தடுப்பூசி அடிப்படைகள் | Vaccine basics

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

யாருக்கு தடுப்பூசி வழங்கப்படும்?

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.
 
இது உங்கள் விசா அல்லது குடியுரிமை நிலைக்கு அப்பாற்பட்டது. நாங்கள் சேகரிக்கும் எந்த தகவலையும் குடியுரிமை நோக்கங்களுக்காக பயன்படுத்த மாட்டோம்.
 
யார் யார் COVID-19 தடுப்பூசியை பெறலாம் 

எப்போது நீங்கள் தடுப்பூசியை பெறலாம்?

நாங்கள் இந்த தடுப்பூசியை பல கட்டங்களில் வழங்குகிறோம். நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொருவரும் 4 தடுப்பூசி குழுக்களில் 1 குழுவில் உள்ளனர்.

முதலில் நாங்கள் தங்கள் பணியிடத்தில் COVID-19 ஆல் பாதிப்படையும் அதிக ஆபத்தை கொண்டவர்களை பாதுகாப்போம். இது எதிர்காலத்தில் ஏற்படும் நோய் பரவல்கள் மற்றும் லாக்டவுன்களின் அபாயத்தை குறைக்கும்.

அடுத்து நாங்கள் வைரஸ் தொற்று ஏற்பட்டால் கடுமையாக உடல்நல பாதிப்பு அடையும் அல்லது இறக்கும் அபாயத்தை கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்குவோம்.

இறுதியாக நாங்கள் ஆட்டேரோவாவிலுள்ள மீதமுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி வழங்குவோம்.

இந்த தடுப்பூசி அனைவருக்கும் கட்டணமில்லாமல் கிடைக்கப்பெறும் மற்றும் உங்கள் விசா அல்லது குடியுரிமை நிலைக்கு அப்பாற்பட்டது.

நீங்கள் வெளிநாடுகளுக்கு கருணை அடிப்படையிலோ தேச முக்கியத்துவம் அடிப்படையிலோ பயணம் செய்யத் தேவை இருந்தால் முன்கூட்டிய தடுப்பூசிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

முன்கூட்டிய தடுப்பூசிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

தடுப்பூசியும் உங்கள் பணியும் 

உங்களுக்கு எந்த தடுப்பூசி வழங்கப்படும்

நியூசிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி ஒன்று மட்டும்தான் COVID-19 தடுப்பூசியாக வழங்கப்பட அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 10 மில்லியன் விழுங்குகளை தருவித்துள்ளோம் – இது 5 மில்லியன் மக்களின் பாதுகாப்பிற்காக 2 விழுங்குகள் தர போதுமானது.

இந்த தடுப்பூசி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த வைரசை அடையாளம் கண்டுகொண்டு அதை எதிர்த்து போராட கற்றுத்தருகிறது.

ஃபைசர் தடுப்பூசி:

 • ஒரு மெசெஞ்சர் RNA (mRNA) தடுப்பூசி
 • இதில் உயிருள்ள, இறந்த அல்லது முடக்கப்பட்ட வைரசுகள் எவையும் இடம்பெற வில்லை.
 • இதனால் உங்களுக்கு COVID-19 ஏற்படாது
 • உங்கள் DNA வை பாதிக்காது
 • இதில் எந்த விலங்கு பொருட்களும் இல்லை 

இந்த தடுப்பூசியின் இரண்டாவது விழுங்கை நீங்கள் முதல் விழுங்கிலிருந்து குறைந்தபட்சம் 42 நாட்களுக்கு (6 வாரங்கள்) பிறகு பெறவேண்டும்.

இந்த தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது என்று கண்டறியுங்கள்

நீங்கள் தடுப்பூசி பெறும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கண்டறியுங்கள்

நீங்கள் தடுப்பூசி பெற்ற பிறகு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று கண்டறியுங்கள்

உங்கள் தடுப்பூசி ஏற்படுத்தும் பக்க விளைவுகளை பற்றி கண்டறியுங்கள் 

தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் செயல்திறன்

நியூசிலாந்தின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையமான மெட்சேஃப் அனைத்து புதிய மருந்துகளுக்கான விண்ணப்பங்களையும் மதிப்பீடு செய்கிறது. இதில் தடுப்பூசிகளும் அடங்கும்.
 
நியூசிலாந்தில் ஒரு தடுப்பூசி பயன்படுத்தப்படுவதற்கான அங்கீகாரத்தை மெட்சேஃப் வழங்குவதற்கு அதற்கு பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும்:

 • நியூசிலாந்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் அது பூர்த்தி செய்யவேண்டும்
 • பாதுகாப்பு, திறன் மற்றும் தரம் இவற்றிற்கான சர்வதேச தர நிலைகளுக்கு இணக்கமாக உள்ளது. 

மக்கள் இரண்டு விழுங்குகளையும் பெற்றால் இந்த ஃபைசர் தடுப்பூசி மிகவும் ஆற்றலுடன் வேலை செய்யும். நீங்கள் முழுதும் தடுப்பூசி போட்டுக்கொண்ட உடன், தீவிரமாக சுகவீனம் அடைவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிக மிக குறைவு.

ஆராய்ச்சிகள் தடுப்பூசியின் இரண்டு விழுங்குகளையும் பெற்றுள்ள 95% மக்கள் COVID-19 அறிகுறிகளைப் பெறுவதிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றனர் என்று கண்டறிந்துள்ளன.

இந்த தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது என்று கண்டறியுங்கள்

கண்டறியுங்கள் எவ்வாறு இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என்று 

தடுப்பூசி போட்டுக்கொள்வது ஏன் அவசியம்

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நீங்கள் உங்களை மட்டும் பாதுகாத்து கொள்வதில்லை. COVID-19 உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு பரவும் அபாயத்தையும் குறைப்பதில் உங்கள் பங்கை ஆற்றுகிறீர்கள். 

தடுப்பூசிக்கு பிறகும் நீங்கள் இன்னமும் முக்கிய சுகாதார பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்

நீங்கள் முழுதும் தடுப்பூசி பெற்றவுடன் உங்களிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுமா என்று தற்சமயம் கூற முடியாது.

தடுப்பூசி பெற்றபிறகு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மற்றவர்களையும் பாதுகாத்திட நீங்கள் தொடர்ந்து COVID-19 பரவலை தடுக்க உதவவேண்டும். பின்வருபனவற்றை நினைவில் கொள்ளுங்கள்:

 • உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள்
 • உங்கள் முழங்கைக்குள் இருமுங்கள் மற்றும் தும்முங்கள்
 • பொது போக்குவரத்து வாகனங்களில் முககவசம் அணியுங்கள்
 • நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று கண்காணியுங்கள்
 • NZ COVID டிரேசர் செயலியில் ப்ளூட்டூத்தை செயல்படுத்துங்கள்
 • வீட்டிலேயே இருங்கள் மற்றும் உடல்நல குறைவு ஏற்பட்டால் ஹெல்த்லைனை அழையுங்கள் (0800 611 116) 

தடுப்பூசி பற்றிய தவறான தகவல் அல்லது மோசடிகளை பற்றி தெரிவித்தல்

தடுப்பூசி பற்றி ஆன்லைனிலும் சமூக ஊடகங்களிலும் நிறைய தகவல் வருகிறது. எது நம்பகத்தன்மை கொண்டது என்று பகுத்தறிவது மிகவும் அசாத்தியமானதாகவும் கடினமானதாகவும் இருக்கும். உங்களுக்கு நம்பத்தகுந்த மூலங்களிலிருந்துதான் தகவல் வருகிறது என்பதை உறுதிபடுத்துங்கள் மற்றும் உண்மையென்று தெரியும்வரை தகவலை பகிராதீர்கள்.

தடுப்பூசிகளை பற்றிய நம்பத்தகுந்த தகவலை எங்கே பெறுவது

ஒரு தடுப்பூசி இடும் ஊழியராகுங்கள் (வேக்சினேட்டர்)

இந்த தடுப்பூசி விநியோகத்திற்கு ஆதரவு தர எங்களுக்கு கூடுதல் வேக்சினேட்டர்கள் தேவைப்படுகின்றனர்.

நீங்கள் ஒரு ஓய்வுபெற்ற சுகாதார நிபுணர் என்றாலோ அல்லது தற்போது சுகாதார பணிப்பிரிவில் பணியாற்ற வில்லை மற்றும் தன்னார்வ தொண்டு ஆற்ற விருப்பம் உள்ளவர் என்றாலோ சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்திற்கு வருகை தந்து உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யுங்கள்.

ஒரு வேக்சினேட்டராகும் உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யுங்கள் (external link)

Last updated: