சோதனை | Testing

உங்களுக்கு ஜலதோஷம் அல்லது ஃப்ளூ போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் மருத்துவர் அல்லது கட்டணமில்லாமல் 0800 358 5453 என்ற எண்ணில் ஹெல்த்லைனை அழைத்து சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள். சோதனைக்கு கட்டணமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சமூகத்தில் எங்கிருந்தாலும் நாம் வைரசை கண்டறிவது முக்கியம். இதன் அர்த்தம் என்னவென்றால் COVID-19 அறிகுறிகள் உள்ள எவரையும் சோதனை செய்துகொள்ள கேட்கிறோம், நீங்கள் ஒரு நியூசிலாந்து குடிமகனோ, நியூசிலாந்தில் வசிப்பவரோ அல்லது சுற்றுலா பயணியோ யாராக இருந்தாலும்.

COVID-19 க்கு சோதனையும் பராமரிப்பும் இலவசம் மற்றும் நியூசிலாந்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறுகிறது இங்குள்ள செல்லத்தக்க விசா இல்லாதவர்களுக்கும் கூட.

உங்களுக்கு சோதனை முடிவு நேர்மறையாக வந்தாலும் உங்கள் தகவல் நியூசிலாந்து குடியேற்ற துறையுடன் பகிரப்படாது.

சோதனை செய்துகொள்ள உங்களிடம் ஒரு தேசிய சுகாதார குறியீடு (NHI) எண் இருக்கவோ அல்லது நீங்கள் ID யை காட்டவோ தேவையில்லை. ஆனால் உங்கள் சோதனை முடிவுகளை உங்களுக்கு தெரிவிக்க உதவும் வகையில் உங்களை சோதனை செய்யும் மக்களிடம் உங்கள் தொடர்பு எண்ணை பகிரவேண்டும்.

நீங்கள் எங்கு சோதனை செய்து கொள்ளலாம்

நீங்கள் சோதனை செய்து கொள்ளும் இடங்கள் அடிக்கடி மாறலாம். தற்போதைய பட்டியலை பெற சிறந்த இடம் எதுவென்றால் உங்கள் உள்ளூர் மாவட்ட சுகாதார வாரியங்கள் மற்றும் பொது சுகாதார யூனிட்டுகள்

நீங்கள் இந்த தகவலை இங்கே பெறலாம்

வடக்கு தீவு

தெற்கு தீவு

எவ்வாறு சோதனை வேலை செய்கிறது

உங்களுக்கு COVID-19 சோதனை செய்ய உங்களிடமிருந்து ஒரு மாதிரி எடுக்கப்படும்.

மாதிரியை எடுக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உள்ளன. மிக பொதுவான முறை என்னவென்றால் உங்கள் நாசியின் பின்புறத்தை பஞ்சில் ஒற்றி எடுத்தல் (ஸ்வாப்). ஸ்வாப் என்பது ஒரு பஞ்சு உருண்டை ஆனால் இது ஒரு நீள குச்சியில் அமைந்திருக்கும்.

இந்த மாதிரி பகுப்பாய்விற்காக ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. ஆய்வக முடிவுகள் வெளிவர சிறிது காலநேரம் எடுக்கும்.

உங்களுக்கு சோதனை செய்யப்பட்டால் நீங்கள் எப்போது மற்றும் எவ்வாறு முடிவுகளை பெறுவீர்கள் என்று உங்களுக்கு தெரிவிக்கப்படும். உங்கள் சோதனை முடிவுகள் எதிர்மறையானாலும் சரி அல்லது நேர்மறையானாலும் சரி அது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

உங்களுக்கு சோதனை செய்யப்பட்டால் நீங்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு அளிக்கப்படும் ஆலோசனையை நீங்கள் பின்பற்றவேண்டும்.

உங்களுக்கு நேர்மறையாக சோதனை முடிவு வந்தால் என்ன நேரிடும்

உங்களுக்கு நேர்மறையாக சோதனை முடிவு வந்தால் ஒரு சுகாதார அதிகாரி உங்களை அழைத்து இதன் அர்த்தம் என்ன என்று விளக்குவார். இது பின்வருபனவற்றை உள்ளிடுகிறது: 

  • நீங்கள் எத்தனை காலம் தனிமையில் இருக்கவேண்டும் 
  • உங்களுக்கும் உங்கள் குடும்ப தொடர்புகளுக்கான தனிமைப்படுத்தல் ஏற்பாடுகள்
  • சமீபத்தில் நீங்கள் தொடர்பிலிருந்த அனைத்து மக்கள் 

நீங்கள் நோய்வாய் பட்டிருக்கும் காலத்தில் ஒரு அரசாங்க வசதிக்கு செல்ல கேட்டுக்கொள்ள படுவீர்கள். இது குடும்பங்களுக்கு ஆதரவு தருவதையும் வைரஸ் பரவுதலை குறைப்பதற்கும் எளிதாக்குகிறது. இது உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தை COVID-19 இலிருந்து பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.

ஒரு குழந்தைக்கோ அதன் பெற்றோருக்கோ அல்லது பாதுகாவலருக்கோ COVID-19 தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டுமென்றால் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பராமரிப்பில் பாதுகாப்பாக இருக்க நாங்கள் வேலை செய்வோம்.