முன்கூட்டியே COVID-19 தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பது | Applying for an early COVID-19 vaccination

இலவசமாகவும் தன்னார்வத்தின் அடிப்படையிலும் வழங்கப்படும் COVID-19 தடுப்பூசி நியூசிலாந்திலுள்ள 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது.

எனது தடுப்பூசியை முன்பதிவு செய்யவும் க்கு வருகை தாருங்கள், அல்லது COVID தடுப்பூசி ஹெல்த்லைன் ஐ அழைத்து முன்பதிவு செய்யுங்கள்.

கருணை அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்காக அல்லது தேச முக்கியத்துவம் காரணங்களுக்காக முன்கூட்டியே தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி கண்டறியுங்கள்.

நீங்கள் வேறெந்த காரணத்திற்காகவும் முன்கூட்டியே தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பது இயலாது.

கருணை அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல்

நீங்கள் வெளிநாடுகளுக்கு பின்வரும் காரணங்களுக்காக பயணம் மேற்கொண்டால் நீங்கள் கருணை அடிப்படையில் ஒரு முன்கூட்டிய தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம்:

  • உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்துள்ளவருக்கோ (உதாரணமாக உங்கள் குழந்தை) நியூசிலாந்தில் கிடைக்கப்பெறாத உயிர்காக்கும் மருத்துவ கவனிப்பை அணுக
  • இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நெருங்கிய குடும்ப உறுப்பினரை சென்று பார்க்க
  •  உயிர்காக்கும் கவனிப்பு மற்றும் பாதுகாப்பை உங்களை சார்ந்தவருக்கு வழங்க

நீங்கள் வெளிநாட்டுக்கு 31 ஆகஸ்ட் முன்பு பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் ஆன்லைனில் முன்கூட்டிய தடுப்பூசிக்கு சுகாதார அமைச்சகத்தின் வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

தேசிய முக்கியத்துவம் அடிப்படையின் காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வது

நீங்கள் வெளிநாடுகளுக்கு பின்வரும் காரணங்களுக்காக பயணம் செய்யத் தேவை உள்ளது என்றால் நீங்கள் முன்கூட்டிய தடுப்பூசிக்கு தகுதி பெறலாம்:

  • நியூசிலாந்து தன்னைத்தானே ஆட்சி நிர்வாகம் செய்துகொள்ளும் உரிமையின் பாதுகாப்பையும் பத்திரத்தன்மையையும் பாதுகாக்க
  • நியூசிலாந்தின் கடமைப்பாடுகளின் ஒரு அங்கமாக, வெளிநாட்டு உதவி, சர்வதேச பேரிடர் உதவிப்பணிகள், அல்லது பசிபிக் மற்றும் ஆளுமை நாடுகள் COVID-19 தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு ஆதரவு போன்ற அரசு ஒப்புதல் பெற்ற மனிதநேய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது
  • நியூசிலாந்து சார்பாக சர்வதேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டி பயணம் மேற்கொள்ள
  • தேசிய அளவில் முக்கியமான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட. 

உங்கள் சார்பில் தொடர்புள்ள ஏஜென்சியோ சங்கமோ விண்ணப்பிக்க வேண்டும்.

முன்கூட்டிய தடுப்பூசிக்கான விண்ணப்பங்கள் (external link)

Last updated: