COVID-19 தடுப்பூசிகள்: உருவாக்கம், ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு | COVID-19 vaccines: development, approval and safety

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

எவ்வாறு COVID-19 தடுப்பூசிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்கப்பட்டன

வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்தில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு விஞ்ஞானிகள் மற்றும் அரசுகளுக்கிடையே இந்தளவு சர்வதேச கூட்டுமுயற்சி இருந்ததில்லை. இது தடுப்பூசி உருவாக்கம், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஒப்புதல்கள் இவற்றின் வேகத்தை மேம்படுத்தியுள்ளது.

இந்த தடுப்பூசிகள் மிக விரைவாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தடுப்பூசி கண்டுபிடித்தலின் அவசியமான வழிமுறைகளில் எவ்வித குறுக்கு வழிகளும் மேற்கொள்ளப்படாமல் அல்லது பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இது நடத்தப்பட்டுள்ளது.

மற்ற கரோனாவைரசுகள் மற்றும் தடுப்பூசி உருவாக்கம் பற்றிய தங்கள் அறிவை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்களால் ஒரு அதிரடி தொடக்கத்தை பெற முடிந்தது.

COVID-19 பற்றிய உலகளாவிய ஆர்வம் மற்றும் கவலையின் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு வழக்கத்தை விட பெரும் எண்ணிக்கையில் தன்னார்வலர்களை பணிக்கு அமர்த்த முடிந்தது. சில மருத்துவ பரிசோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்படுவதற்கு பதில் ஒரே நேரத்தில் செய்ய முடிந்தன. இதனால் விஞ்ஞானிகளுக்கு இந்த தடுப்பூசி பயன் தருகிறதா என்று குறுகிய காலகட்டத்தில் தீர்மானிக்க முடிந்தது – வழக்கமான சூழ்நிலைகளில் இது பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட எடுக்கலாம்.

முன்பு சாத்தியமானதாக இருந்ததைக் காட்டிலும் பெரும் அளவில் தடுப்பூசிகள் விரைவாகவும் அதிக எண்ணிக்கையிலும் தயாரிக்கப்பட பெரிய தயாரிப்பு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

நியூசிலாந்தில் தடுப்பூசி மதிப்பீடு மற்றும் ஒப்புதல்

மெட்சேஃப் தான் நியூசிலாந்தின் மருந்து பாதுகாப்பு ஆணையமாகும். இது தடுப்பூசிகள் உட்பட அனைத்து புதிய மருந்துகளுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்கிறது. இதன் மூலம் அவை சர்வதேச தரங்கள் மற்றும் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்கின்றனவா என்று நிச்சயம் செய்து கொள்ள முடியும்.

மெட்சேஃப் ஒரு தடுப்பூசி பாதுகாப்பு, திறன் மற்றும் தரம் இவற்றிற்கான தரக்கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்கிறது என்று திருப்தியடைந்தால் மட்டுமே ஆட்டோரேவாவில் அந்த தடுப்பூசியை பயன்படுத்தும் ஒப்புதலை வழங்குகிறது. இதே வழிமுறைதான் ஃப்ளூ தடுப்பூசி போன்ற மற்ற மருந்துகளையும் மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒப்புதல் வழங்குவதில் எவ்வித குறுக்கு வழிகளும் கையாளப்படுவதில்லை.

இந்த ஃபைசர் தடுப்பூசி பல லட்சக்கணக்கானவர்களால் உலகம் முழுதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 

ஃபைசர் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்பட்டன

மருத்துவ பரிசோதனைகள் இந்த தடுப்பூசி வயது, பாலினம், இனம், வம்சாவளி மற்றும் உடல்நல பாதிப்புகள் உள்ள மக்கள் என்று பாராமல் பயன் தருகிறது என்று கண்டறிந்தது.

ஆராய்ச்சிகள் தடுப்பூசியின் இரண்டு விழுங்குகளையும் பெற்ற 95% மக்கள் COVID-19 அறிகுறிகளைப் பெறுவதிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றனர் என்று காட்டுகின்றன. அதாவது நீங்கள் முழுதும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தீவிரமாக சுகவீனம் அடைவதற்கானசாத்தியம் உங்களுக்கு மிக மிக குறைவு.

மருத்துவ சோதனைகள் மூலம் இந்த ஃபைசர் தடுப்பூசி சுமார் 44,000 பங்கேற்பாளர்களிடம் சோதனை செய்யப்பட்டது. மக்களில் பாதி இந்த தடுப்பூசியை பெற்றனர். மீதமுள்ளவர்கள் ஒரு சலைன் மருந்துபோலியை பெற்றனர். பங்கேற்பாளர்களில் பல்வேறு வம்சாவளியினர்கள், வயதினர், பாலினம் மற்றும் உடல்நல பாதிப்புகள் உள்ளவர்கள் என்ற பலதரப்பினர் இருந்தனர்.

ஃபைசர் தடுப்பூசி 3 கட்டங்களில் சோதனை செய்யப்பட்டது:

  • கட்டம் 1 மற்றும் 2 ஒரு சிறு மக்கள் தொகையில் இந்த தடுப்பூசியின் பல்வேறு விழுங்கு அளவுகளின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் உற்பத்தியை மதிப்பீடு செய்தது (ஒவ்வொரு விழுங்கிற்கும் பிறகு விளையும் நோயெதிர்ப்பு பிரதிவினை)
  • கட்டங்கள் 2 மற்றும் 3 ஒரு பெரிய மக்கள்தொகையில் 21 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் நிறைந்த COVID-19 க்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு 2 விழுங்குகளுக்கு பிறகு நிகழ்ந்த இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை மதிப்பீடு செய்தன.

இந்த தடுப்பூசியின் நீண்டகால திறன் மற்றும் பாதுகாப்பை பற்றி புரிந்துக்கொள்ள மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் ஃபைசர் தடுப்பூசி இரண்டாவது விழுங்கிற்கு பிறகு மேலும் 2 ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்படுகின்றனர்.

Last updated: