ப்ளூடூத் கண்காணிப்பை செயல்படுத்தவும் | Turn on Bluetooth tracing

NZ COVID டிரேசர் செயலி ப்ளூடூத் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. ப்ளூடூத் கண்காணிப்பு COVID-19 தொற்று கொண்ட செயலி பயனர் ஒருவருக்கு அருகில் நீங்கள் சென்றால் உங்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பும்.

ப்ளூடூத் கண்காணிப்பு நடப்பிலுள்ள தொடர்பு கண்காணித்தல் வழிமுறைகளுக்கோ NZ COVID டிரேசர் QR குறியீடுகளுக்கோ ஒரு மாற்றீடல்ல.  நீங்கள் இன்னமும் QR குறியீடுகளைத்தான் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க பயன்படுத்த வேண்டும். ப்ளூடூத் கண்காணிப்பு என்பது ஒரு கூடுதல் கருவி – இது நாம் அருகிலிருந்த மக்களை கண்காணிக்க உதவுகிறது.

இது எவ்வாறு வேலை செய்கிறது

நீங்கள் ப்ளூடூத்தை செயல்படுத்தியவுடன் இது ஒரு தனிநபர் மற்றும் பாதுகாப்பு சீரற்ற ID குறியீடை அனுப்புவதன் மூலம் வேலை செய்கிறது. இது உங்கள் போன் அருகிலுள்ள மற்ற போன்களுக்கு டிஜிட்டல் வணக்கம் கூறுவது போன்றதற்கு சமம். ப்ளூடூத் கண்காணிப்பு செயல்பாடு எத்தனை அருகில் அந்த நபர் இருந்தார் மற்றும் எத்தனை நேரத்திற்கு என்பனவற்றை பதிவு செய்கிறது. நீங்கள் தொடர்பில் வரும் போன்களும் ப்ளூடூத் கண்காணிப்பு அம்சத்தை செயல்படுத்த வேண்டும்.

இதன் அர்த்தம் என்னவென்றால் COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால் அவர் கடந்த 14 நாட்களில் அவர் போன் அனுப்பிய அனைத்து சீரற்ற IDக்களை கொண்ட அனாமதேய அறிவிப்பை அனுப்பலாம். உங்கள் போன் இந்த IDக்களில் ஏதேனும் ஒன்றை அடையாளம் கண்டு உங்களுக்கு தொற்று ஏற்படும் அளவு நீங்கள் அருகாமையிலும் நீண்ட நேரமும் இருந்திருந்தால் அதன் அபாயம் பற்றி உங்களுக்கு ஒரு எச்சரிக்கை வரும். இந்த எச்சரிக்கை உங்களையும் உங்கள் கூட்டு குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்தும்.

இது எவ்வாறு வேலை செய்கிறது என்று பார்க்க எங்கள் ப்ளூடூத் கண்காணிப்பு வீடியோவை பார்க்கவும் (external link)

இதை எவ்வாறு செயல்படுத்துவது

பெரும்பாலான போன்கள் இந்த செயலியை தாமாகவே புதுப்பிக்கும். நீங்கள் ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோர் மூலம் நீங்களே இதை புதுப்பிக்கும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

உங்களுக்கு புதுப்பித்த பதிப்பு கிடைத்தவுடன் நீங்கள் ப்ளூடூத் கண்காணிப்பை செயல்படுத்த வேண்டுமா என்று உங்கள் செயலி உங்களிடம் கேட்கும். நீங்கள் இதை செயல்படுத்தியவுடன் அது உங்கள் செயலி மூடப்பட்ட நிலையிலும் செயல்படும்.

ப்ளூடூத் கண்காணிப்பு எவ்வித மொபைல் டேட்டாவையும் பயன்படுத்தாது மற்றும் உங்கள் பேட்டரியை அது தீர்க்காது ஏனெனில் அது ப்ளூடூத் லோ எனர்ஜியை பயன்படுத்துகிறது.

உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது

நீங்கள் ப்ளூடூத் கண்காணிப்பை செயல்படுத்தியவுடன் உங்கள் தனியுரிமை எப்போதும் பாதுகாக்கப்படுகிறது – இதனால் உங்கள் இடத்தையோ பெயரையோ அல்லது உங்களைப்பற்றிய வேறெந்த விவரத்தையும் பகிரமுடியாது. ப்ளூடூத் கண்காணிப்பு நீங்கள் யாருடைய தொடர்பிற்குள் வந்தீர்கள் மற்றும் எங்கிருந்தீர்கள் என்ற விவரங்களை பதிவு செய்யாது.

இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் ஒரு COVID-19 நோய் தொற்று நேர்மறையான முடிவு உள்ளவரின் அருகாமையிலிருந்து எச்சரிக்கையை பெற்றால் அந்த எச்சரிக்கை வந்தது உங்களை தவிர அது வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் செயலி துணை கொண்டு சேகரிக்கும் அனைத்து தொடர்பு கண்காணித்தல் தகவலும் உங்கள் போனில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் எந்த தகவலை பகிர போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பமாகும்.