எச்சரிக்கை நிலை 3 உடன் வாழ்வது | Living at Level 3

உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் மருத்துவர் அல்லது கட்டணமில்லாமல் 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள். சோதனைக்கு கட்டணமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனே 111 என்ற எண்ணை அழைக்கவும்.

எச்சரிக்கை நிலை 3 இல் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது:

  • வீட்டிற்கு வெளியே மற்றவர்களிடமிருந்து 2-மீட்டர் இடைவெளியையும் பணியிடத்தில் 1-மீட்டர் இடைவெளியையும் கடைபிடிக்கவும்.
  • பின்வரும் சூழ்நிலைகளில் முககவசம் அணியவும்:
    • உங்கள் வயது 12 மற்றும் அதற்கு அதிகம் மற்றும் நீங்கள் நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற உட்புற பொது வசதிகள் உள்ளே இருந்தால்.
    • நீங்கள் விருந்தோம்பல் அரங்குகள் அல்லது பொது வசதிகள் வளாகங்களில் பணிபுரியும் வாடிக்கையாளரை எதிர்கொள்ளும் ஊழியர் என்றால்.
    • சமூக விலகல் சாத்தியமில்லை என்றால் (இதுவொரு கட்டாய தேவை இல்லையென்றாலும் இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது).
  • நீங்கள் எங்கே செல்கிறீர்கள் மற்றும் யாரை சந்திக்கிறீர்கள் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். NZ COVID டிரேசர் செயலி, NZ COVID டிரேசர் கையேடு, அல்லது எழுத்து குறிப்புகளை பயன்படுத்தவும்.
  • நோய்வாய்ப்பட்டால் வீட்டிலேயே இருங்கள். பணிக்கோ அல்லது பள்ளிக்கோ செல்லாதீர்கள். நண்பர் உறவினர்களிடமிருந்து விலகியிருங்கள்.
  • COVID-19 இன் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் ஹெல்த்லைனை தொடர்புகொண்டு ஒரு சோதனைக்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு COVID-19 சோதனை செய்யப்பட்டால் உங்கள் முடிவுகள் வரும்வரை நீங்கள் சட்டப்பூர்வமாக வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும்.
  • கேட்டுக்கொள்ளப்பட்டால் உடனடியாக சுய-தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.
  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவி உலர வையுங்கள்.

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:

உங்களுடைய குமிழி

எச்சரிக்கை நிலை 3 இல் நீங்கள் வேலைக்கோ அல்லது பள்ளிக்கோ செல்லவில்லை என்றால் நீங்கள் சட்டப்பூர்வமாக உங்கள் குடும்ப சூழ்நிலையில் பொருந்தியிருக்க வேண்டும்.

உங்கள் குடும்ப குமிழி என்பது நீங்கள் அன்றாடம் அல்லது உடல்ரீதியான தொடர்பு உள்ளவர்களின் தொகுதியை குறிக்கும். எச்சரிக்கை நிலை 3 இல் உங்களுடன் வாழும் மக்கள் மற்றும் தேவைப்பட்டால் நெருங்கிய குடும்பம், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் அல்லது பராமரிப்பாளர்களும் இதில் அடங்குவர். உங்கள் குமிழியை முடிந்தவரை சிறியதாக வைத்திருங்கள்.

உங்கள் குமிழியில் இல்லாத நண்பர்கள், whānau மற்றும் தூரத்து உறவினர்களை நீங்கள் அழைக்க முடியாது.

எச்சரிக்கை நிலை 3 இல் நண்பர்கள் மற்றும் whānau வை சந்தித்தல்

கூட்டங்கள்

10 பேர் கொண்ட கூட்டங்கள் தொடர்ந்து நடக்கலாம் ஆனால் திருமண நிகழ்ச்சிகள், இறுதி சடங்குகள் மற்றும் டங்கிஹங்கா இவற்றிற்கு மட்டும் இது பொருந்தும்.  சமூக இடைவெளி மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகள் போன்றவை சட்டப்பூர்வமாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

எச்சரிக்கை நிலை 3 இல் கூட்டங்கள் பற்றிய மேலும் விவரங்களை பெறுங்கள்

பயணம் மற்றும் நடமாட்டம்

தனிநபர் மற்றும் வர்த்தக ரீதியான நடமாட்டம் எச்சரிக்கை நிலை 3 இல் மற்றும் எச்சரிக்கை நிலை 3 பகுதிகள் மற்றும் மற்ற எச்சரிக்கை நிலை பகுதிகளுக்கு இடையே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது வைரஸ் பரவலை தடுப்பதில் உதவுவதற்காக.

ஒரு சில வர்த்தக பயணங்கள் அனுமதிக்கப்படும்., உதாரணமாக நீங்கள் ஒரு எச்சரிக்கை நிலை 4 வர்த்தகம் அல்லது சேவைக்கு பணி செய்தால்.

ஒரு சில தனிநபர் பயணங்கள் அனுமதிக்கப்படுகின்றன, உதாரணமாக மருத்துவ தேவைகள், அவசர நிலைகள், அபாயக்கட்டம் அல்லது வாழ்வின் இறுதி கட்டத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது பகிரப்பட்ட குழந்தை பராமரிப்பு போன்றவற்றிற்கு மருத்துவ சிகிச்சை அல்லது ஆதரவு சேவை.  

அனுமதிக்கப்படும் காரணங்களுக்காக நீங்கள் பயணம் மேற்கொண்டால் உங்களிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றாவணங்கள் இருப்பதை உறுதிபடுத்துங்கள்.

அனுமதி மறுக்கப்பட்ட காரணத்திற்காக பயணம் மேற்கொண்டால், நீங்கள் விதி விலக்கிற்காக விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் பொருந்தும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

பயணம், நடமாட்டம் மற்றும் விதி விலக்குகளை பற்றி மேலும் விவரங்களை பெறுங்கள்

உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு

எச்சரிக்கை நிலை 3 இல் நீங்கள் உங்கள் உள்ளூர் பகுதியில் சுயமாகவோ உங்கள் குடும்ப குமிழியுடனோ உடற்பயிற்சி செய்யலாம்.

மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் பாதுகாப்பாகவும் வீட்டிற்கு அருகேயும் இருப்பதுதான். உங்களுக்கு விருப்பமான பூங்காவிற்கு அல்லது கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து அருகாமையிலுள்ள பூங்காவிற்கோ அல்லது கடற்கரைக்கோ செல்லுங்கள். மீட்புதவி அல்லது மருத்துவ பராமரிபு தேவைப்படாத குறைந்த ஆபத்துள்ள செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

எச்சரிக்கை நிலை 3 இல் விளையாட்டு மற்றும் பொழுதுப்போக்கு

முக கவசங்கள் மற்றும் முகமூடிகள்

முகமூடிகள் பல்வேறு இடங்களில் கட்டாயமானவை. இதில் பொது போக்குவரத்து, மருத்துவமனைகள், சூப்பர்மார்க்கெட்டுகள் மற்றும் வேறு பல பொது வளாகங்கள் அடங்கும்.

நாம் மேலும் வலியுறுத்துவது என்னவென்றால் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும் போது முகமூடி அணிய வேண்டும் மற்றும் மற்றவர்களிடமிருந்து 2-மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதாகும். குறிப்பாக மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலவில்லை என்றால். உதாரணமாக டேக்-அவேக்களை பிக் அப் செய்யும்போது.

நீங்கள் எப்பொழுதெல்லாம் முகமூடி அணிய வேண்டும் என்பதை பற்றி கண்டறியுங்கள்

உணவு மற்றும் வாழ்தலுக்கான ஆதரவு

பணம், உணவு, உங்கள் மனம் அல்லது உடல்நலம் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம்.

தனிநபர்களுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவு பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வர்த்தகங்களுக்கு கிடைக்கப்பெறும் ஆதரவு பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கல்வி

அலுவலகதிற்கு நேரடியாக செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ள பெற்றோர்களின் 14 வயதுக்கும் குறைந்த குழந்தைகளுக்காக மட்டும் மிக இளவயது கற்றல் மையங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிகள், மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிலையங்கள் திறந்திருக்கும். இந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானது மற்றும் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் சிறிய குமிழிகள் அமைக்கப்படும்.

பொது அரங்கங்கள்

பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் நூலகங்கள், கண்காட்சி சாலைகள், திரையரங்குகள், சிற்றுண்டி சாலைகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சந்தைகள் அடங்கும்.

புதிய முயற்சிகள் அல்லது உங்களையோ அல்லது உங்கள் பாதுகாப்புக்குமிழையோஎவ்வித அபாயத்திற்கும் வெளிப்படுத்த இது நேரமல்ல. உங்கள் உள்ளூர் வட்டாரத்தில் குறைந்த அபாயம் கொண்ட பொழுதுபோக்கு செயல்களை நீங்கள் செய்யலாம்.

பணியிடங்கள் மற்றும் வர்த்தகங்கள்

எச்சரிக்கை நிலை 3 இல், சாத்தியமானால் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். உங்கள் வர்த்தகம் மிக நெருங்கிய தொடர்பை கொண்டதென்றால் அதை நீங்கள் திறக்க கூடாது. மற்ற அனைத்து வணிகங்களும் கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம். இது பின்வருபனவற்றை உள்ளடக்குகிறது:

  • சமூக இடைவெளி தேவைகளை பூர்த்தி செய்தல்
  • கூடுதலான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • பகிரப்படும் மேற்பரப்புகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கிருமிநீக்கம் செய்தல்
  • ஆர்டர், பிக்-அப், மற்றும் பேமெண்ட் நேரங்களில் தொடர்பற்ற வழிமுறைகளை தேர்ந்தெடுத்தல்
  • ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தேவைப்பட்டால் முககவசம் அணிவதை உறுதி செய்தல். 

தங்கள் வளாகத்தில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான வணிகங்கள் மட்டுமே உள்ளன, இந்த வணிகங்கள் என்ன என்பதை அறியவும். வர்த்தகங்கள் மற்ற அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். தங்கள் ஊழியர்களை பாதுகாப்பாகவும் நலமாகவும் வைத்திட வேண்டும் மற்றும் குறைந்தபட்ச பணியமர்த்தல் தரங்களை பூர்த்தி செய்யவேண்டும். சாத்தியமானால் அனைத்து வர்த்தகங்களும் மாற்று செயல்பாட்டு வழிமுறைகளை பயன்படுத்துமாறும் ஊழியர்களுடன் கலந்துரையாடி அபாயங்களையும் அவற்றை நிர்வாகம் செய்யும் வழிகளையும் கண்டறியுமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

வர்த்தகங்கள் மற்றும் சேவைகளுக்கான சட்டபூர்வ பதிவேடு பராமரிப்பு

சில வர்த்தகங்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உங்கள் வருகையை நீங்கள் பதிவு செய்யும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மக்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட வழிமுறையை நீங்கள் பெற்றிருக்க வேண்டும், குறிப்பாக QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் ஆற்றல் இல்லாதவர்களின் வசதிக்கு.

இதில் சிற்றுண்டியகங்கள், உணவகங்கள், குடிமனைகள், கசீனோக்கள், இசை நிகழ்ச்சிகள், முதியோர் இல்லங்கள், மருத்துவமனை வளாகங்கள் (நோயாளிகளை தவிர்த்து), சிகைதிருத்தகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள், நூலகங்கள், நீதிமன்றங்கள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு ஏஜென்சி வளாகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களுடன் கூடிய சமூக சேவை வழங்குனர்கள் ஆகியன அடங்கும்.

நீங்கள் உங்கள் வருகையை பதிவு செய்யும் வழிமுறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: 

  • NZ COVID டிரேசர் செயலி மூலம் ஊழியர்களை ஸ்கேன் செய்ய கேட்பது
  • கைமுறையாக உங்கள் வாடிக்கையாளர் மற்றும் பார்வையாளர் தகவல்களை பதிவு செய்தல்
  • வாடிக்கையாளர் மற்றும் பார்வையாளர்களுக்கு காகித வடிவங்களை வழங்கி அவர்களின் விவரங்களை பூர்த்தி செய்ய கூறி அப்படிவங்களை ஒரு சேகரிப்பு பேட்டியில் இட கூறுதல் 
  • ஸ்வைப்-கார்டு அணுகல் அல்லது முன்பதிவுகள் போன்ற நடப்பிலுள்ள பதிவு-பராமரிப்பு முறைகளை பயன்படுத்துதல்

வாடிக்கையாளர் பதிவுகளை சேகரிக்க சட்டப்பூர்வமாக தேவைப்படவில்லை என்றாலும் வர்த்தகங்கள் QR குறியீடு சுவரொட்டியை காட்சிப்படுத்துவதை தொடர வேண்டும்.

தொடர்பு பதிவேடுகள் தனிநபர் தகவல்கள். அவை தனியுரிமை சட்டம் 2020 இன் கீழ் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படவேண்டும், காண்பிக்கப்படவேண்டும் மற்றும் பாதுகாப்பாகவும் ரகசியத்தன்மை சிதையாமலும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். 

மாற்று பதிவேடு அமைப்புகள் பாதுகாப்பாகவும் ரகசியத்தன்மை சிதையாமலும் இருப்பதற்கு மிக அதிக கவனம் தேவை.

வர்த்தகங்களுக்கான பதிவேடு பராமரிப்பு மற்றும் தொடர்பு கண்காணித்தல் பற்றிய விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

அனைத்து எச்சரிக்கை நிலைகளிலும் அவசரகால சேவைகள்

அனைத்து எச்சரிக்கை நிலைகளிலும் அவசரகால சேவைகள் இயங்கும்

ஏதேனும் ஒரு அவசரநிலை தோன்றினால் வாடிக்கையான அவசரநிலை வழிகாட்டல்களையோ அல்லது அவசரநிலை அதிகாரிகளின் ஆலோசனையையோ பின்பற்றவும். உங்கள் பாதுகாப்பிற்குதான் முன்னுரிமை

நீங்கள் பாதுகாப்பாக இருந்தால் சமூக இடைவெளியை கடைபிடித்தல் அல்லது முககவசம் அணிதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் COVID-19 இன் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை எடுங்கள்.

உங்கள் உயிர் அல்லது உடைமைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்நேரமும் 111 என்ற எண்ணை டயல் செய்து காவல், தீயணைப்பு துறை அல்லது ஆம்புலன்சின் உதவியை கேளுங்கள்.

அவசரநிலையில் என்ன செய்வது என்பதை கண்டறியுங்கள்

Last updated: