நியூசிலாந்துக்கு வரும் பயணிகளுக்கான முன்-புறப்பாடு சோதனை | Pre-departure testing for travellers to New Zealand

வைரசை நியூசிலாந்துக்கு வெளியே தடுத்து நிறுத்துவது நமது மிக பெரும் பாதுகாப்பு நடவடிக்கையாக உள்ளது.

நியூசிலாந்திற்கு வரும் பெரும்பாலான பயணிகள், அவர்களின் முதல் சர்வதேச புறப்பாடுக்கு 72 மணி நேரத்திற்குள், ஒரு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்திலிருந்து COVID-19 சோதனைக்கு நெகட்டிவ் என்னும் முடிவைப் பெற்று வருவதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

முன்-புறப்பாடு சோதனையில் இருந்து பின்வரும் நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:

 • அண்டார்டிகா
 • குக் தீவுகள்
 • மைக்ரோனேஷியாவின் கூட்டாட்சி நாடுகள்
 • ஃபிஜி
 • கிரிபாட்டி
 • மார்ஷல் தீவுகள்
 • நவ்ரு
 • நியூ கலிடோனியா
 • நியு
 • பலாவு
 • சமோவா
 • சாலமன் தீவுகள்
 • டோக்கெலாவ்
 • டோங்கா
 • துவாலு
 • வனுவாட்டு

ஆஸ்திரேலியா மற்றும் மிக அதிக-அபாயமுள்ள நாடுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் பின்வரும் வகையான சோதனைகள் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவை என்று சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது:

 • பிசிஆர், ஆர்டி-பிசிஆர் மற்றும் டிஎம்ஏ முதலியன அடங்கும் நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் சோதனை டெஸ்டிங் (NAAT) அல்லது
 • எல்ஏஎம்பி (LAMP), அல்லது
 • ஆன்டிஜென் சோதனை (இதை வைரஸ் ஆன்டிஜென் சோதனைகள் என்றும் குறிப்பிடலாம்).

ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பயணிகள் பிசிஆர் அல்லது ஆர்டி-பிசிஆர் சோதனைகளை முன்-புறப்பாடு சோதனைகளாகச் செய்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

மிகவும் அதிக அபாயமுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் இருந்து நேசோபேரிஞ்சியல் ஆர்டி-பிசிஆர் (பிசிஆர்) சோதனைக்கு நெகட்டிவ் என்னும் முடிவுக்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். 

அதிக-அபாய நாடுகளை பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

முன்-புறப்பாடு சோதனைகளுக்கான பொதுவான தேவைகள்

முன்-புறப்பாடு சோதனையிலிருந்து இரண்டு வயதிற்கும் (24 மாதங்கள்) குறைவான குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

நியூ சிலாந்து வழியே தங்களது இறுதி இலக்காக வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் விமான நிலைய முனையத்தினுள்ளேயே இருந்தால் அவர்கள் முன்-புறப்பாடு சோதனையிலிருந்து விலக்கு பெறுவார்கள்.

மருத்துவ காரணங்களுக்காக சோதனை செய்துகொள்ள முடியாத பயணிகள் உங்களது புறப்பாடுக்கு 72 மணி நேரத்திற்குள் ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும்.  அந்த மருத்துவர் நீங்கள் மருத்துவ காரணங்களுக்காக சோதனை செய்துகொள்ள முடியாது என்றும் உங்களுக்கு COVID-19 அறிகுறிகள் இல்லை என்றும் ஒரு மருத்துவச் சான்றிதழை வழங்க வேண்டும்.

உங்களுக்கு முன்-புறப்பாடு சோதனை முடிவு பாசிட்டிவ் ஆக இருந்தால், ஆனால் இது வரலாறு ரீதியான COVID-19 நோய் தொற்று என்று நம்பினால் நீங்கள் ஒரு மருத்துவரை காண வேண்டும். அவர் உங்களுக்கு COVID-19 இன் தற்போதைய அறிகுறிகள் ஏதேனும் உள்ளனவா என்று பரிசோதிப்பார்.

ஒரு COVID-19 நோய்த்தொற்று தற்போது உங்களுக்கு இல்லை என்று அவர்கள் நிச்சயமாக நம்பினால், அவர்கள் உங்களுக்கு வழங்கவேண்டியவை:

 • பொருந்தும்பட்சத்தில், உங்கள் முந்தைய பாசிட்டிவ் முடிவுக்கான தேதியுடன் ஒரு மருத்துவ சான்றிதழ், மற்றும்
 • நீங்கள் இனி COVID-19 நோய்த்தொற்றை பரப்பக்கூடியவர் அல்ல என்று அவர்கள் கருதுவதைக் குறிப்பிடும் ஆவணங்கள்.

அயல் மொழிகளில் மருத்துவ சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 ஏதேனும் கூடுதல் முன்-புறப்பாடு சோதனை தேவைகள் உள்ளனவா என்று தங்கள் விமான நிறுவனத்திடம் சோதித்து கொள்ள பயணிகள் தீவிரமாக அறிவுறுத்தப்படுகின்றனர்.  மேலும் பயணிகள் மற்ற நாடுகள் வழியே பயணித்தால் அவற்றின் தேவைகளை பற்றியும் சோதித்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 

நியூ சிலாந்திற்கு வரும் பயணிகளுக்கான நாள் 0 சோதனை தேவைகள் 

தனிமைப்படுத்தல் தேவை அல்லாத பயணத்தின் கீழ் வரும் பயணிகளை தவிர நியூ சிலாந்திற்குள் வருகை தரும் பெரும்பாலான மற்ற பயணிகள் பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

 • எங்கள் 14-நாள் நிர்வகிக்கப்பட்ட ஒதுக்கி வைத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் செயல்முறையை பூர்த்தி செய்யவேண்டும்
 • நாள் 0 அன்று ஒரு பிசிஆர் கோவிட்-19 சோதனையை செய்ய வேண்டும், அதாவது அவர்கள் முதன்முதலில் நிர்வகிக்கப்பட்ட ஒதுக்கி வைத்தலுக்கு வரும்போது
 • சோதனையின் முடிவு பூர்த்தியாகும் வரை தங்கள் அறையினுள்ளேயே தங்க வேண்டும்
 • வருகையின்போது அவர்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் நேரடியாக ஒரு தனிமைப்படுத்தல் வசதிக்கு செல்ல வேண்டும்.

பொதுவாக சோதனை முடிவுகள் வெளிவர 24-48 மணி நேரங்கள் எடுக்கும்.

எதிர்மறையான சோதனை முடிவு பெற்றால் மக்கள் மீதமுள்ள 14 நாட்களை நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஒரு சோதனையை அவர்கள் நாள் 3 அன்றும் நாள் 12 அன்றும் எடுக்க வேண்டும். பெரும்பாலான பயணிகளுக்கு அவர்கள் வசதியை விட்டு வெளியேறுவதற்கு COVID-19 தொற்று அவர்கள் குறைந்தளவு கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயத்தை குறைந்தளவு கொண்டிருக்கின்றனர் என்று எமது சுகாதார குழுவின் எதிர்மறையான COVID-19 சோதனை மற்றும் உறுதிப்படுத்தல் சான்று தேவை.

முடிவு நேர்மறையாக வந்தால் அந்த நபர் ஒரு தனிமைப்படுத்தல் வசதிக்கு நாள் 0 சோதனை இல்லாமல் மாற்றப்படும் அவகாசத்தை விட முன்கூட்டியே மாற்றப்படுவார்.

தனிமைப்படுத்தல் தேவையில்லாத பயணத்தை பற்றி மேலும் அறியவும்

மேலும் தகவல்

நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மற்றும் குவாரன்டீன் மீது மேலதிக தகவலுக்கு https://www.miq.govt.nz/travel-to-new-zealand/arriving-in-nz/ (external link) என்ற வலைதளத்திற்கு வருகை தாருங்கள்.

Last updated: