எவ்வாறு இந்த COVID-19 தடுப்பூசி வேலை செய்கிறது | How the COVID-19 vaccine works

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

COVID-19 தடுப்பூசிக்கு கட்டணமில்லை. இது தன்னார்வத்தின் அடிப்படியில் வழங்கப்படுகிறது மற்றும் நியூசிலாந்திலுள்ள 12 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடைய ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது.

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நீங்கள் உங்களை மட்டும் பாதுகாத்து கொள்வதில்லை. COVID-19 உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு பரவும் அபாயத்தையும் குறைக்கிறீர்கள்.

நீங்கள் முழுதும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தீவிரமாக சுகவீனம் அடைவதற்கான சாத்தியம் உங்களுக்கு மிக மிக குறைவு.

இந்த தடுப்பூசி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த வைரசை அடையாளம் கண்டுகொண்டு அதை எதிர்த்து போராட கற்றுத்தருவதன் மூலமாக வேலை செய்கிறது.

இந்த தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது என்ற முக்கிய தகவலை இங்கு பெறுவீர்கள். 

mRNA தடுப்பூசிகள்

ஃபைசர் தடுப்பூசி ஒரு mRNA தடுப்பூசி. இது SARS-CoV-2 (COVID-19) வைரசின் முக்கிய பகுதி ஒன்றின் மரபணு குறியீடை கொண்டுள்ளது. இதன் பெயர் 'ஸ்பைக் புரதம்' ஆகும். ஸ்பைக் புரதங்கள் என்பன வைரசின் மேற்பரப்பிலுள்ள சிறு காம்புகளாகும்.

உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன் உங்கள் உடல் இந்த மரபணு குறியீடை படித்து இந்த ஸ்பைக் புரதத்தின் நகல்களை உருவாக்குகிறது.

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் இந்த ஸ்பைக் புரதங்களை அடையாளம் கண்டு எவ்வாறு COVID-19 ஐ அடையாளம் கண்டுகொண்டு அதை எதிர்த்து போராடுவது என்று கற்றுக்கொள்கிறது. இந்த வைரசை தாக்கி அது உங்கள் உடலில் பரவுவதை தடுக்க வேண்டும் என்று அதற்கு தெரியும்.

தடுப்பூசியின் இந்த மரபணு குறியீடு பிறகு சிதைந்து உங்கள் உடலிலிருந்து விரைவாகவும் எளிதாகவும் வெளியேறுகிறது.  

mRNA தடுப்பூசிகளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்த தடுப்பூசியால் உங்களுக்கு COVID-19 ஐ தர இயலாது

mRNA தடுப்பூசிகளில் COVID-19 ஐ உருவாக்கும் வைரசோ அல்லது பிற ஏதும் உயிருள்ள, இறந்த அல்லது முடக்கப்பட்ட வைரசுகளோ இடம்பெற வில்லை.

இந்த தடுப்பூசி உங்கள் DNA ஐ பாதிக்காது

இது உங்கள் DNA-அல்லது மரபணுக்களைப் பாதிக்காது அல்லது அதனுடன் ஊடாடாது. mRNA தடுப்பூசிகள் நமது DNA வைக்கப்பட்டிருக்கும் செல் உட்கருவில் ஒருபோதும் நுழையாது.

mRNA தடுப்பூசிகள் பத்தாண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்து வருகின்றன

mRNA தடுப்பூசிகள் மிக முக்கிய சர்வதேச கூட்டுமுயற்சி மூலம் உருவாக்கப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக mRNA தடுப்பூசிகளை பற்றி ஆராய்ந்து அவற்றுடன் வேலை செய்து வருகின்றனர். இது ஃப்ளூ, சிக்கா, ரேபீஸ் மற்றும் சைட்டோமெகலோவைரஸ் (CMV) போன்ற வைரசுகளுக்கு எதிரான தடுப்பூசிகளை பற்றிய ஆராய்ச்சிகளை உள்ளடக்குகிறது.

SARS மற்றும் MERS போன்ற கடந்தகால கொரோனாவைரஸ் நோய்த்தொற்றுகளை பற்றியும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்திருக்கின்றனர். விஞ்ஞானிகள் COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனாவைரசை கண்டறிந்ததும் அவர்கள் COVID-19-க்காக இந்த தொழில்நுட்பத்தை தகவமைத்தனர்.

இது ஒரு புதிய தொழில்நுட்பம்தான் என்றாலும் இந்த தடுப்பூசி அனைத்து வாடிக்கையான பாதுகாப்பு சோதனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்த தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு இவற்றை நிரூபிக்க உதவும் சர்வதேச மருத்துவ பரிசோதனைகளை உள்ளடக்கும். இந்த ஃபைசர் தடுப்பூசி உலகம் முழுதும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதன் திறன் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக நுட்பமாக கண்காணிக்கப்படுகிறது.

Last updated: