தடுப்பூசியும் உங்கள் வேலையும் | The vaccination and your job

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

நியூசிலாந்தில் பெரும்பாலான வேலை தற்போது தடுப்பூசி பெறாத மக்களால் பூர்த்தி செய்யப்பட முடியும்.

COVID-19 க்கு எதிராக தடுப்பூசி பெற்ற ஒரு ஊழியரால் செய்யப்பட வேண்டிய வேலையை நீங்கள் செய்ய வேண்டியிருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி கண்டறியவும்.

உங்கள் தனியுரிமை உங்கள் பணியமர்த்துபவரால் பாதுகாக்கப்படவேண்டும்.

உங்கள் அனுமதி அல்லது தனியுரிமை சட்டத்தின் கீழ் விலக்கு பெற்றிருந்தாலொழிய உங்கள் தடுப்பூசி நிலை பற்றிய தகவலை உங்கள் பணியமர்த்துபவர் யாருடனும் பகிர முடியாது.

நீங்கள் தடுப்பூசி பெற்றிருப்பதை பற்றி உங்கள் பணியமர்த்துபவரிடம் கூற வேண்டியதில்லை. நீங்கள் தடுப்பூசி பெற வேண்டாமென்று முடிவெடுத்தால் அதற்கான காரணத்தை அவர்களிடம் நீங்கள் கூற வேண்டியதில்லை.

தடுப்பூசி பெற்ற ஒரு ஊழியரால் மட்டுமே செய்யப்பட வேண்டிய வேலையை நீங்கள் செய்ய வேண்டியிருந்து ஆனால் உங்கள் தடுப்பூசி நிலையை பற்றி நீங்கள் தெரிவிக்காமலிருக்க முடிவெடுத்தால் உங்கள் பணியமர்த்துபவர் உங்களை தடுப்பூசி பெறாதவர் என்று கருதலாம். ஆனால் அவ்வாறு அதை செய்வதை அவர்கள் உங்களிடம் தெரிவிக்க வேண்டும். 

நீங்கள் செய்யும் வேலை தடுப்பூசி பெற்ற ஒரு ஊழியரால் செய்யப்பட வேண்டும் என்றால்

உங்கள் பணியமர்த்துபவர் ஒரு குறிப்பிட்ட வேலை தடுப்பூசி பெற்ற ஊழியர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும் என கருதினால் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் முதலில் ஒரு COVID-19 பாதிப்பு அபாய மதிப்பீட்டை செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வேறு பிரதிநிதிகளின் கூட்டு முயற்சி மூலம் செய்யப்பட வேண்டும்.

இந்த அபாய மதிப்பீடு பின்வருபனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்:

  • பணியை செய்யும்போது ஊழியர்கள் COVID-19 ஆல் பாதிக்கப்படும் சாத்தியம்
  • அதனுடைய சாத்தியமான விளைவுகள் – உதாரணமாக சமூக பரவல். 

அபாய மதிப்பீடுகளை பற்றி வொர்க்சேஃப் மேலும் அதிக விரிவான வழிகாட்டலை வழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட வேலை தடுப்பூசி பெற்ற ஒரு ஊழியரால் மட்டுமே செய்யப்பட வேண்டுமா என்று மதிப்பீடு செய்வது (external link)

நடப்பிலுள்ள பணியமர்த்தும் சட்ட கடமைகள் இன்னமும் பொருந்தும். இது பின்வருபனவற்றை உள்ளடக்குகிறது:

  • ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தல் சட்ட திட்டங்களில் மாறுதல்கள் செய்தல்
  • நன்னம்பிக்கை அடிப்படையில் ஆலோசனையில் ஈடுபடுதல்
  • தடுப்பூசி பெற்றதன் நிலையின் அடிப்படையில் சட்டவிரோத பாகுபாட்டை தவிர்த்தல்
  • தடுப்பூசி பெற்றதன் நிலையின் அடிப்படையில் நியாயப்படுத்த இயலாத அளவு ஊழியர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருத்தல்.

அதிக அபாயம் கொண்ட எல்லை அல்லது நிர்வகிக்கப்பட்ட பாதுகாத்தல் மற்றும் தனிமைப்படுத்துதல் (MIQ) அமைப்பில் பணியாற்றுதல்

தடுப்பூசி கட்டாயமில்லை மற்றும் தனிநபர்கள் தாங்கள் COVID-19 தடுப்பூசி பெற வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யும் உரிமை பெற்றிருந்தாலும் MIQ மற்றும் அதிக அபாயம் கொண்ட எல்லை அமைப்புகளில் செய்யப்பட வேண்டிய பணிகளனைத்தும் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி பெற்றவர்களால் மட்டுமே செய்யப்பட வேண்டும். இது சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் விமானங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கும்.

இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன. உதாரணமாக தடுப்பூசி பெறாத ஒரு நபர் ஒரு அவசர நிலையில் ஒரு இடத்தில் மற்றொரு நபரின் உயிர், சுகாதாரம் அல்லது பாதுகாப்பை பேணவோ அல்லது பாதுகாக்கவோ அல்லது சட்டம் அங்கீகாரம் வழங்கியிருந்தாலோ சட்டத்தின் கீழ் தேவைப்பட்டாலோ அந்த இடத்தில் அவர் நுழைவு பெற்று பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படலாம்.

அதிக அபாயம் கொண்ட எல்லை அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தடுப்பூசி தேவைகள் 

சச்சரவை எவ்வாறு கையாளுவது

உங்களுக்கும் உங்கள் பணியமர்த்துபவருக்கும் தடுப்பூசி பெற்ற ஒருவரால்தான் ஒரு குறிப்பிட்ட பணி செய்யப்பட வேண்டுமா என்பது பற்றிய விவகாரத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் நீங்கள் ஆரம்பகால தீர்வு சேவையை அணுகலாம். இது பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றை சரி செய்ய உதவும் ஒரு கட்டணமில்லா மற்றும் முறைசாரா வழிமுறையை வழங்குகிறது.

ஆரம்பகால தீர்வு சேவை (external link) 

மேலதிக தகவல்

COVID-19 தடுப்பூசி மற்றும் வேலை வாய்ப்பு — வேலை வாய்ப்பு NZ (external link)

Last updated: