எவ்வாறு தொடர்புகளை கண்காணித்தல் செயல்படுகிறது | How contact tracing works

எவ்வாறு தொடர்புகளை கண்காணித்தல் உதவுகிறது

தொடர்புகளை கண்காணித்தல் என்பது Covid-19 ஆல் சாத்தியமாக பாதிக்கப்பட்ட ஒருவரை கண்டறிந்து தொடர்பு கொள்ளும் வழிமுறையாகும்.

ஒருவருக்கு COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக வந்தால் சுகாதார அமைச்சகம் மற்றும் மாவட்ட சுகாதார வாரியங்கள் அவருடன் யார் யார் தொடர்பிலிருந்தார்கள் மற்றும் வேறு யாருக்கெல்லாம் நோய் தொற்று ஏற்படலாம் என்று கண்டறிய பல்வேறு உபாயங்களை கையாளுகின்றனர்.

எந்தளவு நாம் விரைந்து தொடர்புகளை கண்காணிக்கிறோமோ அத்தனை விரைவில் நம்மால் Covid-19 இன் பரவலை தடுக்க இயலும்.

பரவலை தடுக்க உங்கள் நடமாட்டங்களை கண்காணிக்குமாறு பரிந்துரைக்கிறோம். இது பின்வருபனவற்றையும் உள்ளடக்கும்:

 • நீங்கள் எங்கு சென்றீர்கள்.
 • நீங்கள் எப்போது சென்றீர்கள்.
 • நீங்கள் யாரை சந்தித்தீர்கள்.

உங்கள் நடமாட்டங்களை எவ்வாறு கண்காணிப்பது

உங்கள் நடமாட்டங்களை பின்வரும் வழிகளில் கண்காணிக்கலாம்:

 • ஒரு செயலியை பயன்படுத்தி
 • ஒரு நாட்குறிப்பை பயன்படுத்தி
 • ஒரு பட்டியலை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பது, அல்லது
 • தேதி/நேரம் பதிவுடன் நீங்கள் சென்று வந்த இடங்களை புகைப்படம் எடுத்தல்.

உங்களால் இயன்றால் NZ COVID டிரேசர் செயலி அல்லது கையேட்டை பயன்படுத்துங்கள் அல்லது உங்களுக்கு எந்த முறை வசதியாக உள்ளதோ அதை பயன்படுத்துங்கள். இந்த வழிமுறையை பயன்படுத்த உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை ஊக்கப்படுத்துங்கள்.

NZ COVID டிரேசர் செயலி

சுகாதார அமைச்சகத்தின் கண்காணிக்கும் செயலியான ‘NZ COVID டிரேசர்’ ஒரு டிஜிட்டல் நாட்குறிப்பை உருவாக்க உங்களுக்கு உதவுகிறது.

இதை பயன்படுத்தி நீங்கள்:

 • பங்கேற்கும் வர்த்தகங்களில் அதிகாரபூர்வ QR குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம்
 • QR குறியீடு சுவரொட்டி இல்லாத இடங்களின் உள்ளீடு விவரங்களை நீங்களே சுயமாக சேர்க்கலாம்.

உங்கள் தனியுரிமையையும் தனிநபர் விவரங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்திற்கு நீங்கள் வழங்கும் எந்த தகவலும் (அனாமதேய புள்ளிவிவர தகவலை தவிர) நேரடியாக பொது சுகாதார செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஏஜென்சிகளை தவிர மற்றும் இந்த தகவல் COVID-19 இன் போது பொது சுகாதார தேவைகளுக்கு பகிரப்படுவது அவசியம் என்ற சூழ்நிலையை தவிர மற்ற எந்த அரசு ஏஜென்சிகளுடன் பகிரப்படாது. இது ஒருபோதும் சட்ட அமலாக்க நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாது.

பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன் NZ COVID-19 டிரேசர் செயலி மிக குறைந்த அளவிலான டேட்டாவை மட்டுமே பயன்படுத்துகிறது. டேட்டா பயன்பாட்டை பற்றி உங்களுக்கு கவலையாக இருந்தால் நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்யுமுன் நீங்கள் ஒரு WiFi தொடர்பிற்காக காத்திருக்கலாம்.

இந்த செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

NZ COVID டிரேசர் செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யவும் (external link)

NZ COVID டிரேசர் செயலியை கூகிள் பிளேயிலிருந்து பதிவிறக்கம் செய்யவும் (external link)

NZ COVID டிரேசர் செயலியை பற்றி மேலும் அறிக (external link)

NZ COVID டிரேசர் கையேடு

NZ COVID டிரேசர் செயலியை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்ற விவரத்தை புத்தக வடிவில் பதிவு செய்ய நீங்கள் NZ COVID டிரேசர் கையேட்டை பயன்படுத்தலாம். ஒவ்வொரு கையேட்டிலும் ஒரு முழு மாத பயன்பாட்டிற்காக 30 பக்கங்கள் உள்ளன.

இந்த கையேட்டை நீங்கள் பயன்படுத்தினால் நாங்கள் பின்வருவனவற்றை பரிந்துரைக்கின்றோம்:

 • நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் உங்கள் நடமாட்டங்களை தவறாமல் பதிவு செய்ய இந்த கையேட்டை உடன் எடுத்து செல்லுங்கள்.
 • கடைகள் போன்ற இடங்களுக்கு செல்லுகையில் தொடர்புகளை கண்காணித்தல் பதிவேடுகளில் தொடர்ந்து கையொப்பமிடுங்கள்.

கையேடுகளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்யுங்கள்

உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் நிரப்பப்படாத பக்கங்களை அச்சடிக்க உங்கள் பிரிண்டர் அமைப்புகளை மாற்ற வேண்டியிருக்கும்.

NZ COVID டிரேசர் கையேடு, 36 பக்கங்கள் A4 [PDF, 683 KB]

கையேட்டை ஆர்டர் செய்யவும்

கையேடுகளை 10 எண்ணிக்கைகள் கொண்ட தொகுதிகளாக ஆர்டர் செய்யலாம். நீங்கள் உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவோ உங்கள் சமூகத்தில் விநியோகம் செய்யவோ பிரதிகளை ஆர்டர் செய்யலாம். ஆர்டர்களுக்கு கட்டணம் கிடையாது மற்றும் 2-3 வாரங்கள் தேவைப்படலாம்.

உங்கள் பெயர், முகவரி மற்றும் தேவைப்படும் கையேடுகளின் எண்ணிக்கை போன்ற விவரங்களை Covid19Response@dpmc.govt.nz என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

தொடர்புகளை கண்காணித்தலை பற்றிய மேலும் விவரங்கள்

தொடர்புகளை கண்காணித்தல் பற்றிய மேலும் விவரங்களை சுகாதார துறையிடமிருந்து பெறலாம்.

தொடர்புகளை கண்காணித்தல், நெருங்கிய தொடர்புகள் மற்றும் திட்டமிடாத தொடர்புகளை பற்றிய விரிவான விளக்கம் (external link)