எச்சரிக்கை நிலை 4 உடன் வாழ்வது | Living at Level 4

உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் மருத்துவர் அல்லது கட்டணமில்லாமல் 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள். சோதனைக்கு கட்டணமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனே 111 என்ற எண்ணை அழைக்கவும்.

எச்சரிக்கை நிலை 4 இல் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது:

 • அத்தியாவசிய சொந்த காரணங்களை தவிர வீட்டிலேயே இருங்கள்.
 • உங்கள் குமிழை பிரத்தியேகமாக அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குமிழில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்பது முக்கியமாகும்.
 • அத்தியாவசிய சொந்த காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் மற்ற குமிழ்களில் உள்ளவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 2 மீட்டர் தள்ளி நிற்கவும்.
 • உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு அருகாமையிலுள்ள பூங்காவிற்கு செல்லுங்கள்.
 • பொருட்கள் வாங்குவதற்கு உங்களுக்கு அருகாமையிலுள்ள சூப்பர்மார்க்கெட்டிற்கு செல்லுங்கள்.
 • வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் மற்றும் கல்வி பயிலுங்கள். சில பணியாளர்கள் பணியிடத்திற்கு தொடர்ந்து செல்லலாம் ஆனால் இது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
 • பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் புறப்பாடு முனையங்கள், விமானங்கள், டாக்சிக்கள் அல்லது பகிர்வு சவாரி வண்டிகள், மருத்துவமனைகள் மற்றும் இன்னமும் திறந்துள்ள வணிக மையங்கள் போன்ற இடங்களில் முகமூடி அணியுங்கள். சமூக இடைவெளி சாத்தியமில்லாத போது நீங்கள் முகமூடி அணிவதை பரிந்துரைக்கிறோம்.
 • உங்கள் கைகளை அடிக்கடி கழுவி உலர வையுங்கள். அடிப்படை சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்கவும், உதாரணமாக கைகளை கழுவுதல், முழங்கையினுள்ளே இருமுவது அல்லது தும்முவது மற்றும் மேற்பரப்புகளைஅடிக்கடி சுத்தம் செய்வது போன்று.
 • நீங்கள் எங்கே செல்கிறீர்கள் மற்றும் யாரை சந்திக்கிறீர்கள் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள் இதற்கு NZ COVID டிரேசர் செயலி, COVID-19 டிரேசர் கையேடு அல்லது எழுதிய குறிப்புகளை பயன்படுத்துங்கள். தேவைப்பட்டால் இது விரைவான தொடர்பு தொடர்பு தடமறிதலில் உதவுகிறது.

COVID-19 வைரஸ் மற்றும் அறிகுறிகள் பற்றிய தகவலை கண்டறியுங்கள்

சோதனை பற்றிய தகவலை கண்டறியுங்கள்

ப்ளூட்டூத் கண்காணிப்பு பற்றிய தகவலை கண்டறியுங்கள்

நீங்கள் முன்பதிவு செய்திருந்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

நீங்கள் முன்பதிவு செய்திருந்தால் எச்சரிக்கை நிலை 4-லும் கூட நீங்கள் இன்னமும் தடுப்பூசி பெறலாம். தடுப்பூசி மையங்கள் திறந்திருக்கும். அவை எச்சரிக்கை நிலை 4 கட்டுப்பாடுகளுடன் செயல்படும். நீங்கள் திட்டமிட்டவாறே தடுப்பூசி போட்டுக்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்

முகமூடி அணியுங்கள்

எச்சரிக்கை நிலை 4 இல் பின்வரும் இடங்களில் முகமூடி அணிவது சட்டபூர்வமான தேவையாகும்:

 • பொது போக்குவரத்து மற்றும் புறப்பாடு முனையங்கள், உதாரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்றவை
 • மருத்துவமனை மையங்களுக்கு வருகை தரும் நேரங்களில்
 • வாடிக்கையாளர் தொடர்பு தேவைப்படும் இன்னமும் திறந்துள்ள வர்த்தக அல்லது சேவை மையம். இதில் சூப்பர்மார்கெட்டுகள், மருந்தகங்கள், மற்றும் எரிபொருள் நிலையங்கள் அடங்கும்.

நீங்கள் வீட்டை விட்டு ஒவ்வொரு முறையும் வெளியே செல்லுமுன் முகமூடி அணிவது ஊக்குவிக்கப்படுகிறது.

முகமூடிகளை பற்றிய தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

எச்சரிக்கை நிலை 4-ல் அனுமதிக்கப்பட்ட நடமாட்டம்

கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட காரணங்களைத் தவிர, எச்சரிக்கை நிலை 4-ல் பயணித்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஏதாவது அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக பயணம் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் பயணம் செய்ய வேறு எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால் பயணம் செய்வதற்கான சில சான்றுகளை நீங்கள் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

உங்களுக்கு COVID-19-ன் அறிகுறிகள் இருந்தால் அல்லது COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறீர்கள் என்றால் அல்லது COVID-19 உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றால் - அனுமதிக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் பயணம் செய்யக்கூடாது - மற்றும் நீங்களே உங்களை தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் ஆலோசனைக்காக ஹெல்த்லைனை அழைக்கவும் மற்றும் பரிசோதனை செய்து கொள்ளவும்.

ஆதரவு தேவையா?

பணம், உணவு, உங்கள் மனம் அல்லது உடல்நலம் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம்.

தனிநபர்களுக்கான தகவல் மற்றும் ஆதரவை கண்டறியவும்

வர்த்தகங்ளுக்கான தகவல் மற்றும் ஆதரவை கண்டறியவும்

Last updated: