எச்சரிக்கை நிலை 2 உடன் வாழ்வது | Living at Level 2

உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் மருத்துவர் அல்லது கட்டணமில்லாமல் 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள். சோதனைக்கு கட்டணமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனே 111 என்ற எண்ணை அழைக்கவும்.

எச்சரிக்கை நிலை 2 இல் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது:

 • வீட்டிற்கு வெளியே மற்றவர்களுடன் 2-மீட்டர் இடைவெளியையும் பணியிடத்தில் மற்றும் 1-மீட்டர் இடைவெளியையும் பராமரியுங்கள்.
 • பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் புறப்பாடு முனையங்கள், விமானங்கள், டாக்சிக்கள் அல்லது பகிர்வு சவாரி வண்டிகள், மருத்துவமனைகள் மற்றும் இன்னமும் திறந்துள்ள வணிக மையங்கள் போன்ற இடங்களில் முகமூடி அணியுங்கள். சமூக இடைவெளி சாத்தியமில்லாத போது நீங்கள் முகமூடி அணிவதை பரிந்துரைக்கிறோம்.
 • உங்கள் கைகளை அடிக்கடி கழுவி உலர வையுங்கள்.
 • உங்களுக்கு ஜலதோஷம் அல்லது ஃப்ளூ அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்ளுங்கள். பயணம் செய்யாதீர்கள் மற்றும் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்லாதீர்கள்.
 • நீங்கள் எங்கே செல்கிறீர்கள் மற்றும் யாரை சந்திக்கிறீர்கள் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். NZ COVID டிரேசர் செயலி, COVID-19 கண்காணிப்பு கையேடு அல்லது எழுத்து குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

COVID-19 வைரஸ் மற்றும் அறிகுறிகள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோதனை பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புகளை கண்காணித்தல் பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முக கவசங்கள் மற்றும் முகமூடிகள்

எச்சரிக்கை நிலை 2 இல் பின்வரும் இடங்களில் முகமூடி அணிவது சட்டபூர்வமான தேவையாகும்:

 • பொது போக்குவரத்து மற்றும் புறப்பாடு முனையங்கள், உதாரணமாக ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்றவை
 • மருத்துவமனை மையங்களுக்கு வருகை தரும் நேரங்களில்
 • வாடிக்கையாளர் தொடர்பு தேவைப்படும் இன்னமும் திறந்துள்ள வர்த்தக அல்லது சேவை மையம். இதில் சூப்பர்மார்கெட்டுகள், மருந்தகங்கள், மற்றும் எரிபொருள் நிலையங்கள் அடங்கும்.

நீங்கள் வீட்டை விட்டு ஒவ்வொரு முறையும் வெளியே செல்லுமுன் முகமூடி அணிவது ஊக்குவிக்கப்படுகிறது.

முக கவசங்கள் மற்றும் முகமூடிகள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

வர்த்தகத்தை பாதுகாப்பாக நடத்துதல்

பொது சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வணிக வளாகங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்படலாம்.

பொது சுகாதார தேவைகள் என்பன பின்வருபனவற்றை உள்ளடக்கும்:

 • ஒரு NZ COVID டிரேசர் செயலி QR குறியீடை காட்சிபடுத்துவது மற்றும் மாற்று தொடர்புகள் கண்காணித்தல் அமைப்புகளை கொண்டிருப்பது; மற்றும்
 • கை கழுவுதல் மற்றும் அடிக்கடி மேற்பரப்புகளை சுத்தப்படுத்துதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை பராமரித்தல், மற்றும்
 • சமூக இடைவெளி வழிகாட்டல்களை கடைபிடித்தல்.

வாடிக்கையாளர்களின் வளாகங்களில் வழங்கப்படும் சேவைகள் – உதாரணமாக அவர்களது வீடு, மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்கும் நெருங்கிய தொடர்பு சேவைகள் இயங்கலாம்.

எந்தவொரு பணியிடமும் இந்த நடவடிக்கைகளுக்கு இணங்க வில்லையென்றால் அது இயங்க முடியாது.

சாத்தியமானால் அனைத்து வர்த்தகங்களும் மாற்று செயல்பாட்டு வழிமுறைகளை பயன்படுத்துமாறும் ஊழியர்களுடன் கலந்துரையாடி அபாயங்களையும் அவற்றை நிர்வாகம் செய்யும் வழிகளையும் கண்டறியுமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

வர்த்தகங்கள் வேறு பல சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஊழியர்களை பாதுகாப்பாகவும் நலமுடனும் வைத்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்ச பணியமர்த்தும் தரங்களை கடைபிடிக்க வேண்டும்.

எச்சரிக்கை நிலை 2 இல் கல்வி

மிக இளவயது கற்றல் மையங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிகள், மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிலையங்கள் அனைத்து வயதினருக்கும் வழக்கம்போல திறந்திருக்கும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானது.

பின்வரும் குழந்தைகள் அல்லது இளவயதினர் வீட்டிலேயே இருக்க வேண்டும்:

 • உடல் நலம் குன்றியவர்கள்
 • COVID-19 அறிகுறிகள் கொண்டவர்கள்
 • சுய-தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள்
 • COVID-19 சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பவர்கள்.

எச்சரிக்கை நிலை 2 இல் பயணம் மற்றும் நடமாட்டம்

நீங்கள் நோய்வாய் பட்டால் வீட்டிலேயே இருங்கள்.

உங்களுக்கு உடல்நலம் நன்றாக இருந்தால் பயணம் செய்யலாம். ஆனால் இதை பாதுகாப்பான முறையில் செய்வதை உறுதிபடுத்துங்கள்.

எச்சரிக்கை நிலை 2 இல் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு

பாதுகாப்பாக செய்ய முடிந்தால் எச்சரிக்கை நிலை 2 இல் நீங்கள் உங்கள் வாடிக்கையான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் நீங்கள் நோய்வாய் பட்டால் வீட்டிலேயே இருங்கள். 

பொது இடங்களில் உடற்பயிற்சி செய்தால் உங்களுக்கு அறிமுகம் இல்லாத மக்களுக்கு இடையே சாத்தியப்பட்டால் 2-மீட்டர் இடைவெளி விடவும்.

நீங்கள் பின்வரும் செயல்களை மேற்கொள்ளலாம்:

 • நடைபயிற்சி, சைக்கிள் சவாரி மற்றும் பொது பாதுகாக்கப்படும் நிலத்தில் வேட்டையாடுதல்
 • ஒரு பொது நீச்சல்குளத்தில் நீந்துதல் ஆனால் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது
 • ஜிம்முக்கு செல்லுதல் ஆனால் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது
 • படகு சவாரி மற்றும் மோட்டார் பொருத்திய நீர்விளையாட்டுகள்

சமூக கூட்டங்கள்

ஒரு சமூக கூட்டம் 100 மக்களுக்கு மிகாமல் ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்பட வேண்டும். 

இது பின்வருபனவற்றை உள்ளடக்குகிறது:

 • உங்கள் இல்லத்திற்கு விருந்தினர்களை வரவேற்பது
 • குடும்ப நிகழ்ச்சிகள்
 • திருமணங்கள்
 • மத சேவைகள்
 • சமூக சங்க மற்றும் விளையாட்டு செயல்பாடுகள்
 • பிறந்தநாள் அல்லது பேச்சிலர் விருந்து போன்ற தனிப்பட்ட கொண்டாட்டங்கள்

இறுதி சடங்குகள் மற்றும் பாரம்பரிய சடங்குகள் மீதான மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு சமூக கூட்டத்தில் சேவை வழங்கும் ஊழியர்கள் இந்த 100 நபர் வரம்பில் சேர்க்கப்படவில்லை. 

மேற்பரப்புகளை சுத்தமாக வைத்துக்க்கொள்ளுங்கள், உங்கள் கைகளை சுத்தப்படுத்துங்கள் மற்றும் எங்கெல்லாம் சாத்தியமோ சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். உங்களுக்கு அறிமுகமில்லாத மக்களுடன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடிய வில்லை என்றால் முகமூடியை அணியுமாறு பரிந்துரைக்கிறோம். 

தேவைப்பட்டால் தொடர்பு கண்காணித்தலை மேற்கொள்ள உதவும் வகையில் இந்த கூட்டத்தை ஒருங்கிணைக்கும் நபர் சட்டப்பூர்வமாக வருகையாளர்களை பதிவு செய்வதை உறுதிபடுத்த வேண்டும் . இது அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர் என்றால் தேவையில்லை, ஆனாலும் இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.

 வெறும் ஒரு கூட்டத்திற்காக ஒரு இடத்தை நீங்கள் வாடகைக்கு எடுத்திருந்தால் கூட்டங்களுக்கான விதிகள் பொருந்தும்.