணிய வேண்டும். சிலர் முககவசம் அணிய தேவையில்லை

நியூசிலாந்தில் எச்சரிக்கை நிலையிலோ அல்லது ஏதேனும் ஒரு நாட்டில் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயண நிலைமையிலோ மாற்றம் ஏற்பட்டால் இதை பற்றி Covid19.govt.nz (இந்த வலைத்தளம்) அல்லது செய்தி வலைத்தளங்கள் அறிவிக்கும்.

நியூசிலாந்திலோ தனிமைப்படுத்தல் தேவை அல்லாத நாட்டிலோ சமூக பரவல் நிகழ்வுகள் ஏற்பட்டால் அந்தந்த அரசாங்கம் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தை அபாயத்தை மதிப்பிட இடை நிறுத்தலாம் அல்லது ஒரு நீண்டகாலத்திற்கு பயணத்தை நிறுத்தலாம். பயணிகள் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் தங்கள் பயண திட்டங்களில் இடையூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தை பற்றிய சமீபத்திய தகவலை கண்டறியுங்கள்

நியூசிலாந்திற்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம்

நியூசிலாந்திற்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் மேற்கொள்ள:

 • அனைத்து குடியேற்றம் தொடர்பான தேவைகளையும் பூர்த்தி செய்வது
 • நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து பயணிக்கிறீர்கள் எனில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் ஒரு முன்-புறப்பாடு சோதனைக்கு நெகட்டிவ் என்னும் முடிவைப் பெற்றிருப்பது.
 • நியூசிலாந்திலோ நீங்கள் பயணம் செல்லும் நாட்டிலோ 14 நாட்கள் முழுமையாக தங்கியிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து பயணம் செய்தால் தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்திற்கு தகுதிபெற நீங்கள் கடந்த 14 நாட்களுக்கு ஆஸ்திரேலியாவிலோ நியூசிலாந்திலோ தங்கவேண்டும். நீங்கள் நாள் 15 இலிருந்து பயணம் செய்யலாம்
 • புறப்படுமுன் கடந்த 14 நாட்களில் உங்களுக்கு COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால், உங்களுக்கு தொற்று இல்லையென்று ஒரு சுகாதார மருத்துவரிடமிருந்து நீங்கள் எழுத்து பூர்வ அறிவுரை பெறவேண்டும்.
 • COVID-19 சோதனை முடிவுகளுக்கு காத்திருக்க கூடாது
 • பயண உறுதிமொழியை பூர்த்தி செய்ய வேண்டும் (external link)  — நீங்கள் பூர்த்தி செய்யவில்லை என்றால் விமானத்தில் அனுமதி மறுக்கப்படும்
 • புறப்பாடு பகுதியில் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கேள்விகளுக்கு பதிலளியுங்கள். விமானத்தில் அனுமதிக்கப்பட உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை விளக்கும் எந்த மருத்துவ நிலையையும் நீங்கள் கொண்டிருந்தால் ஒரு மருத்துவ சான்றை உடன் எடுத்து வாருங்கள்.

முன்-புறப்பாடு சோதனை குறித்து மேலும் காண்க

நீங்கள் நியூசிலாந்திற்குள் வந்து சேர்ந்தவுடன்

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை கண்காணியுங்கள்

NZ COVI.D டிரேசர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். NZ COVID டிரேசரை பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு ஒரு நியூசிலாந்து தொலைபேசியோ அல்லது நியூசிலாந்து ஆப்பிள் அல்லது கூகிள் கணக்கோ தேவையில்லை.

NZ COVID டிரேசர் செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவும் (external link)

NZ COVID டிரேசர் செயலியை கூகிள் பிளேயிலிருந்து பதிவிறக்கம் செய்யவும் (external link)

நீங்கள் நோய்வாய்பட்டால் வீட்டிலேயே இருங்கள்

உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் பின்வருபவர்களை அழையுங்கள்:

 • கட்டணமில்லா ஹெல்த்லைன் 0800 358 5453
 • உங்கள் மருத்துவர், அல்லது
 • உங்கள் iwi சுகாதார வழங்குனர்.

ஒரு மருத்துவ வல்லுநர் நீங்கள் சோதனைக்கான தகுதிகளை படைத்திருக்கிறீர்களா என்று உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உங்கள் வருகைக்கு முன் மருத்துவரை அழையுங்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம்

ஆஸ்திரேலியாவிற்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் மேற்கொள்ள

 • அனைத்து குடியேற்ற தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்
 • புறப்படுமுன் நியூசிலாந்திலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ 14 நாட்கள் முழுமையாக தங்கியிருக்க வேண்டும் – இதன் அர்த்தம் நாள் 15 முதல் நீங்கள் பயணம் செய்யலாம்.
 • ஒரு பயண ஒப்பத்தை குறைந்தது 72 மணி நேரத்திற்கு முன் நியூசிலாந்தை விட்டு புறப்படுமுன் பூர்த்தி செய்யவேண்டும் (https://covid19.homeaffairs.gov.au/australia-travel-declaration (external link))
 • COVID-19 அறிகுறிகள் எதுவும் கொண்டிருக்க கூடாது
 • உறுதிப்படுத்தபபட்ட COVID-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்திருக்க கூடாது
 • நீங்கள் பயணிக்கும் மாநிலமோ எல்லைப்பரப்போ தனிமைப்படுத்தல் தேவை அல்லாத விமானங்களை அனுமதிப்பதை உறுதிபடுத்துங்கள். 

நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்த பிறகு

நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது உங்களையும் உங்கள் கூட்டு குடும்பத்தையும் சமூகங்களையும் COVID-19 இலிருந்து பாதுகாத்திட நல்ல துப்புரவு பழக்கங்கள் மற்றும் தொடர்பு கண்காணித்தல் உட்பட நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

COVID-19, விருப்பமான பகுதிகள், பயண நிபந்தனைகள் (உள்நாட்டு பயணம் உட்பட) மற்றும் சோதனை ஆகியனவற்றை பற்றி தகவல் பெற, நீங்கள் இருக்கும் மாநிலத்தின் வலைதளத்தை பார்வையிடுங்கள். மாநிலம் அல்லது எல்லைப்பரப்பு வாரியான COVID-19 ஐ பற்றிய தகவல்:

நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை கண்காணியுங்கள்

ஆஸ்திரேலியா முழுதுக்குமான தொடர்பு கண்காணிப்பு செயலி உள்ளது, ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் எல்லைப்பரப்புகள் தங்கள் பிரத்தியேக செயலிகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் இந்த செயலிகளில் பெரும்பாலானவற்றை ஒரு நியூசிலாந்து SIM கார்டு மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலிகளில் சிலவற்றை பயன்படுத்த ஒரு ஆஸ்திரேலிய SIM கார்டு உங்களுக்கு தேவைப்படலாம்.

இந்த செயலிகளை உங்கள் போனில் 1 மாதத்திற்கு வைத்திருக்க பரிந்துரைக்கிறோம். ஏனெனில் ஒருவேளை நீங்கள் மாநிலத்தை விட்டகன்ற பின்பும் எச்சரிக்கை வரலாம்.

உங்களால் ஒரு செயலியை பயன்படுத்தவோ அல்லது விருப்பமோ இல்லையென்றால் வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களின் தொடர்பு கண்காணித்தல் அமைப்பில் உள்நுழைவதை உறுதிபடுத்துங்கள்.  

மாநிலத்திற்கான பிரத்தியேக தொடர்பு கண்காணித்தல் செயலிகளை பதிவிறக்கம் செய்யுங்கள்:

நீங்கள் நோய்வாய்பட்டால் வீட்டிலேயே இருங்கள்

உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உங்கள் வீட்டிலேயே இருங்கள் மற்றும் ஒரு மருத்துவரை அழைத்து அவர் ஆலோசனையை பெறுங்கள்.

தேசிய கரோனாவைராஸ் மற்றும் COVID-19 தடுப்பூசி ஹெல்ப்லைனை 
1800 020 080 என்ற எண்ணில் அழைக்கவும். ஆஸ்திரேலியாவிலிருந்து செல்லும் அழைப்புகளுக்கு கட்டணமில்லை. நீங்கள் ஒரு நாளில் 24 மணிநேரம், ஒரு வாரத்தில் 7 நாட்களும் அழைக்கலாம்.

குக் தீவுகளுக்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம்

குக் தீவுகளுக்கு தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணம் மேற்கொள்ள:

 • அனைத்து குடியேற்ற தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும்
 • புறப்படுமுன் நியூசிலாந்திலோ குக் தீவுகளிலோ 14 நாட்கள் முழுமையாக தங்கியிருக்க வேண்டும் – இதன் அர்த்தம் நாள் 15 முதல் நீங்கள் பயணம் செய்யலாம்.
 • புறப்படுமுன் கடந்த 14 நாட்களில் உங்களுக்கு COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக இருக்ககூடாது. அவ்வாறு இருந்தால், உங்களுக்கு தொற்று இல்லையென்று ஒரு சுகாதார மருத்துவரிடமிருந்து நீங்கள் எழுத்து பூர்வ அறிவுரை பெறவேண்டும்.
 • COVID-19 சோதனை முடிவுகளுக்கு காத்திருக்க கூடாது.

நீங்கள் குக் தீவுகளுக்கு வந்தவுடன்

நீங்கள் குக் தீவுகளில் இருக்கும்போது உங்களையும் உங்கள் கூட்டு குடும்பத்தையும் சமூகங்களையும் COVID-19 இலிருந்து பாதுகாத்திட நல்ல துப்புரவு பழக்கங்கள் மற்றும் தொடர்பு கண்காணித்தல் உட்பட நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

மேலும் தகவலை குக் தீவுகள் அரசாங்க வலைதளத்தில் கண்டறியுங்கள் (external link)

நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை கண்காணியுங்கள்

குக் தீவுகள் நியூசிலாந்து அமைப்பை விட வேறுபட்ட அமைப்பை பயன்படுத்துகிறது. நீங்கள் பின்வருபனவற்றை கடைபிடிக்க வேண்டும்:

 • ஒரு CookSafe QR குறியீட்டிற்கு விண்ணப்பித்து அதை நீங்கள் செல்லும் இடங்களில் ஸ்கேன் செய்ய எப்போதும் உடன் கொண்டு செல்ல வேண்டும்.
 • CookSafe+ செயலியில் ப்ளூடூத் கண்காணிப்பை செயல்படுத்தவும்.

CookSafe+ செயலியும் NZ COVID டிரேசர் செயலியும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஒரு செயலியை பயன்படுத்தி உங்கள் போனிலிருந்து அனுப்பப்படும் அல்லது சேகரிக்கப்படும் எந்த ப்ளூடூத் குறியீடுகளும் (அல்லது ‘சாவிகள்’) மற்றொரு செயலி மூலம் அணுகப்பட முடியும். இந்த செயலிகள் ஒன்றுடன் ஒன்றிணைந்து வேலை செய்து அருகிலுள்ள COVID-19 நேர்மறை என்று வந்த மற்றொரு செயலி பயனர் அருகில் நீங்களிருந்தால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை உறுதியாக அனுப்பும்.

CookSafe QR கார்டை பற்றி மேலும் தகவல் (external link)

CookSafe + செயலியை ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யவும் (external link)

CookSafe + செயலியை கூகிள் பிளேயில் பதிவிறக்கம் செய்யவும் (external link)

நீங்கள் நோய்வாய்பட்டால் வீட்டிலேயே இருங்கள்

குக் தீவுகளில் நீங்கள் இருக்கும்போது உங்களுக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டால் உங்கள் தங்குமிடத்திலேயே இருங்கள் மற்றும் உங்களிடமிருந்தால் ஒரு முககவசத்தை அணியுங்கள். வீட்டிற்கு செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்தாதீர்கள்.

குக் தீவுகள் ஹெல்த்லைன் எண் 29667 ஐ ஆலோசனைக்கு அழையுங்கள்.

Last updated: