முகமூடிகள் மற்றும் முககவசங்கள் | Face coverings and masks

முகமூடிகள் COVID-19 இன் பரவலைத் தடுக்க உதவும். ஒருவர் பேசும் போதோ, சிரிக்கும் போதோ, இருமும் போதோ அல்லது தும்மும் போதோ நீர்த்துளிகள் பரவுவதை இது தடுக்கும். இது COVID-19 உள்ள ஆனால் உடல்நலம் நன்றாக இருப்பவர்கள் அல்லது எவ்வித தெளிவான அறிகுறிகளை கொண்டிராதவர்களையும் உள்ளடக்கும்.

எச்சரிக்கை நிலை 1 இல் முககவசங்கள்

நீங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில்

உங்களால் மற்றவர்களிடமிருந்து சமூக விலகலை கடைப்பிடிக்க இயலவில்லை என்றால், உதாரணமாக கூட்ட நெரிசல் மிக்க உட்புற பகுதிகளில், முகமூடி பயன்படுத்துவதை வலியுறுத்துகிறோம்,

நீங்கள் பின்வரும் இடங்களில் சட்டப்பூர்வமாக முகமூடியை அணியவேண்டும்:

 • பொது போக்குவரத்து வாகனங்கள்
 • விமானங்களில்

பணியிடத்தில்

நீங்கள் ஒரு வாகன ஓட்டுனர் என்றால் நீங்கள் பின்வரும் வாகனங்களில் சட்டப்பூர்வமாக முகமூடியை அணியவேண்டும்:

 • டாக்சி அல்லது ரைட்-ஷேர் வாகனம்
 • பொது போக்குவரத்து வாகனங்கள்.

எச்சரிக்கை நிலை 2 இல் முககவசங்கள்

நீங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில்

நீங்கள் பின்வரும் இடங்களில் சட்டப்பூர்வமாக முகமூடியை அணியவேண்டும்:

 • பொது போக்குவரத்து வாகனங்கள், விமானம்/சேவைகளை (இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்ற வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள் உட்பட) மற்றும் டாக்சி அல்லது ரைட்-ஷேர் வாகனம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது
 • மருத்துவமனை அல்லது முதியோர் காப்பகங்களுக்கு செல்லும்போது
 • சூப்பர்மார்கெட், மருந்தகங்கள், ஷாப்பிங் மால்கள், உட்புற சந்தையிடங்கள், டேக்அவே உணவு ஸ்டோர்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் போன்ற பொது அரங்கங்கள் போன்ற சில்லறை வர்த்தகங்களுக்கு உள்ளே
 • நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்கள் உள்ளேயுள்ள பொது இடங்கள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு ஏஜென்சி அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் கொண்ட சேவை வழங்குநர்கள் வளாகங்கள் ஆகியனவற்றிற்கு வருகை தரும்போது

பணியிடத்தில்

நீங்கள் பின்வரும் இடங்களில் சட்டப்பூர்வமாக முகமூடி அணிய வேண்டும்:

 • நீதிமன்ற, தீர்ப்பாய, உள்ளூர் அல்லது மத்திய அரசு ஏஜென்சி அல்லது சமூக சேவை வழங்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்தால்
 • குடியிருப்பு முகவரிகளுக்கு சேவை செய்யும் டெலிவரி ஓட்டுனராக பணிபுரிந்தால்— டெலிவரி ஓட்டுனர்கள் தங்கள் வாகனத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே முககவசம் அணிய வேண்டும்
 • சிற்றுண்டி சாலை, உணவகம், மது கடை, இரவு விடுதி, சூப் கிச்சன் அல்லது வேறெதேனும் உணவு அல்லது மது வர்த்தக வளாகத்தில் வாடிக்கையாளர் நேர்முக சேவையில் பணிபுரிந்தால்
 • ஒரு நெருங்கிய தொடர்பு சேவையகத்தில் பணிபுரிந்தால்— உதாரணமாக, சிகை திருத்த நிலையங்கள் அல்லது அழகு சிகிச்சையகங்கள்
 • ஒரு தள்ளுபடி ஸ்டோரில் பணிபுரிந்தால்— எச்சரிக்கை நிலைகள் 3 மற்றும் 4 இல் செயல்படுபவை உட்பட
 • ஒரு உட்புற பொது வசதி நிலையத்தில் பணிபுரிந்தால் — உதாரணமாக நூலகம், அருங்காட்சியகம் அல்லது ஜிம்— நீச்சல் குளங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம் அணிய தேவையில்லை.
 • டாக்சி, ரைட்-ஷேர் வாகனம், பயணியர் கப்பல், பேருந்து அல்லது டிரெயின் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் ஓட்டுனராக பணிபுரிந்தால்— இதில் பள்ளி பேருந்துகள் மற்றும் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு இடையேயுள்ள பயணியர் கப்பல்கள் அடங்காது.

எச்சரிக்கை நிலை 3 இல் முககவசங்கள்

நீங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில்

நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் உங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடியுங்கள். குறிப்பாக மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலவில்லை என்றால். உதாரணமாக டேக்-அவேக்களை பிக் அப் செய்யும்போது.

நீங்கள் பின்வரும் இடங்களில் சட்டப்பூர்வமாக முகமூடியை அணியவேண்டும்:

 • பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், உதாரணமாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள்
 • விமானங்களில்
 • டாக்சி மற்றும் ரைடு-ஷேர் வாகனங்களில்
 • மருத்துவமனைக்கு செல்லும் போது
 • முதியோர் பாதுகாப்பகங்களுக்கு செல்லும் போது
 • இந்த நிலைகளில் செயல்படும் வர்த்தக அல்லது சேவையகங்களில் நீங்கள் ஒரு வாடிக்கையாளர் அல்லது கிளையண்ட் என்றால், உதாரணமாக சூப்பர்மார்கெட்டுகள், மருந்தகங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள்
 • நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்கள் உள்ளேயுள்ள பொது இடங்கள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு ஏஜென்சி அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் கொண்ட சேவை வழங்குநர்கள் வளாகங்கள் ஆகியனவற்றிற்கு வருகை தரும்போது

பணியிடத்தில்

எச்சரிக்கை நிலை 3 இல் செயல்படும் ஒரு வர்த்தகம் அல்லது சேவை நிலையத்தில் வாடிக்கையாளர் நேர்முக சேவை வழங்குபவராக பணிபுரிந்தால் நீங்கள் சட்டப்பூர்வமாக முககவசம் அணியவேண்டும். பின்வரும் இடங்களில் நீங்கள் பணிபுரிந்தால் முககவசம் அணியவேண்டும்:

 • சூப்பர்மார்க்கெட், பால் பண்ணை, எரிபொருள் நிலையம், உரிமம் வழங்கும் அறக்கட்டளை, மருந்தகம், உணவு வங்கி, சுய-சேவை சலவையகம், வன்பொருளகம், இறைச்சி கடை, மீன் பண்ணை, பச்சை காய்கறியகம், ஷாப்பிங் மால், வங்கி அல்லது நியூசிலாந்து அஞ்சல் அலுவலகம்
 • நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது சமூக சேவை வழங்குனர் ஆகிய வளாகங்களிலுள்ள மக்கள் நேர்முக பகுதிகளில்
 • குடியிருப்பு முகவரிகளுக்கு சேவை செய்யும் டெலிவரி ஓட்டுனராக பணிபுரிந்தால்— நீங்கள் முககவசம் அணிய வேண்டியது வாகனத்தை விட்டு வெளியேறினால் மட்டுமே
 • பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் டாக்சி, ரைடு-ஷேர் வாகனம், பயணி கப்பல், பேருந்து அல்லது டிரெயின் ஆகியனவற்றில் ஓட்டுனராக பணிபுரிந்தால்— பள்ளி பேருந்துகள் மற்றும் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு இடையேயுள்ள பயணியர் கப்பல்கள் என்றால் நீங்கள் முககவசம் அணிய வேண்டியதில்லை.

எச்சரிக்கை நிலை 4 இல் முககவசங்கள்

நீங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில்

நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் உங்கள் வீட்டை விட்டு புறப்படுகையில் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடியுங்கள். குறிப்பாக மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க இயலவில்லை என்றால். உதாரணமாக டேக்-அவேக்களை பிக் அப் செய்யும்போது.

நீங்கள் பின்வரும் இடங்களில் சட்டப்பூர்வமாக முகமூடியை அணியவேண்டும்:

 • பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், உதாரணமாக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள்
 • விமானங்களில்
 • டாக்சி மற்றும் ரைடு-ஷேர் வாகனங்களில்
 • மருத்துவமனைக்கு செல்லும் போது
 • முதியோர் பாதுகாப்பகங்களுக்கு செல்லும் போது
 • இந்த நிலைகளில் செயல்படும் வர்த்தக அல்லது சேவையகங்களில் நீங்கள் ஒரு வாடிக்கையாளர் அல்லது கிளையண்ட் என்றால், உதாரணமாக சூப்பர்மார்கெட்டுகள், மருந்தகங்கள் மற்றும் எரிபொருள் நிலையங்கள்
 • நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்கள் உள்ளேயுள்ள பொது இடங்கள், உள்ளூர் மற்றும் மத்திய அரசு ஏஜென்சி அலுவலகங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை கவுண்டர்கள் கொண்ட சேவை வழங்குநர்கள் வளாகங்கள் ஆகியனவற்றிற்கு வருகை தரும்போது

பணியிடத்தில்

எச்சரிக்கை நிலை 4 இல் செயல்படும் ஒரு வர்த்தகம் அல்லது சேவை நிலையத்தில் வாடிக்கையாளர் நேர்முக சேவை வழங்குபவராக பணிபுரிந்தால் நீங்கள் சட்டப்பூர்வமாக முககவசம் அணியவேண்டும். பின்வரும் இடங்களில் நீங்கள் பணிபுரிந்தால் முககவசம் அணியவேண்டும்:

 • சூப்பர்மார்க்கெட், பால் பண்ணை, எரிபொருள் நிலையம், உரிமம் வழங்கும் அறக்கட்டளை, மருந்தகம், உணவு வங்கி, சுய-சேவை சலவையகம் அல்லது வன்பொருளகம்
 • நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது சமூக சேவை வழங்குனர் ஆகிய வளாகங்களிலுள்ள மக்கள் நேர்முக பகுதிகளில்
 • பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் டாக்சி, ரைடு-ஷேர் வாகனம், பயணி கப்பல், பேருந்து அல்லது டிரெயின் ஆகியனவற்றில் ஓட்டுனராக பணிபுரிந்தால்— பள்ளி பேருந்துகள் மற்றும் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு இடையேயுள்ள பயணியர் கப்பல்கள் என்றால் நீங்கள் முககவசம் அணிய வேண்டியதில்லை.

யார் முககவசம் அணிய தேவையில்லை?

உடல் ஊனமுள்ள அல்லது ஆரோக்கிய குறைபாடு உள்ள ஒரு சில மக்கள் பாதுகாப்பாகவோ வசதியாகவோ முகமூடி அணிய முடியாது என்பது நமக்கு தெரியும். இதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு உணவு, மருந்தகங்கள் மற்றும் வேறு சேவைகளுக்கான உரிமையை அவர்கள் பெற்றுள்ளனர்.

சாத்தியமான இடங்களில் முகமூடி அணிவதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பின்வருபவர்கள் முகமூடி அணிய தேவையில்லை: 

 • 12 வயதிற்கு குறைவான குழந்தைகள்
 • பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்கள்
 • வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு இடையே செல்லும் கப்பல் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துபவர்கள்
 • பயணிகளுக்கு மூடிய இடம் இல்லாத படகு அல்லது கப்பல் போன்ற இடங்களில், உதாரணமாக ஜெட் படகு சவாரிகள்
 • வாடகை அல்லது குழு சவாரிகளின் போது
 • தனியார் விமானங்களில்
 • ஓட்டுனர்கள், பைலட்டுகள், பயணிகள் இடத்திலிருந்து முற்றிலும் தனியாக இருக்கும் அத்தகைய போக்குவரத்து சேவைகளின் சிப்பந்திகள் அல்லது ஊழியர்கள், உதாரணமாக, காக்பிட்டில் உள்ள பைலட்டுகள் அல்லது எஞ்சின் பெட்டியிலுள்ள ரயில் ஓட்டுனர்கள்.

பின்வரும் சூழ்நிலைகளிலும் நீங்கள் முகமூடிகள் அணிய தேவையில்லை:

 • பாதுகாப்பாக இல்லையென்றால்; உதாரணமாக முகமூடி அணிந்தால் ஓட்டுனரால் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க முடியாத சூழ்நிலை
 • ஒரு அவசரகாலம் நேரிட்டால்
 • உங்கள் உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் நோய் அல்லது குறைபாடு இருந்து முகமூடி அணிவது உகந்த செயலல்ல என்றால்
 • உங்கள் முக அடையாளத்தை நிரூபிக்க வேண்டுமென்றால்
 • கேட்கும் திறனற்றவர் அல்லது குறைந்த கேட்கும் திறன் பெற்றவருடன் நீங்கள் உரையாட வேண்டுமென்றால்
 • நீங்கள் மருந்து உட்கொள்ள வேண்டுமென்றால்
 • வாடிக்கையாக அனுமதிக்கப்பட்டால் நீங்கள் உணவு உண்ணவோ பானம் அருந்தவோ தேவைப்படும்போது
 • சட்டப்பூர்வ தேவை இல்லையென்றால்

முகமூடி விதிவிலக்கு அட்டை 

உடல் ஊனமுள்ள அல்லது ஆரோக்கிய குறைபாடு உள்ள ஒரு சில மக்கள் பாதுகாப்பாகவோ வசதியாகவோ முகமூடி அணிய முடியாது என்பது நமக்கு தெரியும். உங்களால் முகமூடி அணிய முடியாதென்றால் உங்களுக்கு ஒரு விதிவிலக்கு அட்டை வழங்கப்படும். தேவைப்பட்டால் விதிவிலக்கு அட்டையை நீங்கள் காட்டலாம்.

நீங்கள் ஒரு அட்டையை மாற்றுதிறனாளிகள் சபை NZ இடமிருந்து அவர்களை 04 801 9100 என்ற எண்ணிலோ அல்லது info@dpa.org.nz என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு கோரலாம்.

முகமூடியை எவ்வாறு அணிவது

 1. உங்கள் முகமூடியை சரிபார்க்கவும். பின்வருபனவற்றை உறுதிபடுத்தவும்:
  • சுத்தமாக உள்ளது
  • உலர்ந்துள்ளது
  • சேதமடையவில்லை.
 2. உங்கள் கைகளை சுத்தப்படுத்துங்கள். முகமூடியை அணிவதற்கு முன் உங்கள் கைகளை கழுவி உலர செய்யுங்கள். ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்:
  • சோப் அல்லது நீர்
  • ஹேன்ட் சானிடைசர் (அதில் குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்).
 3. முகமூடியை மாட்டுங்கள். முகமூடியை உங்கள் மூக்கு மற்றும் வாய் மீது வைத்து நாண்கயிறுகள் அல்லது காது வளையங்கள் மூலம் சுற்றி கட்டுங்கள். உங்கள் முகமூடி:
  • உங்கள் மூக்கு, வாய் மற்றும் தாடையை முழுதுமாக மூட வேண்டும்.
  • உங்கள் முகத்தின் பக்கவாட்டில் வசதியாக ஆனால் பாதுகாப்பாக பொருந்த வேண்டும்
  • சுலபமாக சுவாசிக்க அனுமதிக்க வேண்டும்
 4. உங்கள் கைகளை மீண்டும் சுத்தப்படுத்துங்கள். ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்:
  • சோப் அல்லது நீர்
  • ஹேன்ட் சானிடைசர் (அதில் குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்).

ஒரு முகமூடியை பயன்படுத்தும்போது

ஒரு முகமூடியை அணியும்போது:

 • உங்கள் முகமூடியின் முன்பக்கத்தை தொடுவதை தவிர்க்கவும்
 • உங்கள் முகத்தை தொடுவதை தவிர்க்கவும்
 • உங்கள் முகமூடியை அசைப்பதை தவிர்க்கவும், குறிப்பாக உங்கள் தாடைக்கு கீழே இழுப்பதை தவிர்க்கவும்
 • முகமூடி ஈரமானாலோ, சேதமடைந்தாலோ அல்லது அசுத்தமானாலோ அதை மாற்றுங்கள்.

எவ்வாறு முகமூடியை அகற்றுவது

 1. உங்கள் கைகளை சுத்தப்படுத்துங்கள். உங்கள் கைகளை கழுவி உலர செய்யுங்கள். ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்:
  • சோப் அல்லது நீர்
  • ஹேன்ட் சானிடைசர் (அதில் குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்).
 2. முகமூடியை அகற்றுங்கள். உங்கள் முகமூடியை பின்னந்தலையிலிருந்து அகற்றி உங்கள் முகத்திலிருந்து இழுங்கள். லூப்களை பயன்படுத்துங்கள் அல்லது கட்டை அவிழுங்கள். முகமூடியின் முன்புறத்தை தொடாதீர்கள் மற்றும் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய் இவற்றை தொடாமலிருப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
 3. அகற்றிய முகமூடியை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.
  • துணி முகமூடியை டிட்டர்ஜென்ட் கலந்த வாஷிங் மெஷினில் 60 டிகிரி செல்சியசில் துவைக்கவும். முகமூடியை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் அதை முழுதும் உலர செய்யுங்கள். ஈரமான முகமூடியை பயன்படுத்தாதீர்கள்.
  • ஒற்றை-பயன்பாடு முகமூடிகளை அப்புறப்படுத்தவும். அதை மூடியிட்ட ஒரு குப்பைத்தொட்டியில் போடவும் அல்லது ஒரு மூடிய பையிலிட்டு வெளியே வீசவும். ஒற்றை-பயன்பாடு முகமூடிகளை மீண்டும் பயன்படுத்தவோ கிருமிநீக்கம் செய்ய முயலவோ வேண்டாம்.
 4. உங்கள் கைகளை மீண்டும் சுத்தப்படுத்துங்கள். ஏதேனும் ஒன்றை பயன்படுத்துங்கள்:
  • சோப் அல்லது நீர் ஹேன்ட் சானிடைசர் (அதில் குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் இருக்க வேண்டும்).

Last updated: