எச்சரிக்கை நிலை 1 உடன் வாழ்வது | Living at Level 1

எச்சரிக்கை நிலை 1 இல் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது:

  • வைரசை கொல்ல தகுந்த இடைவெளிகளில் கைகளை கழுவி உலர வையுங்கள். குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு சோப் மற்றும் நீரை பயன்படுத்துங்கள். நன்றாக உலர வையுங்கள்.
  • இருமல் மற்றும் தும்மலை மறைத்துக்கொள்ளவும்; உதாரணமாக உங்கள் முழங்கையினுள்ளே இருமுவது அல்லது தும்முவது.
  • உங்களுக்கு ஜலதோஷம் அல்லது ஃப்ளூ அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்ளுங்கள். பயணம் செய்யாதீர்கள் மற்றும் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்லாதீர்கள்.
  • நீங்கள் எங்கே செல்கிறீர்கள் மற்றும் யாரை சந்திக்கிறீர்கள் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். NZ COVID டிரேசர் செயலி, COVID-19 டிரேசர் கையேடு அல்லது எழுதிய குறிப்புகளை பயன்படுத்துங்கள். 

COVID-19 வைரஸ் மற்றும் அறிகுறிகள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சோதனை பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புகளை கண்காணித்தல் பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

முகமூடிகள்

அனைத்து COVID-19 எச்சரிக்கை நிலைகளிலும் முக கவசங்கள் மற்றும் முகமூடிகள் நியூசிலாந்து முழுதும் பொது போக்குவரத்து வாகனங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசங்கள் மற்றும் முகமூடிகள் பயன்பாடு சூப்பர்மார்க்கெட்டுகள் அல்லது கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளி சாத்தியமில்லாத போது ஊக்குவிக்கப்படுகிறது.

முககவசங்கள் மற்றும் முகமூடிகள் பற்றிய தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கூட்டங்கள்

கூட்டங்கள் மீது எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இது இறுதி ஊர்வலங்கள், திருமணங்கள், மத மற்றும் சமூக கூட்டங்கள், விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கும்.

இடைவெளியை பராமரித்தல்

எச்சரிக்கை நிலை 1 இல் COVID-19 கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் செல்லும்போது முன்பின் அறிந்திராத மக்களிடமிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது ஒரு நல்ல யோசனையாகும். இது சமூகத்தில் தொற்றுக்கள் தோன்றும்போது COVID-19 இன் பரவலை குறைக்க உதவுகிறது.

பணி மற்றும் வர்த்தகம்

வர்த்தகங்கள் மற்றும் பணியிடங்கள் வழக்கம்போல செயல்படலாம். ஒவ்வொரு வளாகத்திலும் அவர்கள் NZ COVID டிரேசர் QR குறியீடை காட்சிப்படுத்தி மாற்று தொடர்புகள் கண்காணிப்பு அமைப்புகளை வழங்கவேண்டும்.

பயணம் மற்றும் போக்குவரத்து

தொடர்புகள் கண்காணிப்பிற்கு பொது போக்குவரத்து வாகனங்களில் QR குறியீடுகள் நிறுவப்பட வேண்டும்.

உங்களுக்கு உடல்நலம் குன்றினால் பயணத்திற்கு முன் சோதனை செய்து கொள்வதை பற்றிய அறிவுரை பெற உங்கள் மருத்துவர் அல்லது ஹெல்த்லைனை அழையுங்கள். கேட்டுக்கொள்ளப்பட்டால் வீட்டிலேயே தங்குங்கள் மற்றும் சோதனை செய்துக்கொள்ளுங்கள்.

கல்வி

பள்ளிகள், பாலர் பள்ளி சேவைகள் மற்றும் மூன்றாம் நிலை கல்வி நிலையங்கள் வழக்கம்போல திறக்கலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானது.

சரியான தகவலை பெறுதல்

சில நேரங்களில் மக்களுக்கு தவறான தகவலை வழங்க அல்லது அவர்களை ஏமாற்ற வேண்டுமென்றே தவறான தகவல் பதிபிக்கப்படுகிறது. நாம் ஒன்றிணைந்து வைரசை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில் இது நமக்கு எதிராக வேலை செய்கிறது.

சரியான தகவலை பெற உதவும் ஆலோசனை

எல்லை கட்டுப்பாடுகள்

COVID-19 வெளிநாடுகளில் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. COVID-19 வெளிநாடுகளில் இருந்து வராமலிருக்கும் ஆபத்தை குறைக்க நமது எல்லை கட்டுப்பாட்டு செயல்பாடுகள் அமலில் உள்ளன.

நியூசிலாந்திற்குள் வரும் மக்கள் விதிவிலக்கு பெறாத பட்சத்திலோ அல்லது ஒரு தனிமைப்படுத்தல் தேவையில்லாத பயண ஏற்பாட்டில் பயணிக்காமலிருந்தாலோ ஒரு நிர்வகிக்கப்பட்ட வசதிக்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு விதி விலக்கு வழங்கப்பட்டிருந்தாலும் சுய-தனிமையில் இருக்கவேண்டும்.

தனிமைப்படுத்தல் தேவையில்லாத பயணத்தை பற்றி மேலும் அறியவும்.

நிர்வகிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளிலுள்ள ஊழியர்கள் மற்றும் எல்லையிலுள்ள அதிக-ஆபத்து மிக்க பணிகள் செய்பவர்கள் இவர்களனைவரும் அடிக்கடி COVID-19 சோதனை செய்து கொள்ள வேண்டும்.