வர்த்தகங்களுக்கான நிதி ஆதரவு | Financial support for businesses

COVID-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்கான நிதி ஆதரவு

வொர்க் அன்ட் இன்கம் மூலம் பல்வேறு வித வர்த்தக ஆதரவு கிடைக்கப்பெறுகிறது.

  • குறுகிய-கால பணிக்கு வராமை தொகை (external link) - COVID-19 சோதனை முடிவுகளுக்கு காத்திருக்கும் வேளையில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களை கொண்ட வர்த்தகங்களுக்கு COVID-19 குறுகிய கால பணிக்கு வராமை தொகை கிடைக்கிறது. இதில் சுய-தொழில் செய்யும் மக்களும் அடங்குவர்.
  • விடுப்பு ஆதரவு திட்டம் (external link) - விடுப்பு ஆதரவு திட்டமானது சுய-தொழில் செய்யும் மக்கள் உள்ளிட்ட வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத மற்றும் சில மருத்துவ சூழ்நிலைகளை எதிர் கொள்ளும் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு கிடைக்கிறது. உதாரணமாக அவர்கள் COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 14 நாட்களுக்கு சுய-தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட ‘நெருங்கிய தொடர்பாக’ இருப்பவர்கள்.
  • மறுமலர்ச்சி ஆதரவு தொகை (external link) - உள்நாட்டு வருவாய் மறுமலர்ச்சி ஆதரவு தொகை நாடு முழுவதுமுள்ள எச்சரிக்கை நிலை அதிகரிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.

வொர்க் அன்ட் இன்கம்மின் கூடுதல் ஆதரவு

  • வொர்க் அன்ட் இன்கம் வலைத்தளம், 0800 559 009 என்ற எண் கொண்ட தொடர்பு மையம் மற்றும் MyMSD ஆகியவற்றின் மூலம் உதவி கிடைக்கிறது.
  • பணி மற்றும் வருமான சேவை மையங்கள் எச்சரிக்கை நிலை 1 மற்றும் 2 இல் திறந்துள்ளன மற்றும் எச்சரிக்கை நிலை 3 மற்றும் 4 இல் மூடியுள்ளன.
  • எச்சரிக்கை நிலைகள் 3 மற்றும் 4 இன் போது முன்பதிவுகள் தொலைபேசி மூலம் ஒரு திட்டமிட்ட நேரத்தில் நடைபெறும். எச்சரிக்கை நிலைகள் 1 மற்றும் 2 இன் போது நடத்தப்பட்ட முன்பதிவுகள் வழக்கம்போல தொடரும்.
  • பணி மற்றும் வருமானத்திலிருந்து தொகைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
  • பணி மற்றும் வருமான வலைத்தளம் (external link) என்ன வகை தொகை கிடைக்கப்பெறுகிறது என்பதை சுருக்கமாக காட்டுகிறது. இந்த தொகைகள் சுய-வேலை பார்க்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறுகிறது.