COVID-19 வைரஸ் மற்றும் அறிகுறிகள் | The COVID-19 virus and symptoms

COVID-19 என்றால் என்ன

COVID-19 என்பது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாச குழாயை தாக்கும் ஒரு புதிய வகை கொரோனாவைரஸ் ஆகும்.

கொரோனாவைரசுகள் என்பன ஜலதோஷம் போன்ற நோய்களை உருவாக்கும் ஒரு பெரிய பன்முகப்பட்ட குடும்பத்தை சேர்ந்த வைரசுகளாகும்.

COVID-19 அறிகுறிகள்

அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஒரு புதிய அல்லது மோசமாகும் இருமல்
  • குறைந்தது 38°C காய்ச்சல்
  • சுவாச பிரச்சினை
  • தொண்டை எரிச்சல்
  • தும்மல் மற்றும் மூக்கொழுகுதல் 
  • தற்காலிக நுகரும் ஆற்றல் இழப்பு

இந்த அறிகுறிகள் இருந்தாலும் உங்களுக்கு COVID-19 உள்ளது என்று அர்த்தமாகாது. இந்த அறிகுறிகள் அதிகளவில் பொதுவான நோய்களான ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ போன்றவற்றிற்கு ஒத்ததாக இருக்கும்.

சுவாச பிரச்சினை என்பது சாத்தியமான நிமோனியாவின் அறிகுறியாகும் மற்றும் இவற்றிற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.

உங்களுக்கு ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரையோ அல்லது ஹெல்த்லைன் எண் 0800 611 116 யோ அழையுங்கள் மற்றும் சோதனை செய்துகொள்வதை பற்றி ஆலோசனை பெறுங்கள்.

அதிகளவில் காணப்படாத அறிகுறிகள்

சில மக்களுக்கு சமயங்களில் அதிகளவில் காணப்படாத அறிகுறிகளும் 
கொண்டிருப்பார்கள் அதாவது பின்வருபனவற்றை மட்டுமே: 

  • காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • தசை வலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • குழப்பம் மற்றும் எரிச்சல்.

ஒரு மனிதருக்கு தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் வரை பொறுத்து அறிகுறிகள் தென்படலாம். தங்களுக்கு இருப்பது தெரியாமலேயே வைரசை நோய்தொற்று கண்டவர்கள் மற்றவர்களுக்கு பரப்பலாம் – அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 நாட்கள் வரை முன்பிருந்தே.

COVID-19 திரவதுளிகள் மூலம் பரவுகிறது

COVID-19 திரவதுளிகள் மூலம் மனிதருக்கு மனிதர் பரவுகிறது. மக்கள் இந்த வைரசை தங்கள் கண்கள், நாசி அல்லது வாய் வழியே பற்றிக்கொள்ளலாம்.

நோய்தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருமும்போதும் தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வைரஸ் கொண்ட திரவதுளிகளை பரவ செய்யலாம். இந்த திரவதுளிகள் அளவில் பெரிதாக இருப்பதால் காற்றில் இவற்றால் நீண்ட நேரம் தங்க முடியாது. எனவே அவை சுற்றியுள்ள மேற்பரப்புகளில் வீழ்ந்து படிகின்றன.