யார் COVID-19 தடுப்பூசியை பெறலாம்? | Who can get a COVID-19 vaccination?

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

COVID-19 தடுப்பூசிக்கு கட்டணமில்லை. இது தன்னார்வத்தின் அடிப்படியில் வழங்கப்படுகிறது மற்றும் நியூசிலாந்திலுள்ள 12 வயது மற்றும் அதற்கு அதிக வயதுடைய ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. இது உங்கள் விசா அல்லது குடியுரிமை நிலைக்கு அப்பாற்பட்டது. நாங்கள் சேகரிக்கும் எந்த தகவலையும் குடியுரிமை நோக்கங்களுக்காக பயன்படுத்த மாட்டோம் மற்றும் உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் நீங்கள் உங்களை மட்டும் பாதுகாத்து கொள்வதில்லை. COVID-19 உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்திற்கு பரவும் அபாயத்தையும் குறைக்கிறீர்கள்.

யார் தடுப்பூசி பெறலாம் மற்றும் முக்கிய காரணிகளான உங்கள் வயது, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா அல்லது தாய்ப்பால் வழங்கும் பெண்மணியா, தடுப்பூசியினால் ஏற்கனவே உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டுள்ளதா மற்றும் உங்களுக்கு ஏற்கனவே உடல்நல குறைபாடுகள் எதுவும் உள்ளனவா என்பன போன்ற தகவலை நீங்கள் இங்கே பெறமுடியும். 

உங்கள் வயது 12 க்கும் குறைவு என்றால்

தற்போதைய கட்டத்தில் 12 வயதுக்கும் குறைவானவர்கள் இந்த பைசர் தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெற மாட்டார்கள். 

உங்கள் வயது 65 க்கும் அதிகம் என்றால்

65 வயதுக்கு மேலே உள்ளவர்களிடையே இந்த தடுப்பூசி மிகவும் திறனுள்ளதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. 

நீங்கள் சைவ உணவு உண்பவர் அல்லது உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கின்றன என்றால்

இந்த தடுப்பூசி சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது. இதில் எவ்வித விலங்கு பொருட்களும் இடம் பெறவில்லை.

மேலும் இதில் ஆன்டிபையாடிக்ஸ், ரத்த பொருட்கள், DNA, முட்டை புரதங்கள், கரு பொருள், கிளட்டன், பன்றி பொருட்கள், பதப்பொருட்கள், சோயா, அல்லது லேட்டக்ஸ் போன்ற உட்பொருட்கள் இடம்பெறவில்லை (மருந்து சீசா மூடி செயற்கை ரப்பரினால் செய்யப்பட்டது – புரோமோப்யூட்டைல்).

ஃபைசர் தடுப்பூசியின் முழு உட்பொருட்களின் பட்டியலை கண்டறியுங்கள் (external link) 

நீங்கள் கர்ப்பமாக இருந்தால்

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் நீங்கள் ஒரு COVID-19 தடுப்பூசியை உங்கள் கர்ப்பகாலத்தின் எந்த கட்டத்திலும் பெறலாம்.

உலகம் முழுதும் பெருமளவில் ஏற்கனவே COVID-19 தடுப்பூசிகள் பெற்ற கர்ப்பிணி பெண்களிடையே எவ்வித கூடுதல் பாதுகாப்பு அச்சங்களும் ஏற்படவில்லை என்று தரவு கூறுகிறது.

கர்ப்பகாலத்தில் பெறும் தடுப்பூசி சிசுவுக்கும் உதவிகரமாக இருக்கலாம். ஏனெனில் தொப்புள்கொடி ரத்தம் மற்றும் தாய்ப்பால் மூலம் ஆன்டிபாடி பரிமாற்றம் நடைபெறுவதன் சான்று கிடைக்கப்பெற்றுள்ளது. இது சிசுக்களுக்கு முயற்சியற்ற நோயெதிர்ப்பு ஆற்றல் மூலம் பாதுகாப்பு கிடைக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது அச்சங்கள் இருந்தால் உங்கள் சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். 

நீங்கள் ஒரு குழந்தைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால்

நீங்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால் நீங்கள் ஒரு ஃபைசர் தடுப்பூசியை பெறலாம்.

ஃபைசர் தடுப்பூசி உங்கள் மரபணுக்களையோ அல்லது கருதரித்தலையோ பாதிக்காது. தடுப்பூசியில் உள்ள mRNA உங்கள் DNA இருக்கும் எந்த செல் உட்கருக்களின் உள்ளே ஒருபோதும் நுழையாது.

தடுப்பூசியின் எந்த பகுதியுமோ அல்லது உருவாகும் ஸ்பைக் புரதமோ சினைப்பைகள் அல்லது விரைகளினுள்ளே சென்று அடையாது. 

கடந்த காலத்தில் ஏதேனும் ஒரு தடுப்பூசியினால் உங்களுக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருந்தால்

கடந்த காலத்தில் ஏதேனும் ஒரு தடுப்பூசியினாலோ ஊசியினாலோ உங்களுக்கு கடுமையான அல்லது உடனடி ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டிருந்தால் இதைப்பற்றி உங்கள் மருத்துவர், சுகாதார நிபுணர் அல்லது வேக்சினேட்டரிடம் கலந்துரையாடுங்கள். 

நீங்கள் கடுமையான ஒவ்வாமை அதிர்ச்சி வரலாறு கொண்டிருந்தால்

நீங்கள் பின்வருபனவற்றிற்கு கடுமையான ஒவ்வாமை அதிர்ச்சி வரலாறு கொண்டிருந்தால் நீங்கள் தடுப்பூசியை பெறக்கூடாது:

  • ஃபைசர் தடுப்பூசியிலுள்ள ஏதேனும் ஒரு உட்பொருளுக்கு
  • முந்தைய ஃபைசர் தடுப்பூசியின் ஒரு விழுங்கிற்கு. 

ஃபைசர் தடுப்பூசி உட்பொருட்கள் – சுகாதார அமைச்சகம் (external link) 

உங்களுக்கு உடல்நலம் குன்றியிருக்கிறது என்றாலோ அல்லது காய்ச்சல் இருந்தாலோ

உங்கள் முன்பதிவு தினத்தில் உங்களுக்கு உடல்நலம் குன்றினாலோ 38°C-க்கும் அதிகமான காய்ச்சல் இருந்தாலோ, நீங்கள் இயல்பான உடல்நலத்தை உணரும் வரை உங்கள் COVID-19 தடுப்பூசியை தாமதப்படுத்த வேண்டும். 

நீங்கள் வேறொரு தடுப்பூசியை பெற்றால்

நீங்கள் COVID-19 தடுப்பூசியை மற்றொரு தடுப்பூசியை பெறும் அதே நேரத்தில் பெறமுடியாது. தடுப்பூசியை பொறுத்து நீங்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

ஃப்ளூ தடுப்பூசி

COVID-19 தடுப்பூசி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா (ஃப்ளூ) தடுப்பூசி இரண்டிற்கும் இடையே குறைந்த பட்சம் 2 வார இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

உங்களுக்கு ஒரு COVID-19 தடுப்பூசி முன்பதிவு இருந்தால் COVID-19 தடுப்பூசியின் 2 விழுங்குகளையும் முதலில் பெறுங்கள் – இந்த இரண்டு விழுங்குகளும் குறைந்தபட்சம் 3 வார இடைவெளியில் தரப்படுகின்றன. உங்கள் இரண்டாவது விழுங்கிற்கு 2 வாரங்கள் பிறகு நீங்கள் ஃப்ளூ தடுப்பூசியை பெறலாம்.

உங்களுக்கு ஒரு COVID-19 தடுப்பூசி முன்பதிவு இல்லையென்றால் நீங்கள் ஃப்ளூ தடுப்பூசியை முதலில் பெறலாம். இதற்கு 2 வாரங்கள் பிறகு நீங்கள் உங்கள் முதல் COVID-19 தடுப்பூசியை பெறலாம்.

தட்டம்மை, புட்டாளம்மை மற்றும் ரூபெல்லா (MMR) தடுப்பூசி

COVID-19 தடுப்பூசியின் இரண்டு விழுங்குகளையும் முதலில் பெறுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறோம் – இந்த இரண்டு விழுங்குகளும் குறைந்தபட்சம் 3 வார இடைவெளியில் தரப்படுகின்றன.

நீங்கள் முதலில் COVID-19 தடுப்பூசியை பெற்றால் இரண்டாவது விழுங்கிலிருந்து நீங்கள் குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு பிறகுதான் MMR தடுப்பூசியை பெறலாம்.

நீங்கள் முதலில் MMR தடுப்பூசியை பெற்றால் நீங்கள் குறைந்தபட்சம் 4 வாரங்களுக்கு காத்திருந்த பிறகுதான் COVID-19 தடுப்பூசியின் முதல் விழுங்கை பெறலாம்.

உங்களுக்கு ஏற்கனவே உடல்நல குறைபாடிருந்தால்

மருத்துவ பரிசோதனைகள் இந்த தடுப்பூசி வயது, பாலினம், இனம், வம்சாவளி மற்றும் உடல்நல பாதிப்புகள் உள்ள மக்கள் என்று பாராமல் பயன் தருகிறது என்று கண்டறிந்தது.

உங்கள் வயது 16 அல்லது அதற்கு அதிகம் மற்றும் நீங்கள் பின்வரும் நிபந்தனைகளில் ஒன்றையோ அதற்கு அதிகமாகவோ பூர்த்தி செய்தால் நீங்கள் தடுப்பூசியை முன்கூட்டியே பெறலாம்.

  • கர்ப்பிணி பெண்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான நிதியாதரவு பெற்ற இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி திட்டத்திற்கு தகுதிபெறும் ஒரு உடல்நல நிலைமையை நீங்கள் கொண்டிருந்தால்
  • உங்களுக்கு கடுமையான மன நோய் கண்டறியப்பட்டிருக்கிறது (இதில் ஸ்கிசோஃப்ரினியா, பெரிய மனச்சோர்வுக் கோளாறு, இருமுனைக் கோளாறு அல்லது ஸ்கிசோஅஃபெக்டிவ் கோளாறு மற்றும் தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாக இருப்பதால் சேவைகளை நடப்பில் அணுகும் வயது வந்தவர்கள் ஆகியன அடங்கும்)
  • உங்களுக்கு மோசமாக கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கடுமையான ரத்தக்கொதிப்பு இருந்தால் (ரத்தக்கொதிப்பு உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது) இந்த நிலையில் கடுமையான என்பது கட்டுப்பாட்டிற்காக 2 அல்லது அதற்கு அதிகமான மருந்துகள் தேவைப்படும் ஒரு நிலையென வரையறுக்கப்படுகிறது.
  • நீங்கள் அதிக உடல் பருமன் கொண்டிருக்கிறீர்கள் (BMI ≥40 என்று வரையறுக்கப்படுகிறது). 

உங்களுக்கு மற்ற தீவிர உடல்நல கோளாறுகள் இருந்தாலோ, சிகிச்சை பெற்று வந்தாலோ, உங்களுக்கு ஸ்கேன்கள் எடுக்கப்பட்டு வந்தாலோ அல்லது நீங்கள் மருந்துகள் உட்கொண்டு வந்தாலோ தடுப்பூசி பெறுவதை பற்றிய மேலும் ஆலோசனைக்கு சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்திற்கு வருகை தாருங்கள்.

குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் சுகாதார நிலைமைகளுக்கான தடுப்பூசி ஆலோசனை - சுகாதார அமைச்சகம் (external link)

Last updated: