COVID-19 தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் | Side effects of COVID-19 vaccines

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மற்றும் அவற்றை எதிர்கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி கண்டறியுங்கள்.

பொதுவான பக்க விளைவுகள்

அனைத்து மருந்துகளை போன்றே தடுப்பூசி பெற்ற 1-2 தினங்கள் பிறகு உங்களுக்கு மிதமான பக்க விளைவுகள் ஏற்படலாம். இது வாடிக்கையானது மற்றும் உங்கள் உடல் வைரசை எதிர்த்து போராடுவதைக் கற்றுக்கொள்கிறது என்பதன் அறிகுறி.

பெரும்பான்மையான பக்க விளைவுகள் நீண்டகாலம் இருப்பதில்லை மற்றும் உங்களை இரண்டாவது விழுங்கை பெறுவதிலிருந்தோ அன்றாட வாழ்க்கையை இயல்பாக வாழ்வதையோ தடுக்காது. ஒருசில பக்கவிளைவுகள் வாகனம் அல்லது இயந்திரங்களை இயக்குவதன் உங்கள் ஆற்றலை தற்காலிகமாக பாதிக்கலாம்.

தெரிவிக்கப்பட்ட மிக பொதுவான எதிர்வினைகள் பின்வருமாறு:

  • ஊசி குத்திய இடத்தில் வலி அல்லது வீக்கம்
  • சோர்வாக அல்லது அயர்வாக உணர்தல்
  • தலைவலி
  • தசை வலி
  • குளிர்
  • மூட்டு வலி
  • காய்ச்சல்
  • ஊசி குத்திய இடத்தில் சிவத்தல்
  • குமட்டல் 

இரண்டாவது விழுங்கிற்கு பின் ஒருசில பக்க விளைவுகள் மிகவும் பொதுவானவை.

அசாதாரணமான மற்றும் அரிய பக்க விளைவுகள் – சுகாதார அமைச்சகம் (external link)

நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்:

  • ஊசி குத்திய இடத்தில் ஒரு குளிர்ந்த, ஈரமான துணியையோ அல்லது ஐஸ் பேக்கையோ சிறிது நேரத்திற்கு வையுங்கள்
  • ஓய்வெடுங்கள் மற்றும் அதிகளவில் திரவங்கள் பருகுங்கள்
  • பாராசிட்டமால் அல்லது ஐபுப்ரூஃபென் மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். 

எப்போது உதவியை நாடுவது

தடுப்பூசிக்கு பின் உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தாலோ உடல்நலம் குன்றியுள்ளதாக உணர்ந்தாலோ உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது வேறு சுகாதார வல்லுனரிடம் ஆலோசனை பெறுங்கள் அல்லது ஹெல்த்லைனை 0800 358 5453 என்ற எண்ணில் அழையுங்கள்.

உங்கள் பாதுகாப்பை பற்றி நீங்கள் அச்சம் கொண்டால் 111 என்ற எண்ணை அழையுங்கள். அவர்கள் உங்களை முறையாக மதிப்பீடு செய்யும் வகையில், நீங்கள் COVID-19 க்கான தடுப்பூசி பெற்றதை பற்றி அவர்களிடம் கூறுங்கள். 

ஒவ்வாமை எதிர்வினைகள்

மிகத்தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம் ஆனால் இவை மிகவும் அரிதானவை.

கடந்த காலங்களில் ஏதேனும் தடுப்பூசி அல்லது ஊசிக்கு பின் உங்களுக்கு கடுமையான அல்லது உடனடி ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருந்தால் உங்கள் COVID-19 தடுப்பூசி வருகையின் போது தடுப்பூசி மருத்துவரிடம் அதைப்பற்றி தெரிவியுங்கள்.

COVID-19 தடுப்பூசி பெறும்போது உங்களுக்கு ஏதேனும் எதிர்வினை ஏற்பட்டால் உங்களை கவனித்துக்கொள்ளவும் நீங்கள் இயல்பாக உணர உதவவும் ஒரு சுகாதார ஊழியர் அங்கிருப்பார். 

பக்க விளைவுகளை பற்றி தெரிவித்தல்

பாதக எதிர்வினைகள் கண்காணிப்பு மையம் (CARM) என்பது நியூசிலாந்தில் இதுவரை நிகழ்ந்துள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் பாதக எதிர்வினைகள் (பக்க விளைவுகள்) பற்றிய தகவல் தரவுத்தளமாகும்.

மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாடு மற்றும் பரிந்துரைத்தலில் ஏதேனும் பிரச்சனைகளை அடையாளம் காண்பதில் உதவுவதற்காக CARM இந்த தகவலை கண்காணிக்கிறது. 

விரும்பினால் நீங்களும் உங்கள் பக்க விளைவுகளை பற்றி தெரிவிக்கலாம். உங்கள் பக்கவிளைவுகளை பற்றி தெரிவிப்பது இந்த தரவு உலகளாவிய அளவில் சேகரிக்கப்படுவதிலும் நியூசிலாந்தில் ஒத்த தன்மைகள் மற்றும் சாத்தியமான பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகியனவற்றை கண்டறிவதிலும் பங்களிக்கும்.

உங்கள் பக்க விளைவுகளை பற்றி CARMக்கு தகவல் தெரிவியுங்கள் (external link)

நியூசிலாந்தில் தெரிவிக்கப்பட்ட பக்க விளைவுகள் (external link)

Last updated: